twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலக்க வரும் லகுட பாண்டி! தடை பல கடந்து ஒரு வழியாக 8ம் தேதி ரிலீஸ் ஆகிறான்இம்சை அரசன் 23ம் புலிகேசி.லகுடபாண்டி என்ற அட்டகாச கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளஇம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். படம்ஆரம்பித்து ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நிேரத்தில்வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையேசிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.படப்பிடிப்பின் பாதியிலேயே வடிவேலு வெளியேற, ஷங்கர்(அவர்தான் தயாரிப்பாளர்) தலையிட்டு வடிவேலுவைசமாதானப்படுத்தினார்.அதன் பின்னர் படம் படு வேகமாக வளர்ந்து முடிந்தது.அப்புறம் வந்ததுதான் பெரிய பஞ்சாயத்து. யானை,குதிரைகளை வைத்துப் படம் எடுத்துள்ளதால் பிராணிகள் நலவாரியத்தின் ஆட்சேபனை இல்லை சான்றிதழை வாங்கிவந்தால்தான் தணிக்கை சான்றிதழ் தருவோம் என்று கூறிவிட்டது தணிக்கை வாரியம்.ஆனால் பிராணிகள் நல வாரியமோ, அப்படி ஒரு சான்றிதழைநாங்கள் இப்போது தருவதில்லை என்று கூறவே, ஷங்கர்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்படியும் விடிவுபிறக்காமல் இம்சைக்கு சிக்கல் தொடர்ந்தது.இதையடுத்து முதல்வர் கருணாநிதியை அணுகிய ஷங்கர் தரப்புஅவரது உதவியினால் படத்தை ரிலீஸ் செய்கிறது.இப்படி தடைகளை கடந்து ஒரு வழியாக இம்மைசக்குவிமோச்சனம் பிறந்தது. 8ம் தேதி உலகம் முழுவதையும்சிரிப்பலையில் குலுங்க வைக்க வருகிறான் இம்சை அரசன்.வடிவேலுவுக்கு இதில் இரட்டை வேடம், இரண்டு ஜோடிகளும்இருக்கிறார்கள்.இதுதவிர அவரது அந்தப்புர ராணிகளின் எண்ணிக்கையும்ஏராளமாம்.வடிவேலுவின் தந்தையாக நாகேஷும், அம்மாவாகமனோரமாவும் அசத்தியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகுதயாரிக்கப்பட்ட முழு நீள வரலாற்றுப் படம் என்ற பெருமையும்இம்சைக்குக் கிடைத்துள்ளது.மொத்தம் 120 பிரிண்டுகள் போட்டுள்ளனராம். உலகெங்கும்ஒரே நேரத்தில் இம்சையைத் திரைக்குக் கொண்டு வருகிறார்ஷங்கர்.சென்னையில் மட்டும் 9 தியேட்டர்களில் போட்டுக்கலக்குகிறார்கள்.மதுரை பாஷையில் பேசும் மன்னராக நடிக்கும் வடிவேலுவின்அதிர்வேட்டுக் காமடியை ரசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்குஇம்சை அரசன் பெரும் விருந்தாக அமையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.படத்தைப் பார்த்து வயிறு வலித்துப் போன வினியோகஸ்தர்கள் ஷங்கர் சொன்ன ரேட்டுக்கு படத்தை வாங்கிச்சென்றிருக்கிறார்கள். இதனால் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

    By Staff
    |
    தடை பல கடந்து ஒரு வழியாக 8ம் தேதி ரிலீஸ் ஆகிறான்இம்சை அரசன் 23ம் புலிகேசி.

    லகுடபாண்டி என்ற அட்டகாச கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளஇம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். படம்ஆரம்பித்து ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நிேரத்தில்வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையேசிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    படப்பிடிப்பின் பாதியிலேயே வடிவேலு வெளியேற, ஷங்கர்(அவர்தான் தயாரிப்பாளர்) தலையிட்டு வடிவேலுவைசமாதானப்படுத்தினார்.

    அதன் பின்னர் படம் படு வேகமாக வளர்ந்து முடிந்தது.அப்புறம் வந்ததுதான் பெரிய பஞ்சாயத்து. யானை,குதிரைகளை வைத்துப் படம் எடுத்துள்ளதால் பிராணிகள் நலவாரியத்தின் ஆட்சேபனை இல்லை சான்றிதழை வாங்கிவந்தால்தான் தணிக்கை சான்றிதழ் தருவோம் என்று கூறிவிட்டது தணிக்கை வாரியம்.

    ஆனால் பிராணிகள் நல வாரியமோ, அப்படி ஒரு சான்றிதழைநாங்கள் இப்போது தருவதில்லை என்று கூறவே, ஷங்கர்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்படியும் விடிவுபிறக்காமல் இம்சைக்கு சிக்கல் தொடர்ந்தது.

    இதையடுத்து முதல்வர் கருணாநிதியை அணுகிய ஷங்கர் தரப்புஅவரது உதவியினால் படத்தை ரிலீஸ் செய்கிறது.

    இப்படி தடைகளை கடந்து ஒரு வழியாக இம்மைசக்குவிமோச்சனம் பிறந்தது. 8ம் தேதி உலகம் முழுவதையும்சிரிப்பலையில் குலுங்க வைக்க வருகிறான் இம்சை அரசன்.வடிவேலுவுக்கு இதில் இரட்டை வேடம், இரண்டு ஜோடிகளும்இருக்கிறார்கள்.

    இதுதவிர அவரது அந்தப்புர ராணிகளின் எண்ணிக்கையும்ஏராளமாம்.

    வடிவேலுவின் தந்தையாக நாகேஷும், அம்மாவாகமனோரமாவும் அசத்தியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகுதயாரிக்கப்பட்ட முழு நீள வரலாற்றுப் படம் என்ற பெருமையும்இம்சைக்குக் கிடைத்துள்ளது.

    மொத்தம் 120 பிரிண்டுகள் போட்டுள்ளனராம். உலகெங்கும்ஒரே நேரத்தில் இம்சையைத் திரைக்குக் கொண்டு வருகிறார்ஷங்கர்.

    சென்னையில் மட்டும் 9 தியேட்டர்களில் போட்டுக்கலக்குகிறார்கள்.

    மதுரை பாஷையில் பேசும் மன்னராக நடிக்கும் வடிவேலுவின்அதிர்வேட்டுக் காமடியை ரசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்குஇம்சை அரசன் பெரும் விருந்தாக அமையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தைப் பார்த்து வயிறு வலித்துப் போன வினியோகஸ்தர்கள் ஷங்கர் சொன்ன ரேட்டுக்கு படத்தை வாங்கிச்சென்றிருக்கிறார்கள். இதனால் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X