»   »  பெண் மனதில் தப்பேயில்லை-வைரமுத்து

பெண் மனதில் தப்பேயில்லை-வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்பட பாடல்களில் தமிழை கேட்க விடுங்கள் என்று இசையமைப்பாளர்களுக்குகவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள வரவான உதயதாரா, பிரசனனா நடித்துள்ள கண்ணும் கண்ணும் படத்தின் பாடல்வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் முதல் கேசட்டை கவிஞர்வைரமுத்து வெளியிட அதை சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது,

நான் சமீபத்தில் கேட்ட வித்தியாசமான கதைகளில் முக்கியமானது கண்ணும் கண்ணும்.இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன். பாடல்களுக்கு இசையமைத்ததினா பாராட்டுக்குரியவர். இந்த நேரத்தில் இசையமைப்பாளர்களுக் ஒருவேண்டுகோள் விடுக்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் திறமைசாலிகள். சப்தங்களை செதுக்குகிறவர்கள். ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வாத்தியங்களால் புகழ் பெறுவதை விட, மெட்டுக்களால் தான்புகழ் பெறுகிறீர்கள். அந்த மெட்டுக்கள் வார்த்தைகளால் சிறப்படைகின்றன. எனவேவாத்தியங்களில் ஒலிகளை சற்றே குறைத்துக் கொண்டு வார்த்தைகளை கேட்கவிடுங்கள்.

தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போய் இருக்கிறது திரைப்பாட்டு. எனவே இதைசாதாரணமாக தள்ளிவிட முடியாது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரத்தின் வேப்பமரஉச்சியில் நின்னு போன்ற வரிகளில் பகுத்தறிவு சொன்னது திரைப்பாட்டு.

கருணாநிதியின் வாழ்க்கை என்னும் ஒடம் போன்ற வரிகளில் தத்துவம் சொன்னதுதிரைப்பாட்டு. கண்ணதாசன் எழுதிய மலர்ந்தும் மலராத பாதி மலரபோல போன்றவரிகளில் கவிதை சொன்னது திரைப்பாட்டு.

தமிழர்கள், தமிழ் கேட்க ஆசைப்படுபவர்கள். அந்த ஆசைக்கு அணை போடாதீர்கள்.இந்த படத்தில் கூட கல்லூரி மாணவியின் மனக்குரலாக பதினெட்டு வயசுபட்டாம்பூச்சி என்று ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன். அந்த பாட்டில்

முதலை வாயில் நாக்கே இல்லை

மூன்றாம் பிறையில் கறையே இல்லை

பெய்யும் மழையில் உப்பே இல்லை

பெண்கள் மனதில் தப்பே இல்லை என்று எழுதியிருக்கிறேன்.

இந்த வரி உங்களுக்கு புரிகிறது. பல பாடல்களில் வரிகள் புரிவதே இல்லை. வரிகள்புரிந்தால் தமிழர்கள் உங்களை வாழத்துவார்கள் என்றார் வைரமுத்து.

இவ்விழாவையொட்டி ஏழை, எளியவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமும்நடத்தபட்டது. அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil