»   »  வைஷ்ணவி தற்கொலை: புது திருப்பம் டிவி நடிகை வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாக டிவி நடிகை, நடிகர்கள்போலீசாரிடம் புகார் கூறியுள்ளனர்.டிவி நடிகர், நடிகைகள் 12 பேர் இன்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், நடிகை வைஷ்ணவியும் தேவ் ஆனந்தும் மனைவி தொடரில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.அவர்கள் நெருக்கமாக காதலித்து வந்தனர். ஸ்டுடியோவிலேயே அவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். இதுசூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும்.அது மட்டுமல்ல. வைஷ்ணவி மற்றும் தேவ் ஆன்ந்த் ஆகியோரின் குடும்பத்தினரும் பரஸ்பரம் மிக நன்றாகவேபழகி வந்தனர். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் செல்வதும் வழக்கம்.தேவ் ஆனந்தின் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதும், ஆனந்தை வைஷ்ணவி காதலித்ததும் வைஷ்ணவியின்குடும்பத்தினருக்கு மிக நன்றாகவே தெரியும். அதை அவர்கள் எதிர்க்கவும் இல்லை.காதலர்களான தேவ் ஆனந்த் வைஷ்ணவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் உண்டு. ஒருமுறை தேவ் ஆனந்த் தான் தற்கொலைக்கு முயன்றார். அவரை சமாதானப்படுத்தி நாங்கள் தான் சேர்த்துவைத்தோம். இதையடுத்து இருவரும் மீண்டும் முன்பு போல பழகி வந்தனர்.கலை நிகழ்சிக்காக வெளிநாடு போனபோது வைஷ்ணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரைமருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேரமும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டது தேவ் ஆனந்த் தான்.அப்போது வைஷ்ணவியின் தாயாரும் உடனிருந்தார்.ஆனால், இப்போது தேவ் ஆனந்த் மீது புகார் மட்டும் கூறியுள்ள வைஷ்ணவியின் தாயார், அவரை தனக்குத்தெரியாது என்று கூறியுள்ளார்.இதனால் வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாகத் தெரிகிறது. யார் தூண்டுதாலோதான் இந்தத் தற்கொலை நடந்துள்ளது. உண்மையான காரணம் இன்னும் வெளிவரவில்லை.எனவே மீண்டும் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர நாங்கள் தயார்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற மனுவை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரணிடம் கொடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, நடிகர் தேவ் ஆனந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, தேவ் ஆனந்துக்கு ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.வைஷ்ணவி தற்கொலை: சிக்கலில் இன்னொரு டிவி நடிகை

வைஷ்ணவி தற்கொலை: புது திருப்பம் டிவி நடிகை வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாக டிவி நடிகை, நடிகர்கள்போலீசாரிடம் புகார் கூறியுள்ளனர்.டிவி நடிகர், நடிகைகள் 12 பேர் இன்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், நடிகை வைஷ்ணவியும் தேவ் ஆனந்தும் மனைவி தொடரில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.அவர்கள் நெருக்கமாக காதலித்து வந்தனர். ஸ்டுடியோவிலேயே அவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். இதுசூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும்.அது மட்டுமல்ல. வைஷ்ணவி மற்றும் தேவ் ஆன்ந்த் ஆகியோரின் குடும்பத்தினரும் பரஸ்பரம் மிக நன்றாகவேபழகி வந்தனர். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் செல்வதும் வழக்கம்.தேவ் ஆனந்தின் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதும், ஆனந்தை வைஷ்ணவி காதலித்ததும் வைஷ்ணவியின்குடும்பத்தினருக்கு மிக நன்றாகவே தெரியும். அதை அவர்கள் எதிர்க்கவும் இல்லை.காதலர்களான தேவ் ஆனந்த் வைஷ்ணவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் உண்டு. ஒருமுறை தேவ் ஆனந்த் தான் தற்கொலைக்கு முயன்றார். அவரை சமாதானப்படுத்தி நாங்கள் தான் சேர்த்துவைத்தோம். இதையடுத்து இருவரும் மீண்டும் முன்பு போல பழகி வந்தனர்.கலை நிகழ்சிக்காக வெளிநாடு போனபோது வைஷ்ணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரைமருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேரமும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டது தேவ் ஆனந்த் தான்.அப்போது வைஷ்ணவியின் தாயாரும் உடனிருந்தார்.ஆனால், இப்போது தேவ் ஆனந்த் மீது புகார் மட்டும் கூறியுள்ள வைஷ்ணவியின் தாயார், அவரை தனக்குத்தெரியாது என்று கூறியுள்ளார்.இதனால் வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாகத் தெரிகிறது. யார் தூண்டுதாலோதான் இந்தத் தற்கொலை நடந்துள்ளது. உண்மையான காரணம் இன்னும் வெளிவரவில்லை.எனவே மீண்டும் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர நாங்கள் தயார்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற மனுவை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரணிடம் கொடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, நடிகர் தேவ் ஆனந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, தேவ் ஆனந்துக்கு ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.வைஷ்ணவி தற்கொலை: சிக்கலில் இன்னொரு டிவி நடிகை

Subscribe to Oneindia Tamil

டிவி நடிகை வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாக டிவி நடிகை, நடிகர்கள்போலீசாரிடம் புகார் கூறியுள்ளனர்.

டிவி நடிகர், நடிகைகள் 12 பேர் இன்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில்,

நடிகை வைஷ்ணவியும் தேவ் ஆனந்தும் மனைவி தொடரில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.அவர்கள் நெருக்கமாக காதலித்து வந்தனர். ஸ்டுடியோவிலேயே அவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். இதுசூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும்.

அது மட்டுமல்ல. வைஷ்ணவி மற்றும் தேவ் ஆன்ந்த் ஆகியோரின் குடும்பத்தினரும் பரஸ்பரம் மிக நன்றாகவேபழகி வந்தனர். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் செல்வதும் வழக்கம்.


தேவ் ஆனந்தின் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதும், ஆனந்தை வைஷ்ணவி காதலித்ததும் வைஷ்ணவியின்குடும்பத்தினருக்கு மிக நன்றாகவே தெரியும். அதை அவர்கள் எதிர்க்கவும் இல்லை.

காதலர்களான தேவ் ஆனந்த் வைஷ்ணவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் உண்டு. ஒருமுறை தேவ் ஆனந்த் தான் தற்கொலைக்கு முயன்றார். அவரை சமாதானப்படுத்தி நாங்கள் தான் சேர்த்துவைத்தோம். இதையடுத்து இருவரும் மீண்டும் முன்பு போல பழகி வந்தனர்.

கலை நிகழ்சிக்காக வெளிநாடு போனபோது வைஷ்ணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரைமருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேரமும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டது தேவ் ஆனந்த் தான்.அப்போது வைஷ்ணவியின் தாயாரும் உடனிருந்தார்.

ஆனால், இப்போது தேவ் ஆனந்த் மீது புகார் மட்டும் கூறியுள்ள வைஷ்ணவியின் தாயார், அவரை தனக்குத்தெரியாது என்று கூறியுள்ளார்.


இதனால் வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாகத் தெரிகிறது. யார் தூண்டுதாலோதான் இந்தத் தற்கொலை நடந்துள்ளது. உண்மையான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

எனவே மீண்டும் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர நாங்கள் தயார்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற மனுவை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரணிடம் கொடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, நடிகர் தேவ் ஆனந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, தேவ் ஆனந்துக்கு ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.

வைஷ்ணவி தற்கொலை: சிக்கலில் இன்னொரு டிவி நடிகை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil