twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்ணை மதிக்காத சினிமா: வைரமுத்து தமிழ் சினிமா பெண்களை மதிக்கவில்லை, பெண்களுக்கு அங்கு மரியாதைகிடைக்கவில்லை என்று கவிப்பேரரசு வைரத்து கூறியுள்ளார்.பிரசன்னா, உதயதாரா நடிக்கும் கண்ணும் கண்ணும் படத்தின் பாடல் கேசட்வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து தனது மனக்குமுறலைகொட்டித் தீர்த்தார்.சினிமா பெரிய ஊடகம், வாழ்வையே மாற்றி அமைக்க கூடியது. முந்தையசினிமாவில் யார் வந்தாலும் பிழைக்கலாம். இப்போது நின்றால் சிகரம்இல்லாவிட்டால், அதள பாதளம்.சினிமாவை பார்த்து சினிமா எடுத்தால் நிற்காது. வாழ்க்கையை பார்த்து எடுத்தால்தான் வெற்றி பெறும். இப்போதைய படங்களில் இரண்டாவது ரீலிலேயே ஒருவன் வருகிறான். ஒருபெண்ணோடு பாட்டு பாடுகிறான். 4வது ரீலிலேயே அவளோடு ஓடிப் போகிறான்.தமிழ் சினிமாவில் பெண்கள் மதிக்கப்படவில்லை. நடிகைகள் ஆடை கட்டும்பொம்மையாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.கை கொடுத்த தெய்வம் படத்தில் சிவாஜியும், சாவித்தி>யும் சமமாக நடித்தனர். முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கு முக்கியத்துவம் இருந்தது. சிந்து பைரவியிலும்நடிகைகள் மதிக்கப்பட்டனர்.பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா வளரும். சமீபத்தில் நான் கேட்டநல்ல கதை கண்ணும் கண்ணும். இப்படம் வெற்றி பெறும் என்றார் வைரமுத்து.

    By Staff
    |
    தமிழ் சினிமா பெண்களை மதிக்கவில்லை, பெண்களுக்கு அங்கு மரியாதைகிடைக்கவில்லை என்று கவிப்பேரரசு வைரத்து கூறியுள்ளார்.

    பிரசன்னா, உதயதாரா நடிக்கும் கண்ணும் கண்ணும் படத்தின் பாடல் கேசட்வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து தனது மனக்குமுறலைகொட்டித் தீர்த்தார்.

    சினிமா பெரிய ஊடகம், வாழ்வையே மாற்றி அமைக்க கூடியது. முந்தையசினிமாவில் யார் வந்தாலும் பிழைக்கலாம். இப்போது நின்றால் சிகரம்இல்லாவிட்டால், அதள பாதளம்.

    சினிமாவை பார்த்து சினிமா எடுத்தால் நிற்காது. வாழ்க்கையை பார்த்து எடுத்தால்தான் வெற்றி பெறும்.

    இப்போதைய படங்களில் இரண்டாவது ரீலிலேயே ஒருவன் வருகிறான். ஒருபெண்ணோடு பாட்டு பாடுகிறான். 4வது ரீலிலேயே அவளோடு ஓடிப் போகிறான்.

    தமிழ் சினிமாவில் பெண்கள் மதிக்கப்படவில்லை. நடிகைகள் ஆடை கட்டும்பொம்மையாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

    கை கொடுத்த தெய்வம் படத்தில் சிவாஜியும், சாவித்தி>யும் சமமாக நடித்தனர். முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கு முக்கியத்துவம் இருந்தது. சிந்து பைரவியிலும்நடிகைகள் மதிக்கப்பட்டனர்.

    பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா வளரும். சமீபத்தில் நான் கேட்டநல்ல கதை கண்ணும் கண்ணும். இப்படம் வெற்றி பெறும் என்றார் வைரமுத்து.

      Read more about: vairamuthu attacks cinema
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X