தனுஷை ஸ்பாட்டில் வைத்து முறைத்த வடிவேலு... மீசை ராஜேந்திரன் கூறிய அதிர்ச்சி தகவல்

சென்னை: நடிகர் வடிவேலு இடத்தை பிடிக்க இன்னமும் எந்த நகைச்சுவை நடிகராலும் முடியவில்லை.

இன்றும் கூட தொலைக்காட்சிகளில் அவர் நடித்த பழைய நகைச்சுவை காட்சிகள் தான் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது.

அதே வேளையில் அவரைப் பற்றிய விமர்சனங்களும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

கேப்டன் முதல் சங்கர் வரை

கேப்டன் முதல் சங்கர் வரை

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் கவுண்டமணியின் அதிருப்தியை மீறி வடிவேலுவிற்கு சிபாரிசு செய்தவர் நடிகர் விஜயகாந்த். ஆனால் காலப்போக்கில் வடிவேலு வளர வளர அவர் இருக்கும் தெருவிலேயே வீடு வாங்கி காட்டுகிறேன் என்று வீடு வாங்கி பின் அவருடன் பிரச்சனை ஏற்பட்டு சினிமாவில் வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்த வடிவேலு இம்சை அரசன் 24 ஆம் படத்தில் நடித்தபோது இயக்குநர் சிம்பு தேவனுடனும் தயாரிப்பாளர் சங்கருடனும் பிரச்சனை ஏற்பட்டு வடிவேலுவிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இப்போது தடை நீங்கி மீண்டும் நடிக்கிறார்.

சிங்கமுத்து குற்றச்சாட்டுகள்

சிங்கமுத்து குற்றச்சாட்டுகள்

இதற்கிடையில் நடிகர் சிங்கமுத்துவுடனும் மோதல் ஏற்பட, வடிவேலு செய்த பல காரியங்களை பொதுவெளியில் போட்டு உடைத்தார் சிங்கமுத்து. கால்ஷீட் தேதிகளுக்கு மட்டுமல்லாமல் ஷூட்டிங்கிற்கு பயணம் செய்யும் நாட்களையும் சேர்த்து பணம் வாங்கிக் கொள்வார் எனவும் விரைவாக நடிக்க வேண்டிய காட்சிகளை பல நாட்கள் இழுத்தடித்து தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பார் எனவும் சிங்கமுத்து கூறினார்.

தனுஷை முறைத்த வடிவேலு

தனுஷை முறைத்த வடிவேலு

தற்சமயம் நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனுஷ் நடித்திருந்த படிக்காதவன் படத்தில் விவேக் அவர்களின் நகைச்சுவை காட்சிகள் பிரபலமாக பேசப்பட்டது. அதில் முதலில் நடித்தவர் வடிவேலுதான். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். காரணம், ஒரு நாள் சரியாக நடிக்காமல் ஏழெட்டு டேக்குகள் திரும்பத் திரும்ப வடிவேலு வாங்கியதாகவும், அப்போது இயக்குநர் சுராஜ் லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருந்த கேமரா மேனிடம்,"சீக்கிரம் லைட்டிங் செட் பண்ணுங்கப்பா அண்ணனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் ரேட் ஏறிட்டே போகும்" என்று மைக்கில் சொல்ல வடிவேலு அவரைப் பார்த்து முறைத்தாராம். அதன் பின்னரும் 13 டேக்குகள் சென்றபோது உடன் நடித்த தனுஷ்,"அண்ணே டைரக்டர் சொல்ற மாதிரி நடிங்கண்ணே" என்று சொல்ல, தனுஷை பார்த்து வடிவேலு முறைத்தாராம். இந்த சம்பவத்தை தான் நேரில் பார்த்ததாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

ரஜினிக்கே சொல்லிக் கொடுத்தேன்

ரஜினிக்கே சொல்லிக் கொடுத்தேன்

அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு சென்றவர் தன் உடன் இருந்தவர்களிடம்,"சந்திரமுகி படத்தில் நடிக்கும் போது அவரது மாமாவிற்கே நான்தான் சொல்லிக் கொடுத்தேன். இப்போது என்னிடம் வந்து எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு தனுஷ் கற்றுக் கொடுக்கிறார்" என்று வடிவேலு கூறியதாகவும் அதை தான் நேரடியாக கேட்காவிட்டாலும் உடனிருந்தவர்கள் தன்னிடம் கூறியதாகவும் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X