வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாள்.. வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: வடிவேலு கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய மூன்று படங்களில் மாமன்னன் படம் மெகா ஹிட்டாகி; வடிவேலுவை இன்னொரு பரிமாணத்தில் காண்பித்தது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

நகைச்சுவை செய்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதிலும் பிறரது மனம் நோகாதபடி காமெடி செய்வது உச்சக்கட்ட கலை. அந்தக் கலை வடிவேலுவுக்கு பிறப்பிலேயே வந்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அடுத்தவரை உருவ கேலி செய்தோ, அடுத்தவரின் மனம் நோகும்படியோ அவர் காமெடி செய்ததில்லை. பெரும்பாலும் தன்னுடைய காமெடிகளில் தன்னைத்தானே பகடி செய்துகொள்வார். அதன் காரணமாக அசுரத்தனமாக வளர்ச்சியடைந்தார்.

vadivelu birthday tamil cinema kollywood

மீம்ஸுக்கு சோர்ஸ்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த வடிவேலு அரசியல் மேடையில் ஏறினார். அதன் காரணமாக அவரது கிராஃப் சரசரவென்று கீழே இறங்கியது. ஒருகட்டத்தில் அவரை சினிமாவிலிருந்து ஒதுக்க செய்தது. இதன் காரணமாக வடிவேலு இனி அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காதபடி சமூக வலைதளங்களில் உலாவும் மீம்ஸ்களில் வடிவேலு இன்னொரு வெர்ஷனாக வந்தார். எந்த மீமை எடுத்தாலும் அதற்கு வடிவேலு சோர்ஸாக இருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: இருந்தாலும் வடிவேலுவை சுற்றியிருந்த பஞ்சாயத்துக்கள் மட்டும் தீர்ந்தபாடில்லை. இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பஞ்சாயத்து பெரும் தலை வலியாக அவருக்கு மாறியது. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டதை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு நடிக்க வந்திருக்கிறார் என்ற ஆர்வத்துடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் வடிவேலுவின் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

புதிய பரிமாணம்: அதனையடுத்து வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் அவரை புதிய பரிமாணத்தில் காட்டியது. நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால் என அனைத்திலும் காமெடி ஊறிப்போன கலைஞனை இயக்குநர் மாரி செல்வராஜ் சென்ட்டிமெண்ட்டாகவும், சூழ்நிலை கைதியாகவும் காண்பித்திருந்தார். அதனை வடிவேலுவும் மிகச்சிறப்பாக செய்திருந்தார். மாமன்னன் படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்து பலரும் பெரிய ஆச்சரியப்பட்டார்கள்.

அடுத்த படம்: மாமன்னன் படத்துக்கு பிறகு வடிவேலு நடித்த சந்திரமுகி 2 படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. ஆனால் சந்திரமுகி 1 ஹிட்டானதற்கு வடிவேலுவின் காமெடி பெரிய துணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த கிரி, வின்னர் உள்ளிட்ட படங்கள் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்டடித்தவை என்பது கவனிக்கத்தக்கது.

சொத்து மதிப்பு: இந்நிலையில் இன்று வடிவேலு தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவரும் சூழலில் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அவருக்கு மொத்தம் 150 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். மதுரையில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அவர் அங்கு சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார். மேலும் சென்னையில் இரண்டு பங்களாக்கள் இருக்கின்றனவாம். அதேபோல் ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். அதேபோல் தான் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X