»   »  த்ரிஷா மூலம் ஸ்ரீகாந்தை பிடித்த வந்தனா!!

த்ரிஷா மூலம் ஸ்ரீகாந்தை பிடித்த வந்தனா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:தன்னையும் ஸ்ரீகாந்தையும் பிரிக்க கீதா என்ற பெண்மணி முயல்வதாக ஸ்ரீகாந்தை ரகசியமாய் மணந்த வந்தனா கூறியுள்ளார்

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்யாணம் நின்று போனது. இந் நிலையில் புதன்கிழமை இரவு அதிரடி நிகழ்வுகள் அரங்கேறின.

பெட்டி, படுக்கையுடன் வடபழனி குமரன் காலனியில் உள்ள வீட்டுக்கு வந்தார் வந்தனா. எனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் கல்யாணமாகி விட்டது. அவருடன்தான் நான் வசிப்பேன் என்று கூறியபடி வீட்டுக்குள் புகுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் அங்கிருந்து வெளியேறி திருப்பதிக்கு தப்பி ஓடி விட்டார்.

ஸ்ரீகாந்த்தின் பெற்றோரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். வீட்டில் இப்போது 84 வயதாகும் ஸ்ரீகாந்த்தின் பாட்டி, சித்தப்பா நரசிம்மன், வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்து விட்டாலும் கூட வீட்டின் வரவேற்பரையிலேயே தங்கியுள்ளார் வந்தனா. அங்குதான் சாப்பிடுகிறார், தூங்குகிறார்.

வந்தனா மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த்தின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வந்தனா சார்பில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அதில், தனக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டதாக வந்தனா கூறியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களையும் போலீஸாரிடம் கொடுத்தார் வந்தனா. மேலும், பத்திரிக்கை நிருபர்களையும் அழைத்து இதுகுறித்து விலாவரியாக விளக்கி, புகைப்படங்களையும் கொடுத்தார்.

அந்தப் புகைப்படங்களில் திருமண சம்பிரதாயங்கள் நடப்பது போலவும், ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் மணக்கோலத்தில் இருப்பது போலவும், புரோகிதர் மந்திரம் முழங்குவது போலவும் உள்ளன.

இந்தப் புகாரைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் வீட்டுக்கு போலீஸார் வந்தனர். அங்கிருந்த வந்தனாவிடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டு சென்றனர்.

வந்தனா கொடுத்த வாக்குமூலத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

திரிஷா மூலம் வந்த காதல் ..

அண்ணா நகரில் வாடகை வீட்டில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். பள்ளிப் படிப்பை ஊட்டியில் படித்தேன். பின்னர் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியாவில் படித்தேன்.

படிப்பை முடித்து விட்டு சென்னையில் இருந்தபோது நடிகை திரிஷாவின் நட்பு கிடைத்தது. இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனோம். கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி எனது பிறந்த நாள் வந்தது. இதை சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடினோம்.

இந்த விழாவுக்கு ஸ்ரீகாந்த்தும் வந்தார். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. திரிஷாதான் என்னை ஸ்ரீகாந்த்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதே நான் அவரைக் காதலிக்க ஆரம்பித்தேன்.

அதன் பின்னர் இருவரும் அவ்வப்போது வெளியில் சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தோம். இருவரும் எங்களது காதலை மனதுக்குள் வைத்திருந்தோம். ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. பின்னர் அவர்தான் முதலில் சொன்னார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். 6 மாதம் இருவரும் காதலித்தோம்.

பிறகு எங்களது காதலை எனது பெற்றோரிடம் சொன்னேன். நடிகர் என்பதால் முதலில் அவர்கள் தயங்கினர். பின்னர் சம்மதித்தனர். ஆனால் தமிழ் ஐயங்கார் பிராமணர் ஆன தனக்கும், தெலுங்கு ரெட்டி வகுப்பைச் சேர்ந்த உனக்கும் கல்யாணம் நடக்க எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

அதேசமயம், தனக்கு தூரத்து உறவில் அக்கா முறை வரும் கீதாவிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விடுகிறேன்ன் என்று கூறியிருந்தார். இதையடுத்து நான் எனது பெற்றோருடன் கீதாவை சந்தித்தேன். அப்போது திருமணத்திற்கு நான் பொறுப்பு என்றார் கீதா.

ஆனால் திடீரென ஒரு நாள் ஸ்ரீகாந்த்தின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்றார் கீதா. பின்னர் அவரே ஒரு ஐடியாவும் கொடுத்தார். அதன்படி ஆந்திராவில் வைத்து இருவருக்கும் ரகசியமாக கல்யாணம் செய்து வைப்பதாகவும், பிறகு வெளிப்படையாக கல்யாணம் நடத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காக்கிநாடாவில் பிப்ரவரி மாதம் 7ம் தேதி வேணுகோபாலசாமி கோவிலில் வைத்து எங்களது கல்யாண நடந்தது. கேதார் ஈஸ்வரராவ் என்பவர் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்து முறைப்படி கல்யாணம் நடந்தது. எனக்குத் தாலி கட்டினார் ஸ்ரீகாந்த். ரகசியக் கல்யாணம் என்பதால் எங்களுக்குள் முதலிரவு எதுவும் நடக்கவில்லை.

கல்யாணத்திற்குப் பிறகு நான் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன். அலைபாயுதே ஸ்டைலில் நானும், அவரும் அவரவர் வீடுகளில் வசித்து வந்தோம். இருப்பினும் ஸ்ரீகாந்த் அவ்வப்போது எனது வீட்டுக்கு வந்து செல்வார். உடலாலும், மனதாலும் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இந் நிலையில் கீதாவின் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஸ்ரீகாந்த்தின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதித்தனர். மார்ச் 19ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 18ம் தேதி திருமணத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இந் நிலையில்தான் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் திடீரென பல்வேறு புகார்களைக் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டனர். எனது திருமணம் நிற்க கீதாதான் காரணம். அவர் ஸ்ரீகாந்த்தை வைத்து ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் பணப் பற்றாக்குறை வந்துள்ளது. இதை எனது பெற்றோரிடமிருந்து வசூலிக்க முடிவு செய்தார். காக்கி நாடாவில் நடந்த திருமணத்திற்கான செலவாக ரூ. இரண்டரை லட்சம் பணத்தைக் கேட்டார். ஆனால் எனது பெற்றோர் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தனர். பின்னர் சாந்தி ஹோம பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பத்தரை லட்சம் கேட்டார். அதைக் கொடுக்க எனது பெற்றோர் மறுத்து விட்டனர்.

இந்தக் கோபத்தில்தான் கல்யாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். ஸ்ரீகாந்த் நல்லவர். என் மீது பாசமாக உள்ளார். கட்டிய சேலையோடு வா என்று கூறியவர். அவர் மீது எந்தத் தவறும் இல்லை. ஆனால் கீதாதான் கேட்ட பணம் கிடைக்காததால், கல்யாணத்தை தடுத்து விட்டார்.

இப்போது ஸ்ரீகாந்த்தின் மனைவி என்ற உரிமையில் வீட்டுக்கு வந்துள்ளேன். புதன்கிழமை இரவு முழுவதும் அவர் என்னுடன் நல்லபடியாகத்தான் பேசிக் ெகாண்டிருந்தார். ஆனால் அவரது பெற்றோர்தான் வற்புறுத்திக் கூட்டிச் சென்று விட்டனர்.

ஸ்ரீகாந்த், அவரது பெற்றோர் மீது எந்தத் தவறும் இல்லை. அவர்கள் மீது வழக்கு போட வேண்டாம். கீதாதான் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று கூறியுள்ளார் வந்தனா.

இந்த பரபரப்பு புகார் தொடர்பாக போலீஸார் கூறுகையில், ஸ்ரீகாந்த், வந்தனா கொடுத்த புகார்களின் பேரில் விசாரணை நடத்தப்படும். ஸ்ரீகாந்த்திடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.

ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more