’எனக்கு எண்டே கிடையாது’.. வைகைப்புயல் வடிவேலுவின் 61வது பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDVadivelu

சென்னை: வைகைப் புயல் வடிவேலுவின் 61வது பிறந்தநாள் இன்று சமூக வலைதளங்களில் தமிழ் சினிமா ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Recommended Video

பாட்டு பாடிய வடிவேலு VaigaiPuyal Vadivelu Ultimate fun speech | Lyca Productions

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 4 ஆண்டுகளுக்கு பிறகு விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் நடிகர் வடிவேலுவுக்கு ரொம்ப ஸ்பெஷலாகவே இருக்கும்.

சமூக வலைதளங்களில் #HBDVadivelu என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

வடிவேலு 61

வடிவேலு 61

1960ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி மதுரையில் பிறந்தவர் நம்ம வைகைப்புயல் வடிவேலு. டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் சைக்கிள் ஓட்டும் நபராக சாதாரண ஒரு வேடத்தில் சினிமாவில் 1988ம் ஆண்டு அறிமுகமான வடிவேலு இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கவுண்டமணி உடன் இணைந்து

கவுண்டமணி உடன் இணைந்து

தமிழ் சினிமாவில் 80களில் நகைச்சுவையில் கலக்கி வந்த கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற லெஜண்டரி காமெடி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நகைச்சுவை செய்து அசத்திய வடிவேலு தனியாக ஒரு காமெடி சாம்ராஜ்யத்தை அமைக்கும் அளவுக்கு தன்னிகரில்லாத தலைவனாக உயர்ந்தார்.

ஷங்கர் படத்தில்

ஷங்கர் படத்தில்

இயக்குநர் ஷங்கரின் அறிமுக படமான ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் கலக்கிய நிலையில், ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவான காதலன் திரைப்படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து நடித்த வடிவேலு தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் முதல்வன் படத்திலும் நடித்திருப்பார். ஷங்கர் தயாரிப்பில் வெளியான இம்சை அரசன் படத்தில் ஹீரோவாக அதகளம் செய்திருந்தார். ஆனால், அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 4 ஆண்டுகள் படங்களில் நடிக்க முடியாத நிலையும் உருவானது.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்

நடிகர் வடிவேலு ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு பல கதாபாத்திரங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து கலக்கி உள்ளார். நாய்சேகர், வக்கீல் வண்டுமுருகன், சங்கிமங்கி, டெலக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா, இசக்கி, படித்துறை பாண்டி, முருகேசா, ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு ஏகப்பட்ட பெயர்கள் மக்கள் மனங்களில் பதிந்துள்ளன.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

மற்ற நடிகர்களுக்கே சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் போட்டு ரசிகர்கள் தெறிக்க விடும் நிலையில், ஒட்டுமொத்த நெட்டிசன்களின் மீம் கடவுளாக இருக்கும் வடிவேலுவின் பிறந்தநாளை சும்மா விட்டு விடுவார்களா? #HBDVadivelu என்ற ஹாஷ்டேக்கை போட்டு வாழ்த்து மழையில் வடிவேலுவை நனைய வைத்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

தளபதி விஜய் மற்றும் வடிவேலு காம்பினேஷனில் ஏகப்பட்ட ஹிட் படங்கள் வெளியாகி உள்ளன. வசீகரா, மதுர, சச்சின், காவலன், வில்லு, மெர்சல் என இன்று வரைக்கும் இவர்கள் காம்பினேஷனில் வெளியான அத்தனை படங்களுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் வடிவேலுவுக்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

எனக்கு எண்டே கிடையாது

எனக்கு எண்டே கிடையாது

"டேய்.. எண்ட் கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. எனக்கு எண்டே கிடையாது" என தலைநகரம் படத்தில் சொன்னது போலவே தடைகளை தகர்த்து எறிந்து மீண்டும் சிங்கம் களத்துல எறங்கிடுச்சு டோய் என ரசிகர்கள் இப்பவே உசுப்பேத்த ஆரம்பித்து விட்டனர். மீண்டும் வடிவேலுவிடம் ரசிகர்கள் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வார் என நாமும் நம்புவோம். வாழ்த்துக்கள் வடிவேலு சார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X