»   »  விவாகரத்து கேட்கும் வனிதா

விவாகரத்து கேட்கும் வனிதா

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய்குமாரின் மகளான நடிகை வனிதா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

கோலிவுட்டில் கலைக்குடும்பம் என வர்ணிக்கப்படும் விஜய்குமார்-மஞ்சுளா வீட்டுப் பெண்ணான வனிதா,மாணிக்கம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். ஆனால், நடிப்பே தெரியாத இவரால் தொடர்ந்து சினிமாவில்நிலைக்க முடியவில்லை. சந்திரலேகா உள்பட சில படங்களில் நடித்ததோடு பீல்ட் அவுட் ஆனார்.

இதன் பின்னர் ஒரு சில டி.வி தொடர்களிலும் நடித்தார். ஒரு தொடரில் நடித்தபொழுது அந்த தொடரின் நாயகனான ஆகாஷ்என்ற ஆனந்துக்கும் வனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம்நடந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந் நிலையில் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். சுமூகமாகப் பிரிந்துவிடுவதாகஇருவரும் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பல நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆகாசும் வனிதாவும்ஆஜராகினர். இருவரிடமும் பேசிய நீதிபதி ஆறுமுகம் விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து இருவரும் ஒரே காரில் கிளம்பிச் சென்றனர். இருவரும் சேர்ந்தே வந்தனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. சீனாவில் படித்துள்ள வனிதா ஒரு வாஸ்து நிபுணர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Read more about: vanitha asks for divorce
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil