வாணி .. அம்மம்மா! ஒரு காலத்தில் திம்சுக் கட்டையாக மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியதிரையுலகையே உலுக்கி வந்த வாணி விஸ்வநாத்துக்கு தமிழில் அம்மா, அண்ணிகேரக்டர்கள் குவிந்து வருகின்றன.மலையாளத்து சேச்சியான வாணி விஸ்வநாத் ஆரம்பத்தில் அழகானஹீரோயினாகத்தான் அறிமுகமானார். ஏகப்பட்ட மலையாளப் படங்களில்நடித்தவரான வாணி, தமிழ், தெலுங்கிலும் நடித்தார்.தமிழ் அவருக்கு பெரிய அளவில் கை கொடுககவில்லை. ஆனால் தெலுங்கில் புதியஅவதாரத்துடன் கலக்க ஆரம்பித்தார்.விஜயசாந்தி பாணியில் அதிரடி ஆக்ஷன் வேடங்களில் தெலுங்கில் கணிசமானபடங்களில் நடித்த வாணி விஸ்வநாத், வயதும், உடம்பும் கட்டுக் கடங்காமல் ஏறத்தொடங்கியதால் வாய்ப்பிழக்கத் தொடங்கினார்.இதனால் இடையில் காணாமல் போய் விட்ட வாணி விஸ்வநாத், மலையாளம் மற்றும்தெலுங்கு டிவி சீரியல்களில் தலை காட்டத் தொடங்கினார். இப்போது மீண்டும்தமிழுக்குத் திரும்பி வந்துள்ளார்.ஆனால் ஹீரோயினாக நடித்து பயமுறுத்தாமல் அம்மா வேடத்துக்குத் தாவியுள்ளார்.சரண் இயக்கத்தில் உருவான இதயத்திருடன் படத்தில் அடங்காப்பிடாரி அம்மாவாகவந்து அடித்துத் துவம்சம் செய்தார்.யாருக்கும் அடங்காத அதிரடி அம்மாவாக அதில் நடித்த நேரமோ என்னவோஇப்போது நிறைய அம்மா, அண்ணி, அக்கா கேரக்டர்கள் வாணியைத் தேடி ஓடிவருகிறதாம்.இது பற்றி வாணியிடம் கேட்டால்,ஹீரோயினாக நடித்த எனக்கு அம்மா வேடத்தில் நடிக்க முதலில் விருப்பமே இல்லை.ஆனால் இதயத் திருடன் படத்தில் எனது கேரக்டரை இயக்குனர் சரண் விவரித்தபோது,சந்தோஷமாகி உடனடியாக ஒத்துக் கொண்டேன்.நிஜத்தில் நான் யாருக்கும் பயப்படாத, அடங்காத பெண். அதேபோன்ற கேரக்டர்தான்சரண் சொன்ன கேரக்டரும் என்பதால் உடனடியாக அதை ஏற்று நடித்தேன்.இப்போது நிறையப் பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அழுவாச்சி அம்மாவாகநான் ஒருபோதும் நடிக்க மாட்டேன். தமிழ் சினிமாக்களில்தான் அம்மா கேரக்டர்களைஅழுமூஞ்சிகளாக காட்டுகிறார்கள்.அம்மா, அண்ணி, வில்லின்னு வருகிற கேரக்டர்களை எல்லாம் ஒத்துக் கொள்ளமாட்டேன். இயக்குனர் யார், என்னோட கேரக்டரின் வெயிட் என்ன என்பதைப்பார்த்துத்தான் தொடர்ந்து நடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வேன்என்கிறார் வாணி.தமிழில் நடிப்பது ஒருபக்கம் இருக்க மலையாளத்திலும் குணச்சித்திர நடிகையாகசெகண்ட் இன்னிங்க்ஸில் கலக்கி வருகிறார் வாணி விஸ்வநாத்.

By Staff
ஒரு காலத்தில் திம்சுக் கட்டையாக மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியதிரையுலகையே உலுக்கி வந்த வாணி விஸ்வநாத்துக்கு தமிழில் அம்மா, அண்ணிகேரக்டர்கள் குவிந்து வருகின்றன.

மலையாளத்து சேச்சியான வாணி விஸ்வநாத் ஆரம்பத்தில் அழகானஹீரோயினாகத்தான் அறிமுகமானார். ஏகப்பட்ட மலையாளப் படங்களில்நடித்தவரான வாணி, தமிழ், தெலுங்கிலும் நடித்தார்.

தமிழ் அவருக்கு பெரிய அளவில் கை கொடுககவில்லை. ஆனால் தெலுங்கில் புதியஅவதாரத்துடன் கலக்க ஆரம்பித்தார்.

விஜயசாந்தி பாணியில் அதிரடி ஆக்ஷன் வேடங்களில் தெலுங்கில் கணிசமானபடங்களில் நடித்த வாணி விஸ்வநாத், வயதும், உடம்பும் கட்டுக் கடங்காமல் ஏறத்தொடங்கியதால் வாய்ப்பிழக்கத் தொடங்கினார்.

இதனால் இடையில் காணாமல் போய் விட்ட வாணி விஸ்வநாத், மலையாளம் மற்றும்தெலுங்கு டிவி சீரியல்களில் தலை காட்டத் தொடங்கினார். இப்போது மீண்டும்தமிழுக்குத் திரும்பி வந்துள்ளார்.

ஆனால் ஹீரோயினாக நடித்து பயமுறுத்தாமல் அம்மா வேடத்துக்குத் தாவியுள்ளார்.சரண் இயக்கத்தில் உருவான இதயத்திருடன் படத்தில் அடங்காப்பிடாரி அம்மாவாகவந்து அடித்துத் துவம்சம் செய்தார்.

யாருக்கும் அடங்காத அதிரடி அம்மாவாக அதில் நடித்த நேரமோ என்னவோஇப்போது நிறைய அம்மா, அண்ணி, அக்கா கேரக்டர்கள் வாணியைத் தேடி ஓடிவருகிறதாம்.

இது பற்றி வாணியிடம் கேட்டால்,

ஹீரோயினாக நடித்த எனக்கு அம்மா வேடத்தில் நடிக்க முதலில் விருப்பமே இல்லை.ஆனால் இதயத் திருடன் படத்தில் எனது கேரக்டரை இயக்குனர் சரண் விவரித்தபோது,சந்தோஷமாகி உடனடியாக ஒத்துக் கொண்டேன்.

நிஜத்தில் நான் யாருக்கும் பயப்படாத, அடங்காத பெண். அதேபோன்ற கேரக்டர்தான்சரண் சொன்ன கேரக்டரும் என்பதால் உடனடியாக அதை ஏற்று நடித்தேன்.

இப்போது நிறையப் பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அழுவாச்சி அம்மாவாகநான் ஒருபோதும் நடிக்க மாட்டேன். தமிழ் சினிமாக்களில்தான் அம்மா கேரக்டர்களைஅழுமூஞ்சிகளாக காட்டுகிறார்கள்.

அம்மா, அண்ணி, வில்லின்னு வருகிற கேரக்டர்களை எல்லாம் ஒத்துக் கொள்ளமாட்டேன். இயக்குனர் யார், என்னோட கேரக்டரின் வெயிட் என்ன என்பதைப்பார்த்துத்தான் தொடர்ந்து நடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வேன்என்கிறார் வாணி.

தமிழில் நடிப்பது ஒருபக்கம் இருக்க மலையாளத்திலும் குணச்சித்திர நடிகையாகசெகண்ட் இன்னிங்க்ஸில் கலக்கி வருகிறார் வாணி விஸ்வநாத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X