twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைப்புள்ள, கான்ட்ராக்டர் நேசமணி.. வரிசையில் உங்கள் ஃபேவரிட் யார்? #VadiveluForLife

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : பல நூறு படங்களில் நடித்திருக்கும் சமகாலத்தின் ஆகச்சிறந்த நகைச்சுவைக் கலைஞன் வடிவேலுவின் 57-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    வைகைப்புயல் வடிவேலு இதுவரை எக்கச்சக்கமான கேரக்டர்களில் நடித்து, ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

    வடிவேலு நடித்த படங்களில் உங்கள் மனம் கவர்ந்த டாப் 10 பட்டியலை உருவாக்கச் சொன்னால் சற்றுக் கடினம்தான். எதைப் பட்டியலில் சேர்ப்பது, எதை விடுவது என்பதில் கொஞ்சம் திணறித்தான் போவோம்.

    டாப் 10

    டாப் 10

    வடிவேலு நடித்த படங்களில், அவரது காமெடிக்காகவே வெற்றிபெற்ற படங்கள் ஏராளம். சில படங்களை நாம் இன்றும் நினைவுகூருவதற்கான ஒரே காரணம் அவற்றில் வடிவேலு நடித்ததாகத்தான் இருக்கும். காமெடி நடிகர்களுக்கு தனி ட்ராக் என இருந்தாலும் சரி, நாயகனுடனே சேர்ந்து காமெடி செய்வதானாலும் சரி, பின்னி எடுப்பார் வடிவேலு. பெரும்பாலானோர் வெகுவாக ரசிக்கும் முதல் 5 காமெடிகளை இதில் பார்க்கலாம்.

    கைப்புள்ள

    வடிவேலுவின் காமெடி கேரியரில் தனி அடையாளம் கொடுத்தது 'வின்னர்' படத்தில் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள' கேரக்டர். வடிவேலு இந்தப் படம் முழுவதும் காலை நொண்டி நொண்டி நடப்பார். உண்மையில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அவருக்கு காலில் அடிபட்டிருந்தது. அதைப் படத்துக்கும் 'என்ன தல... கால்லயே போட்டானுவளா...' எனப் பயன்படுத்தி விட்டார்கள். 'எடுறா வண்டிய... அமுக்குடா ஹாரன...' எனக் கிளம்பிய கைப்புள்ள வண்டி இந்தப் படத்தையே மொத்தமாக இழுத்துச் சென்றது.

    கான்ட்ராக்டர் நேசமணி

    'அடேய் அப்ரசெண்டிகளா....' என கான்ட்ராக்டர் நேசமணி புலம்பும் காட்சிகளிலும், 'இப்படி சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களேடா...' எனச் சொல்லும் காட்சி எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் காமெடிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றன. ‘நல்லா குற்றாலத்துல இருக்க வேண்டியது எல்லாம் எங்கிட்ட இருக்குது' என்று விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை திட்டும்போதும் கான்ட்ராக்டர் நேசமணியாகவே வடிவேலு வாழ்ந்திருப்பார்.

    சூனா பானா

    'விட்றா விட்றா... சூனா பானா' எனச் சுத்திக் கொண்டிருப்பவர்களை 'ஏன்டா எல்லாருமே சூனா பானாவாகிற முடியுமாடா..?' எனக் கதற விட்டவர் 'கண்ணாத்தாள்' படத்தின் சூனா பானா வடிவேலு. ஆடுகளைத் திருடிவிட்டு பஞ்சாயத்தில் அலப்பறையைக் கொடுப்பது, சாத்தியின் காதலன் குடிக்கவிருந்த விஷத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு 'என்னடா தொண்டையக் கவ்வுது..?' எனக் கதறுவது எனப் படம் முழுக்க முரட்டுக் காமெடிதான்.

    ஸ்டீவ் வாக்

    பட்லர் இங்கிலீஷை தெரிந்துவைத்துக்கொண்டு பீட்டர் விடும் ஸ்டீவ் வாக்குகளுக்கு இவர்தான் முன்னோடி. 'ஹலோ துபாயா..? என் பிரதர் மார்க் இருக்காரா?' 'என் மம்மி டாடி அங்கதான லிவிங்க்ஸ்டன்' என ப்ரூஸை கரெக்ட் பண்ண அவிழ்த்துவிடும் கதைகளைக் கேட்டுச் சிரிக்காதவர்களே இருக்கமுடியாது. 'ஒய் ப்ளட்... சேம் ப்ளட்..?' 'சிங் இன் த ரெய்ன்.. சொய்ங் இன் த ரெய்ன்' என பலப்பல இங்கிலீஸ்ஹ் ரைம்ஸ்களையும் கற்றுக் கொடுத்தவரல்லவா ஸ்டீவ் வாக்?

    நாய் சேகர்

    'நானும் ரௌடிதான்யா...' என வான்டடாக வண்டியில் ஏறும் நாய் சேகர் திவ்யாவை கரெக்ட் பண்ண செய்யும் அட்டகாசங்கள் அந்தலை சிந்தலை ரக காமெடிகள். கடைசியில், 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' என காதல் ஃப்ளைட் பறக்கவிட்டது நாய் சேகர் அட்ராசிட்டி. நீள முடி, மூக்குத்தி, லிப்ஸ்டிக் என டுபாக்கூர் டானாக வலம்வந்த நாய் சேகர் காமெடியிலும் கலக்கினார்.

    உங்களுக்குப் பிடித்த வடிவேலுவின் டாப் 5 கேரக்டர்களின் வரிசையை கமென்ட்டில் குறிப்பிடுங்களேன்...

    English summary
    Vadivelu is the only reason for us to remember some movies today. If the comedy is a separate track, or the or comedy with the hero, he performs well and praised by fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X