twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தரைமட்டமான வாஹினி ஸ்டுடியோ! சென்னையின் இன்னொரு அடையாளச் சின்னம் தரைமட்டமாகியுள்ளது. லேட்டஸ்ட் டெமாலிஷன் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவான வாஹினி.அந்தக் கால படங்கள் எல்லாம் சென்னையில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. முழுப்படத்தையும் ஸ்டூடியோவிலேயே எடுத்த காலம் அது.ஏவி.எம், வாஹினி, கற்பகம், மோகன், பரணி, பிரசாத், அருணாச்சலம், மெஜஸ்டிக்என கிட்டத்தட்ட 28 பெரிய ஸ்டூடியோக்கள் செனனயில் இருந்தன. ஆனால் காலம்மாறமாற வெளிப்புற லொகேஷன்களைத் தேடிகோலிவுட் பிரம்மாக்கள் செல்லஆரம்பித்ததால் ஒவ்வொரு ஸ்டூடியோவாக மறையத் தொடங்கின.கடைசியில் மிஞ்சியது ஏவி.எம், வாஹினி, பிரசாத் ஆகியவை மட்டுமே. இதில்வாஹினி ஸ்டூடியோவுக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவிலேயே மிகப் பெரியஸ்டூடியோ இதுதான்.தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி முன்னணி நடிகர், நடிகையர் நடித்த பலபடங்கள் இங்கு தயாராகியுள்ளன. கடைசியாக விஜய் நடித்த சிவகாசி படத்தின்ஷூட்டிங் இங்குதான் நடந்தது.இப்போது வாஹினி ஸ்டூடியோவுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது. ஏற்கனவேஸ்டூடியோவின் ஒரு பகுதியை நட்சத்திர ஹோட்டலாகமாற்றி விட்டனர். மிஞ்சியிருந்தஸ்டூடியோ பகுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.இடிக்கப்பட்ட இடத்தில் மாபெரும் வணிக வளாகம் கட்டப் போகிறார்களாம். அதுதவிர திரையரங்க வளாகம் ஒனறும் வரவுள்ளதாம்.சென்னையின் பிரபலமான சினிமா மையங்களாக இருந்த அப்பு ஹவுஸ், குஷால்தாஸ்கார்டன் (சந்திரமுகி பேய்பங்களா), வாசன் இல்லம் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இபபோது வாஹினியும் போய் விட்டது.பெரிய ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டு வரும் நிலையில் சில சினிமாபிரபலங்கள் புதிதாக ஹை-டெக் ஸ்டூடியோக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விஜய டி.ராஜேந்தர், அர்ஜூன், மன்சூர்அலிகான் ஆகியோர் புதிய ஸ்டூடியோக்களைகட்டி வருகிறார்கள்.

    By Staff
    |

    சென்னையின் இன்னொரு அடையாளச் சின்னம் தரைமட்டமாகியுள்ளது.

    லேட்டஸ்ட் டெமாலிஷன் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவான வாஹினி.

    அந்தக் கால படங்கள் எல்லாம் சென்னையில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. முழுப்படத்தையும் ஸ்டூடியோவிலேயே எடுத்த காலம் அது.

    ஏவி.எம், வாஹினி, கற்பகம், மோகன், பரணி, பிரசாத், அருணாச்சலம், மெஜஸ்டிக்என கிட்டத்தட்ட 28 பெரிய ஸ்டூடியோக்கள் செனனயில் இருந்தன. ஆனால் காலம்மாறமாற வெளிப்புற லொகேஷன்களைத் தேடிகோலிவுட் பிரம்மாக்கள் செல்லஆரம்பித்ததால் ஒவ்வொரு ஸ்டூடியோவாக மறையத் தொடங்கின.

    கடைசியில் மிஞ்சியது ஏவி.எம், வாஹினி, பிரசாத் ஆகியவை மட்டுமே. இதில்வாஹினி ஸ்டூடியோவுக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவிலேயே மிகப் பெரியஸ்டூடியோ இதுதான்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி முன்னணி நடிகர், நடிகையர் நடித்த பலபடங்கள் இங்கு தயாராகியுள்ளன. கடைசியாக விஜய் நடித்த சிவகாசி படத்தின்ஷூட்டிங் இங்குதான் நடந்தது.

    இப்போது வாஹினி ஸ்டூடியோவுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது. ஏற்கனவேஸ்டூடியோவின் ஒரு பகுதியை நட்சத்திர ஹோட்டலாகமாற்றி விட்டனர். மிஞ்சியிருந்தஸ்டூடியோ பகுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.

    இடிக்கப்பட்ட இடத்தில் மாபெரும் வணிக வளாகம் கட்டப் போகிறார்களாம். அதுதவிர திரையரங்க வளாகம் ஒனறும் வரவுள்ளதாம்.

    சென்னையின் பிரபலமான சினிமா மையங்களாக இருந்த அப்பு ஹவுஸ், குஷால்தாஸ்கார்டன் (சந்திரமுகி பேய்பங்களா), வாசன் இல்லம் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இபபோது வாஹினியும் போய் விட்டது.

    பெரிய ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டு வரும் நிலையில் சில சினிமாபிரபலங்கள் புதிதாக ஹை-டெக் ஸ்டூடியோக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விஜய டி.ராஜேந்தர், அர்ஜூன், மன்சூர்அலிகான் ஆகியோர் புதிய ஸ்டூடியோக்களைகட்டி வருகிறார்கள்.

      Read more about: vahini studio demolished
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X