twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரமுத்துவின் ஜோ கவிதை! ஜோதிகாவுக்காக ஒரு அருமையான கவிதையைப் படைத்துள்ளார் கவியரசுவைரமுத்து.புதுமைப் பித்தன் பிரகாஷ் ராஜின் தயாரிப்பில், ரசனை இயக்குனர் ராதாமோகனின்இயக்கத்தில் உருவாகும் படம் மொழி. வாய் பேசாத பெண்ணாக இதில் மாறுபட்டகேரக்டரில் நடிக்கிறார் ஜோதிகா.ஜோதிகாவை மையமாக வைத்து ஒரு பாடலை போட விரும்பிய ராதாமோகன்,நேராக வைரமுத்துவிடம் போனார். ஜோதிகாவின் கேரக்டரை அவரிடம் விவரித்துக்கூறி பாடல் கேட்டார்.அந்தப் பாட்டிலேயே கதையும், கேரக்டரும் ரசிகர்களுக்குப் புரிய வேண்டும் என்றும்அன்பு நிபந்தனையு போட்டார்.கேட்ட மாத்திரத்தில் தோட்டாவை (பேனாவைத்தான்) எடுத்த வைரமுத்து வரிகளைசுட்டுத் தள்ளி ராதாமோகனிடம் சுடச் சுட பாடலைத் தந்தார்.வாங்கிப் படித்த ராதாமோகன், திறந்த வாயை மூட சில நிமிடங்கள் ஆனதாம்.ராதாமோகனை வசீகரித்த அந்தப் பாடல்...காற்றின் மொழிஒலியா, இசையா?பூவின் மொழிநிறமா, மணமா?கடலின் மொழிஅலையா, நுரையா?காதல் மொழிவிழியா, இதழா?இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்மனிதரின் மொழியே தேவையில்லைஇதயத்தின் மொழிகள் புரிந்து விடில்மனிதர்க்கு மொழியே தேவையில்லை. காற்று வீசும்போதுதிசைகள் கிடையாதுகாதல் பேசும்போதுமொழிகள் கிடையாதுபேசும் வார்த்தை போலமவுனம் புரியாதுகண்கள் பேசும் வார்த்தைகடவுள் அறியாதுஉலவித் திரியும் காற்றுக்குஉருவம் தீட்ட முடியாதுகாதல் பேசும் மொழியெல்லாம்சப்தக் கூட்டில் அடங்காதுவானம் பேசும் பேச்சுதுளியாய் வெளியாகும்!

    By Staff
    |

    ஜோதிகாவுக்காக ஒரு அருமையான கவிதையைப் படைத்துள்ளார் கவியரசுவைரமுத்து.

    புதுமைப் பித்தன் பிரகாஷ் ராஜின் தயாரிப்பில், ரசனை இயக்குனர் ராதாமோகனின்இயக்கத்தில் உருவாகும் படம் மொழி. வாய் பேசாத பெண்ணாக இதில் மாறுபட்டகேரக்டரில் நடிக்கிறார் ஜோதிகா.

    ஜோதிகாவை மையமாக வைத்து ஒரு பாடலை போட விரும்பிய ராதாமோகன்,நேராக வைரமுத்துவிடம் போனார். ஜோதிகாவின் கேரக்டரை அவரிடம் விவரித்துக்கூறி பாடல் கேட்டார்.

    அந்தப் பாட்டிலேயே கதையும், கேரக்டரும் ரசிகர்களுக்குப் புரிய வேண்டும் என்றும்அன்பு நிபந்தனையு போட்டார்.

    கேட்ட மாத்திரத்தில் தோட்டாவை (பேனாவைத்தான்) எடுத்த வைரமுத்து வரிகளைசுட்டுத் தள்ளி ராதாமோகனிடம் சுடச் சுட பாடலைத் தந்தார்.

    வாங்கிப் படித்த ராதாமோகன், திறந்த வாயை மூட சில நிமிடங்கள் ஆனதாம்.ராதாமோகனை வசீகரித்த அந்தப் பாடல்...

    காற்றின் மொழி
    ஒலியா, இசையா?
    பூவின் மொழி
    நிறமா, மணமா?
    கடலின் மொழி
    அலையா, நுரையா?
    காதல் மொழி
    விழியா, இதழா?
    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழியே தேவையில்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதர்க்கு மொழியே தேவையில்லை.

    காற்று வீசும்போது
    திசைகள் கிடையாது
    காதல் பேசும்போது
    மொழிகள் கிடையாது
    பேசும் வார்த்தை போல
    மவுனம் புரியாது
    கண்கள் பேசும் வார்த்தை
    கடவுள் அறியாது

    உலவித் திரியும் காற்றுக்கு
    உருவம் தீட்ட முடியாது
    காதல் பேசும் மொழியெல்லாம்
    சப்தக் கூட்டில் அடங்காது

    வானம் பேசும் பேச்சு
    துளியாய் வெளியாகும்!
    வானவில்லின் பேச்சு
    நிறமாய் வெளியாகும்!
    உண்மை ஊமையானால்
    கண்ணீர் மொழியாகும்
    பெண்மை ஊமையானால்நாணம் மொழியாகும்
    ஓசை தூங்கும் ஜாமத்தில்
    உச்சி மீன்கள் மொழியாகும்
    ஆசை தூங்கும் இதயத்தில்
    அசைவு கூட மொழியாகும்

    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவையில்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

    இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறார் கவியரசு...

      Read more about: vairamuthus poem on jyothika
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X