Teddy day: டெடி டே கொண்டாட ரெடியா.. உங்கள் விருப்பமானவருக்கு என்ன பொம்மை கொடுக்கப் போறீங்க?

சென்னை: வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்திற்காக சர்வதேச அளவில் காதலர்கள் மட்டுமில்லாமல் அன்பை பரஸ்பரம் பரிமாற நினைக்கும் அனைவரும் தயாராகி வருகின்றனர். காதலர் தினம் மட்டுமில்லாமல் காதலர் வாரமும் கடந்த சில தினங்களாக களைகட்டி வருகிறது. அந்த வகையில் சாக்லேட் டே உள்ளிட்ட தினங்கள் கொண்டாடப்பட்டுள்ளன.

இன்றைய தினம் சர்வதேச டெடி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்களுக்குள் பரஸ்பரஸ் டெடி பொம்மைகளை பகிர்ந்துக் கொள்வதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தன்னுடைய காதலரை தொடர்ந்து பார்க்க முடியாத பட்சத்தில் அவர்கள் கொடுக்கும் இந்த டெடி பொம்மை அவர்களது இருப்பை சாத்தியப்படுத்தி பாதுகாப்பை கொடுப்பதாக உணரப்படுகிறத.

tamil cinema

காதலர் தினம் காதல் ஒன்று மட்டுமே இந்த உலகத்தை சிறப்பாக சுழல செய்து வருகிறது. காதல் மட்டும்தானா என்ற கேள்வி எழும்பலாம். அதன் தொடர்பான அன்பு, அக்கறை உள்ளிட்டவையும் இதில் இணைந்துக் கொள்கிறது. காதல் என்பது திருமணத்திற்கு முன்புதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான். ஆனால் திருமணம் ஆகிவிட்டால் அங்கு காதலுடன் பொறுப்புணர்வும் சேர்ந்துக் கொள்வதால் தொடர்ந்து தன்னுடைய அன்புக்குரியவர்கள் மீது அக்கறை காட்டுவது சற்று குறைவதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். திருமணத்திற்கு முன்பு ஏற்படும் காதலில் இத்தகைய பொறுப்புணர்வு இருக்காது என்பதால் தன்னுடைய காதலரை இம்ப்ரஸ் செய்வதிலேயே அவர்கள் நாட்கள் அதிகமாக கழிகிறது.

காதலர் வாரம் 2025: பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த மாதத்தில்தான் காதலர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் இந்த தினத்தில் தங்களது காதலை வெளிப்படுத்த பல்வேறு விஷயங்களை காதலர்கள் செய்கின்றனர். இதையொட்டி சர்வதேச அளவில் அதிகமான வணிகமும் காணப்படுகிறது. தன்னுடைய காதலருக்கு என்னமாதிரியான டேஸ்ட் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளவும் இந்த நாள் காரணமாக அமைகிறது. இதனிடையே காதலர் தினம் என்ன, காதலர் வாரமும் நாங்கள் கொண்டாடுவோம் என்று களமிறங்கியுள்ளனர் காதலர்கள்.

டெடி தினம்: அந்த வகையில் காதலுக்கு அடையாளமாக பார்க்கப்படும் ரோஸ், சாக்லேட் தினங்கள் கொண்டாடப்பட்ட நிலையில் இன்றைய தினம் டெடி டே கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடைகளில் அதிகளவில் தொங்கிக் கொண்டிருந்த டெடி பொம்மைகளை தங்களது காதலிக்காக, காதலருக்காக கொடுத்து வருகின்றனர். இந்த பொம்மைகளுக்கு டெடி என்று பெயர்வர காரணமும் உண்டு. கடந்த 1902ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தியோடர் டெடி, இரக்கம் காரணமாக கரடிக்குட்டி ஒன்றை வேட்டையாடாமல் சென்ற நிலையில், இந்த நிகழ்வு பிரபலமாக பேசப்பட்டதாம். இதையடுத்து மோரிஸ் மிக்டாம் என்பவர் கரடி பொம்மையை உருவாக்கி அதற்கு டெடி என்று பெயரிட்டுள்ளார்.

டெடி பொம்மைகள்: இதையடுத்து இந்த டெடி பொம்மைகள் காதல், பாதுகாப்பு, ஆறுதல் போன்றவற்றின் அடையாளமாக மாறியது. பிப்ரவரி 10ம் தேடித டெடி டே கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் இந்த பொம்மையை அளிப்பது காதலருக்கு அளிக்கும் உறுதியாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் டெடி பொம்மையை வைத்து பல படங்களின் காட்சிகள் ரசிகர்களை குறிப்பாக காதலர்களை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. தமிழிலும் காதலர்கள் தங்களது காதலரை டெடி பொம்மையை கட்டிப்பிடித்துக் கொள்ளுவதன் முலம் உணருவதாக காட்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன.

டெடியுடன் நாயகிகள்: தமிழில் டெடி என்ற பெயரில் படமே வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வெற்றிப் படமாகவும் மாறியது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, சாயிஷா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படத்தில் டெடியுடனான காம்பினேஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக அமைந்தன. நடிகை சமந்தா தன்னுடைய படம் ஒன்றில் வெள்ளை நிறத்தில் டெடியுடன் அணைத்தபடி சிரித்தபடி இருந்தது ரசிகர்களை மயங்க வைத்தது. தன்னுடைய காதலியையும் இதுபோல அவர்கள் கற்பனை செய்துக் கொண்டனர். இதேபோல நடிகை ஹன்சிகா மோத்வானியும் தன்னுடைய உயரத்திற்கு டெடி பொம்மைகளை கட்டியணைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் நடிகைகள் டெடியுடன் தங்களது பாதுகாப்பான உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். நடிகைகள் மீனா, ரம்பா உள்ளிட்ட 90களின் நாயகிகளும் இதுபோன்ற காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களை டெடியுடன் பார்ப்பதை ரசிகர்களும் சிறப்பாக வரவேற்றனர். டெடிக்கு என்று ஒரு நாள் இருக்கும் நிலையில், காதலர்களுக்கிடையில் பாலமாக செயல்படும் டெடி பொம்மைகளின் இந்த நாளை சிறப்பாக கொண்டாடலாம்.

More from Filmibeat

Read more about: tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X