twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அறுவடையும் ஆறுவடையும்... அஜீத் நடித்து, இப்போது நட்டாற்றில் நிற்கும் காட்பாதர் படத்துக்காக பாட்டெழுதிய வைரமுத்துவையும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானையும்வாட்டி எடுத்துவிட்டாராம் ஒரு பாடகர்.படத்தில் சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஒரு பாடலைப் போடச் சொல்லி கேட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.அஜீத்தும் ஆசினும் பாடி ஆடும் ஒரு நடனப் பாடல் அது. ஹைதரபாத்தில் சூட்டிங் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தப் பாடலை மிக அவசரமாகக்கேட்டுள்ளார் ரவிக்குமார். இதையடுத்து வைரமுத்துவை இரவில் பிடித்து பாடலை எழுதி வாங்கி, இசையும் போட்டார் ரஹ்மான்.வழக்கமாக இரவில் தான் இசை கோர்ப்பார் ரஹ்மான். இந்தப் பாடலும் இரவிலேயே எழுதப்பட்டு, இரவிலேயே இசையும் போடப்பட்டது.இன்னிசை அளபெடையேஇளமையின் அறுவடையே என்று ஆரம்பித்துஅச்சில் வார்த்தபதுமையே ஆடுகச்சில் கடக்கும்கர்வமே ஆடு.. என்று செந்தமிழில் போட்டுத் தாக்கிவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்குத் தூங்கப் போனார் வைரமுத்து.ஆனால், சரியாக நடு நிசி 2 மணிக்கு ரஹ்மானிடம் இருந்து வைரமுத்துவுக்கு போன்.இளமையின் அறுவடையே என்ற வரியை எத்தனை முறை சொல்லித் தந்தாலும், இளமையின் ஆறுவடையே என்றேபாடுகிறார் பாடகர். இதனால் அந்த வரியை தயவு செய்து மாற்றிக் கொடுங்கள் என்றாராம் ரஹ்மான்.பாடகரின் வாய்த் திறமையை நினைத்து நொந்தபடி, இளமையின் அறுவடையே என்ற வார்த்தையை இளமையின்நன்கொடையே என்று உடனே அழகாக மாற்றித் தந்திருக்கிறார் கவியரசு.தூக்கத்தில் எழுப்பினால் கூட வார்த்தைகளை பஞ்சமில்லாமல் கொட்டுகிறீர்களே, பாடலின் அழகு சிதையாமல் வார்த்தையைமாற்றிவிட்டீர்களே என்று வைரமுத்துவை வாயார பாராட்டிவிட்டு போனை வைத்தாராம் ரஹ்மான்.பின்னர் அந்தப் பாடலை அந்தப் பாடகர் ஒரு வழியாய் பாடி முடித்தாராம்.இப்படித்தான், ஒரு பாடலில் திருக்கோவில் என்று வைரமுத்து எழுதித் தந்ததை தெருக்கோவில் என்று அழகாகப் பாடினார்கேரளத்து ஜேசுதாஸ். இதை வைரமுத்து திருத்தச் சொன்னபோது, இனிமேல் நான் வைரமுத்துவின் பாடல்களையே பாடவேமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார் ஜேசுதாஸ்.தமிழை சரியாக உச்சரிக்கச் சொன்னது ஜேசுதாசுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதனால் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்இன்னும் தீரவில்லை.அதிலிருந்து பாடகர்கள் விஷயத்தில் திருத்தல் வேலையை அடியோடு விட்டுவிட்டார் வைரமுத்து.அதே நேரத்தில் எநத்ப் பாடகராவது தனது வாயால் தமிழைக் கொன்றால் அதை சகித்துக் கொள்ளாமல் வேறு எளியவார்த்தையை மாற்றித் தந்துவிட்டுப் போய் விடுகிறார்.ஆமா, நல்ல தமிழ் வார்த்தையைக் கூட சொல்ல முடியாதவர் எல்லாம் எதற்கு தமிழ் சினிமா பாட்டு பாடி காசு சம்பாதிக்க இங்கவரணும்? அதுக்கு வேற தெரிஞ்ச வேலை எதையாவது செய்யலாமே.. இவர்களைப் போன்றவர்களை ஏன்இசையமைப்பாளர்கள் தூக்கி வைத்து ஆடனும்?

    By Staff
    |

    அஜீத் நடித்து, இப்போது நட்டாற்றில் நிற்கும் காட்பாதர் படத்துக்காக பாட்டெழுதிய வைரமுத்துவையும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானையும்வாட்டி எடுத்துவிட்டாராம் ஒரு பாடகர்.


    படத்தில் சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஒரு பாடலைப் போடச் சொல்லி கேட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

    அஜீத்தும் ஆசினும் பாடி ஆடும் ஒரு நடனப் பாடல் அது. ஹைதரபாத்தில் சூட்டிங் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தப் பாடலை மிக அவசரமாகக்கேட்டுள்ளார் ரவிக்குமார். இதையடுத்து வைரமுத்துவை இரவில் பிடித்து பாடலை எழுதி வாங்கி, இசையும் போட்டார் ரஹ்மான்.

    வழக்கமாக இரவில் தான் இசை கோர்ப்பார் ரஹ்மான். இந்தப் பாடலும் இரவிலேயே எழுதப்பட்டு, இரவிலேயே இசையும் போடப்பட்டது.

    இன்னிசை அளபெடையே

    இளமையின் அறுவடையே என்று ஆரம்பித்து

    அச்சில் வார்த்த

    பதுமையே ஆடு

    கச்சில் கடக்கும்

    கர்வமே ஆடு.. என்று செந்தமிழில் போட்டுத் தாக்கிவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்குத் தூங்கப் போனார் வைரமுத்து.


    ஆனால், சரியாக நடு நிசி 2 மணிக்கு ரஹ்மானிடம் இருந்து வைரமுத்துவுக்கு போன்.

    இளமையின் அறுவடையே என்ற வரியை எத்தனை முறை சொல்லித் தந்தாலும், இளமையின் ஆறுவடையே என்றேபாடுகிறார் பாடகர். இதனால் அந்த வரியை தயவு செய்து மாற்றிக் கொடுங்கள் என்றாராம் ரஹ்மான்.

    பாடகரின் வாய்த் திறமையை நினைத்து நொந்தபடி, இளமையின் அறுவடையே என்ற வார்த்தையை இளமையின்நன்கொடையே என்று உடனே அழகாக மாற்றித் தந்திருக்கிறார் கவியரசு.

    தூக்கத்தில் எழுப்பினால் கூட வார்த்தைகளை பஞ்சமில்லாமல் கொட்டுகிறீர்களே, பாடலின் அழகு சிதையாமல் வார்த்தையைமாற்றிவிட்டீர்களே என்று வைரமுத்துவை வாயார பாராட்டிவிட்டு போனை வைத்தாராம் ரஹ்மான்.

    பின்னர் அந்தப் பாடலை அந்தப் பாடகர் ஒரு வழியாய் பாடி முடித்தாராம்.

    இப்படித்தான், ஒரு பாடலில் திருக்கோவில் என்று வைரமுத்து எழுதித் தந்ததை தெருக்கோவில் என்று அழகாகப் பாடினார்கேரளத்து ஜேசுதாஸ். இதை வைரமுத்து திருத்தச் சொன்னபோது, இனிமேல் நான் வைரமுத்துவின் பாடல்களையே பாடவேமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார் ஜேசுதாஸ்.

    தமிழை சரியாக உச்சரிக்கச் சொன்னது ஜேசுதாசுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதனால் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்இன்னும் தீரவில்லை.


    அதிலிருந்து பாடகர்கள் விஷயத்தில் திருத்தல் வேலையை அடியோடு விட்டுவிட்டார் வைரமுத்து.

    அதே நேரத்தில் எநத்ப் பாடகராவது தனது வாயால் தமிழைக் கொன்றால் அதை சகித்துக் கொள்ளாமல் வேறு எளியவார்த்தையை மாற்றித் தந்துவிட்டுப் போய் விடுகிறார்.

    ஆமா, நல்ல தமிழ் வார்த்தையைக் கூட சொல்ல முடியாதவர் எல்லாம் எதற்கு தமிழ் சினிமா பாட்டு பாடி காசு சம்பாதிக்க இங்கவரணும்? அதுக்கு வேற தெரிஞ்ச வேலை எதையாவது செய்யலாமே.. இவர்களைப் போன்றவர்களை ஏன்இசையமைப்பாளர்கள் தூக்கி வைத்து ஆடனும்?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X