Exclusive - நிறைய கடன்.. என் குடும்பத்தில் நடிக்கிறார்கள்.. வனிதா விஜயகுமார் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: வனிதா விஜயகுமார் இப்போது Mrs&Mr என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். அவருடன் ராபர்ட் மாஸ்டர், கிரண், ஷகிலா என பலர் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11ஆம் தேதி (நாளை மறுநாள்) படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு வனிதா விஜயகுமார் பிரத்யேகமாக கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா 90களில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு சில காலம் வாழ்ந்து அதிலிருந்து வெளியே வந்த வனிதா; மூன்றாவதாகவும் திருமணம் செய்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையும் சரியாக போகவில்லை.
மகளும் ஃபேமஸ்: இதற்கிடையே வனிதாவுக்கு ஜோவிகா என்ற மகள் இருக்கிறார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழடைந்தார். பிக்பாஸில் கலந்துகொண்டபோது அவரது அவரது நடவடிக்கைகள், பேச்சுக்களை பார்க்கும்போது அப்படியே வனிதா போன்றே போல்டாக பேசுகிறார் என்ற கருத்து பலரிடம் நிலவியது. அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் Mrs&Mr படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

படம் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க பி.வாசுவிடம் சில வருடங்கள் உதவி இயக்குநராக இருந்த வனிதா விஜயகுமார் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பதன் காரணமாக Mrs&Mr படத்தின் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. படமானது ஜூலை 11ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் எல்லாம் நம்பிக்கையூட்டும்படியாகவே இருக்கிறது. எனவே வனிதா இயக்குநராக வெல்வார் என்ற கருத்துதான் பலரிடம் நிலவிவருகிறது.
குடும்ப பஞ்சாயத்து: இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க வனிதாவுக்கும் அவரது தந்தை விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு நிலவிவருகிறது. குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் என்று வனிதா எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணாகிப்போனது. இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு வனிதா கொடுத்த பிரத்யேக பேட்டியில் தனது குடும்ப பஞ்சாயத்து பற்றியும் குடும்பம் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
வனிதாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. எனது குடும்பத்தினரும் அப்படித்தான். தூங்குவது போல் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். சரி நாம் இன்டஸ்ட்ரியில் நடிக்கிறோம்; அவர்கள் ரியல் வாழ்க்கையில் நடிக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். எனது மகள் ஜோவிகாவை பார்த்தால் எனது சகோதரி ப்ரீத்தாவை பார்ப்பது போல்தான் இருக்கும்.
அப்படித்தான் கூப்பிடுவேன்: ப்ரீத்தாவை பார்த்தால் ஜோவிகாவின் முகமும், ஜோவிகாவை பார்த்தால் ப்ரீத்தாவின் முகமும்தான் எனக்கு நியாபகத்துக்கு வரும். சமயங்களில் ஜோவிகாவை ப்ரீத்தா என்றே கூப்பிடுவேன். மக்கள் எனக்கு நிறைய அன்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை நான் நிறைய கடன் வாங்கித்தான் செய்திருக்கிறேன். செட்டிலான பிறகு இந்த வேலையை நான் செய்யவில்லை.இந்தப் படத்தை பார்த்துவிட்டு மக்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











