காதலர் தினம் 2025.. ரோஸ் டே ஸ்பெஷல் பாடல்கள்..உங்களுக்கு பிடித்த பாடல் எது?

சென்னை: காதல் என்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.. என்று பாடலுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினமாக பிப்ரவரி 14ந் தேதி மனதில் நிறைந்து இருக்கும் காதலை வெளிப்படுத்தும் நாளாக அமைந்துள்ளது. இந்த நாளில், புரோபோஸ் செய்தால் நிச்சயம் அந்த காதல் வெற்றி பெறும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.

அப்படி போற்றுவதற்குரிய நாளை காதலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளையில் இருந்து கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 7ந் தேதி ரோஸ் தினத்துடன் தொடங்கி, ப்ரபோஸ் தினம், சாக்லேட் தினம், டெடி டே, பிராமிஸ் டே, ஹக் தினம் மற்றும் கிஸ் தினம் இறுதியாக பிப்ரவரி 14 ந் தேதி காதலர் தினத்துடன் முடிவடைகிறது. காதலர் தினம் என்று வந்துவிட்டால், அதில் ரோஜாவிற்கு தான் முதல் பங்கு அப்படி ரோஜா மலரை கொண்டாடிய பாடல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

valentines day 2025 rose day 2025

ரோஜா ரோஜா: காதலர் தினம் என்று வந்துவிட்டாலே, இந்த நாளில் அனைவரின் நினைவிற்கு வரும் முதல் பாடல் காதலர் தினம் திரைப்படத்தில் வரும் ரோஜா ரோஜா ரோஜா பாடல் தான். 1999ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் குணால்,சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இன்றைய தலைமுறையினருக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடலாக இருக்கிறது.

காதல் ரோஜாவே: காதலை வெளிப்படுத்த, காதலை கொண்டாட பல பாடல்கள் இருந்தாலும், காதலின் வலியைச் சொல்ல இந்த பாடலை அடித்துக்கொள்ள முடியாது. 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மனைவியின் பிரிவை நினைத்து வாடும் காதல் ரோஜாவே என்ற பாடலுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த பாடலை S.P. பாலசுப்பிரமணியம் பாட வைரமுத்து பாடலை எழுதி இருந்தார்.

ரோசு ரோசு அழகான ரோசு நீ: 2009ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் படிக்காதவன். இத்திரைப்படத்தை சுராஜ் எழுதி இயக்க இதில், தனுஷ், தமன்னா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும்,ரோசு ரோசு அழகான ரோசு நீ பாடல், இளசுகளுக்கு ஒரு வைப் தரும் பாடலாகும் இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைக்க, தபு ஷங்கர் பாடல் எழுத, கே.ஜி. ரஞ்சித், ஜெய் பாடி இருந்தார்.

ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ: சூர்யவம்சம் திரைப்படத்தில் வரும் ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். இந்த திரைப்படத்தில் சரத்குமார்,தேவயானி,ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.ரோஜா பூ சின்ன ரோஜாப்பூ பாடலை, ரா. ரவிசங்கர் எழுத, ஹரிஹரன் பாடி இருந்தார். இந்த பாடலுக்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X