»   »  நயனதாரா-சிம்பு உதட்டு கடி: போலீஸ் வழக்கு!!

நயனதாரா-சிம்பு உதட்டு கடி: போலீஸ் வழக்கு!!

Subscribe to Oneindia Tamil

சிலம்பரசன், நயன்தாரா ஆகியோர் நடிக்கும் வல்லவன் படத்தின் பிரமாண்டமான உதட்டுக் கடி போஸ்டர்களை போலீஸார் அகற்றினர்.

பி.எல். தேனப்பன் தயாரிக்க சிம்புவே திரைக்கதை எழுதி, இயக்கும் படம் வல்லவன். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமா சென்,சந்தியா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நயனதாராவின் கீழுதட்டை சிம்பு கடித்து இழுப்பது போன்ற மகா கிக்கான சுவரொட்டிகள் சென்னையில் பல இடங்களில்ஒட்டப்பட்டன. வழக்கமான சைஸை விட மெகா சைசில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த குளோஸ்-அப் உதட்டுக் கடி போஸ்டர்கள் அசோக் நகர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அடையார் ஆகிய பகுதிகளின்பெரிய சுவர்களை ஆக்கிரமித்திருந்தன.


வல்லவன் படத் தொடக்க விழாவில் சிலம்பரசன், டி.ராஜேந்தர், சந்தியா மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர்.

மேலும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்திலும்ஒட்டப்பட்டிருந்தன.

இந்த போஸ்டர்களைக் கடந்து சென்ற பொது மக்கள் முகச் சுளிக்க நேர்ந்தது. இது குறித்து போலீசாருக்கும் சிலர் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி வல்லவன் பட சுவரொட்டிகளை கிழித்தெறிந்தனர். இந்த சுவரொட்டிதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆபாசமான சுவரொட்டிகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர்நட்ராஜ் எச்சரித்துள்ளார். ஆனால், இப்போது அதிமுகவுக்கு ஜிங்-சக் என ஜால்ரா போட்டு வருகிறார் டி.ராஜேந்தர் என்ற விஜயடி.ராஜேந்தர்.

இதனால் சிம்பு தரப்பு மீது போலீசார் நடவடிக்கை எடுப்பது சந்தேகமாகவே உள்ளது. வழக்கைப் போட்டதோடு போலீசார்அமைதியாகிவிடுவர் என்றே தெரிகிறது.

அதே போல ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆபாச காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாகஇந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 294 (ஏ)வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுபள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil