சிம்பு படத்தில் நடித்துள்ள வடிவேலுவின் தம்பி... எந்தப் படம் தெரியுமா?

சென்னை: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் வடிவேலு.

லைக்கா நிறுவனத்திற்காக மட்டுமே ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த சகோதரர் ஒருவர் யூடியூபில் கொடுத்த பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகி உள்ளது.

மதுரை வட்டார வழக்கு

மதுரை வட்டார வழக்கு

சினிமாவில் மதுரை வட்டார வழக்கை பிரபலப்படுத்தியவர் நடிகர் வடிவேலு. தேவர் மகன் படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் சிவாஜி கணேசனே என்னை விட இவன் சிறப்பாக மதுரை வட்டாரம் பேசுகிறான் என்று கமலிடம் வடிவேலுவை பற்றி பாராட்டினாராம். சமீபத்தில் கூட விருமன் படத்தின் புரோமோஷனில், நமக்காக வடிவேலு சார் மதுரை வட்டார வழக்கை கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பேசியிருந்தார்.

மதுரை அல்ல சிவகங்கை

மதுரை அல்ல சிவகங்கை

அப்படிப்பட்ட வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை கிடையாதாம், சிவகங்கையாம். அவர்கள் குடும்பத்தில் இருந்த அனைவருமே கண்ணாடி கடையில் வேலை பார்த்தவர்கள். அதனால் வடிவேலு சிறுவயதில் இருக்கும் போது அவரது தந்தை மதுரைக்கு கண்ணாடி கடையில் வேலை பார்ப்பதற்காக அழைத்து வந்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நடிகர் வடிவேலுவும் கூட கண்ணாடி கடையில் வேலை பார்த்து மேடை நாடகங்களில் நடித்து அதன் பின்னர் தான் சினிமாவில் வாய்ப்பு தேடி நடிகரானாம். வடிவேலுவிற்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.

பொறுப்பான அண்ணன்

பொறுப்பான அண்ணன்

தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நன்கு பார்த்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் வடிவேல் என்று அவருடைய தம்பி கூறியுள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் அனைவரையும் எப்போதும் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம். இயற்கையாகவே அவருடைய உடல் நகைச்சுவைக்காக உருவானது என்று வடிவேலுவின் தம்பி கூறியுள்ளார்.

சிம்பு படம்

சிம்பு படம்

இந்தத் தகவல்கள் அனைத்தையும் கூறியது அவருடைய இரண்டாவது தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர். இவரும் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படம். சொத்து பிரச்சனை காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் சினிமாவில் தொடர முடியவில்லை என்றும் இப்போது ஜவுளிக்கடை பிசினஸ் நடத்தி வருவதாகவும் அவ்வப்போது சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்பு தன்னை தேடி வந்தாலும் அதனை தவிர்த்து விட்டு பிசினஸில் கவனம் செலுத்துவதாக வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X