Valentines day: காதலாகி கசிந்துருக காரணம்.. காதலர்கள் கொண்டாடும் காதல் பாடல்கள்!

சென்னை: சர்வதேச அளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் என்பது நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு உணர்வு. அதை கொண்டாட காலநேரம் அவசியம் இல்லை. தேவையும் இல்லை. இருந்தபோதிலும் தினந்தோறும் நாம் வாழ்ந்தாலும் பிறந்தநாள் ஒன்றை சிறப்பாக கொண்டாடுவதை போல காதலர் தினத்தையும் தினந்தோறும் கொண்டாடும்போதிலும் அதற்கென பிரத்யேகமான ஒரு நாளை ஃபிக்ஸ் செய்து அதை வழக்கமான நாட்களை காட்டிலும் சிறப்பாக்கலாம் என்ற அடிப்படையில் காதலர் தினத்தை நாம் கொண்டாடலாம்.

காதலர் தினத்திற்காகவே காத்திருந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த நாளையொட்டிய வணிகமும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. காதலையும் காதலர்களையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஆதாம் -ஏவாள் காலத்திலிருந்து அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது காதல். காதலர்கள் தொடர்ந்து தம்பதிகளாவதும், அப்படி இல்லையென்றாலும் காதல் கொடுக்கும் வலியிலேயே காலத்தை தள்ளுவதும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காதல் கதை இருக்கத்தான் செய்கிறது. காதல் வாழ்க்கை இனிக்க வேண்டுமென்றால் சரியான புரிதலுடன்கூடிய காதல் அவசியம் என்பதையும் காதலும் காதல் தோல்விகளும் தொடர்ந்து உணரவைத்து வருகின்றன.

Valentines day celebrations happening worldwide and lovers celebrations with Love songs

காதலர் தினம்: காதலர் தினம் சர்வதேச அளவில் மிகவும் கொண்டாட்டமான பொழுதுகளை கொடுத்து வருகிறது. காதலாகி கசிந்துருகி பல நாட்களாக, மாதங்களாக ஏன் வருடங்களாக தன்னுடைய காதலை சொல்ல முடியாத அவஸ்தையில் அதிகமான காதலர்கள் இந்த தினத்திற்காக காத்திருந்து தன்னுடைய காதலை எப்படியாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்று தவித்து வருகின்றனர். காதலர் தினத்தையொட்டி அதன் குறியீடுகளாக இனிப்புகள், பலவகையான பரிசுகள் என சந்தையும் ஒருபுறத்தில் காதலர்களுக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. ஆன்லைன் முதல் ஆப்லைன் வரை ஏராளமான பரிசுகள் அவரவர் பட்ஜெட்டிற்கு தகுந்தபடி கொட்டிக் கிடக்கின்றன.

இசையுடன் கைக்கோர்க்கும் காதல்: காதல் என்றால் இசை இல்லாமலா, குறிப்பாக சினிமாவில் காதலை மையமாக கொண்டு அதிகமான படங்கள் வந்து அனைத்து தரப்பினரையும் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. ஆக்ஷன் படங்களிலும் காதல் காட்சிகள் இல்லாமல் படமே இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. ஆக்ஷன் காதலர்களாக இருந்தாலுமே வெறுமனே சண்டைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது சலிப்பையே ஏற்படுத்தும். அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்த காதல் பாடல்கள் வெளியாகி அதிகமான கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் சினிமாவில் அதிகமான காதல் பாடல்களை கொடுத்துள்ள இளையராஜா முதல் தற்போதைய இசையமைப்பாளர்கள் வரை அதிகமாக காதல் பாடல்களை கொடுத்துள்ளனர்.

காதல் பாடல்கள்: கடந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிகமாக ரசிகர்களை ஈர்த்து யூடியூபிலும் அதிக வியூஸ்களை பெற்ற சில காதல் பாடல்களை தற்போது பார்க்கலாம். ஏஆர் ரஹ்மான் இசையில் அடுத்தடுத்த படங்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மாமன்னன் படத்தில் வெளியான நெஞ்சமே பாடல் அதிகமான ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பாடலை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான அகநக பாடலும் இனிமையான காதலை கண்முன்னே கொண்டுவந்தது. கார்த்தி -திரிஷாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வெளியாக இந்தப் பாடலும் காரணமாக அமைந்தது.

காதலும் இளையராஜாவும்: தொடர்ந்து இளையராஜா இசையில் வெளியான விடுதலை படத்தின் வழிநெடுக காட்டுமல்லி பாடலும் கடந்த ஆண்டில் அதிகமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்தது. இளையராஜா இசையில் வெளியான இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, காதல் பாடல்கள் என்றால் அது இளையராஜா தான் என்பதை மீண்டும் நிரூபித்தது. சூரி -பவானிஸ்ரீ நடிப்பில் வெளியான இந்தப் பாடலை இளையராஜாவே எழுதி இசையமைத்திருந்தார்.

வரவேற்பை பெறும் காதல் பாடல்கள்: கடந்த ஆண்டில் அதிகமான கவனத்தை பெற்ற மற்றொரு பாடல் நான் காலி. இந்தப் பாடல் குட் நைட் படத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஷான் ரோல்டன் இசையில் இனிமையான மெலடி காதலுக்கு மிகவும் முக்கியம் என்பதை நிரூபித்தது இந்தப் பாடல். ஷால் ரோல்டனின் குரலில் இந்தப் பாடல் இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இதேபோல திபு நினன் தாமஸ் இசையில் உருவான சித்தா படத்தின் கண்கள் ஏதோ பாடலும் மிகச்சிறப்பான வரவேற்பை காதலர்களிடையே பெற்றது. சித்தார்த் மற்றும் நிமிஷா இடையிலான மெல்லிய காதலை அதே பாணியில் வெளிப்படுத்தியது இந்தப் பாடல்.

உருக வைத்த பாடல்கள்: முன்னதாக பல காதல் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் கணவன் -மனைவி காதலை பிரிவை மிகச்சிறப்பாக ரசிகர்களுக்கு கடத்தியது. இதேபோல அனிருத் இசையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வெளியாகும் நான் பிழை, நீ மழலை பாடல் ரசிகர்களை உருகச் செய்தது. படங்களில் மட்டுமிலலாமல் தனியாக ஆல்பம் பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாகி வருகின்றன. இத்தகைய பாடல்களின் துணை கொண்டு காதலை கொண்டாடுவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X