»   »  மலையாள சினிமா: சாடும் வசந்த் மலையாளத் திரையுலகினருக்கு ஏகப்பட்ட தேசிய விருதுகளை அள்ளிக் கொடுத்தாகிவிட்டது. இதற்கு மேலும் தங்களைப் புறக்கணிப்பதாக மலையாள திரையுலகினர்புலம்புவதில் நியாயமே இல்லை என்று இயக்குனர் வசந்த் சாடியுள்ளார்.சமீபத்தில் துபாயில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில்மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களுக்கு விருது ஏதும்கொடுக்கப்படவில்லை. இதை அந்த விழா மேடையிலேயே நடிகர் மம்முட்டிகடுமையாக விமர்சித்தார்.மம்முட்டியின் இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில் மோகன்லாலும் ஆமோதித்துப் பேட்டிகொடுத்தார்.மேலும் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில்பேசிய மம்முட்டி, இந்த விழாவை தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாஎன்று அழைப்பதே தவறு. இந்தி படங்கள் மட்டும்தான் இந்தியப் படங்கள் என்றுஅர்த்தமா?அவர்கள் (இந்திக்காரர்கள்) என்னை தென்னிந்திய நடிகர் என்று அழைத்தால், நான்அவர்களை வட இந்திய நடிகர்கள் என்றுதான் அழைப்பேன் என்று சூடு கொடுத்தார்.இப்படி மம்முட்டியும், மோகன்லாலும் இந்தி சினிமாக்காரர்களை போட்டுத் தாக்கிவரும் நிலையில் இயக்குனர் வசந்த் வேறு மாதிரியாகப் பேசுகிறார்.இந்தி திரையுலகம் தென்னிந்தியத் திரையுலகை புறக்கணிக்கிறதா, இரண்டாம் தரமாகநடத்துகிறதா என்று கேட்டபோது வசந்த் பொறுமித் தள்ளி விட்டார்.நான் தேசிய விருதுக்கான தேர்வுக் கமிட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தபோதுநல்ல முறையில்தான் விருதுக்குரிய கலைஞர்களைத் தேர்வு செய்தார்கள். யாரும்பரிந்துரை என்று யாரையும் நாடவில்லை.மொத்தம் 18 விருதுகள் கொடுக்கப்பட்டன. அதில் 9 விருதுகள்மலையாளத்துக்குத்தான் கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவுக்கு வெறும் 4 விருதுகள்மட்டுமே கிடைத்தது. பெருமுழக்கம் என்ற மலையாளப் படம்தான் சிறந்த தேசியப்படமாக தேர்வானது.இந்தத் தேர்வை நியாயமற்றது என்று மோகன்லாலும், மம்முட்டியும் கூறவிரும்புகிறார்களா? மலையாளப் படங்களுக்கு நிறைய விருதுகளை அள்ளிக்கொடுத்தாகி விட்டது.இனியாவது பிற மொழிப் படங்களுக்கு விருதுகள் கிடைக்கட்டுமே என்கிறார் வசந்த்படு கோபமாக. வசந்த் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.குடையைப் பிடித்துக் கொண்டு நடந்து போவதையும், எச்சில் துப்புவதையும்,திரும்பிப் பார்ப்பதையும், குறட்டை விடுவதையும், தண்ணீர் இறைப்பதையும் பலநிமிடங்களுக்குக் காட்டிக் காட்டியே விருதுகளை வாங்கிக் குவித்து விட்டவைமலையாளப் படங்கள்.இப்படிப்பட்ட படங்களை கலைப் படங்கள் என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.இனியாவது, இயல்பான, மக்களுக்குப் பிடித்த, மக்களின் வரவேற்பைப் பெற்றபடங்களுக்கு விருது கிடைக்கட்டுமே.

மலையாள சினிமா: சாடும் வசந்த் மலையாளத் திரையுலகினருக்கு ஏகப்பட்ட தேசிய விருதுகளை அள்ளிக் கொடுத்தாகிவிட்டது. இதற்கு மேலும் தங்களைப் புறக்கணிப்பதாக மலையாள திரையுலகினர்புலம்புவதில் நியாயமே இல்லை என்று இயக்குனர் வசந்த் சாடியுள்ளார்.சமீபத்தில் துபாயில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில்மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களுக்கு விருது ஏதும்கொடுக்கப்படவில்லை. இதை அந்த விழா மேடையிலேயே நடிகர் மம்முட்டிகடுமையாக விமர்சித்தார்.மம்முட்டியின் இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில் மோகன்லாலும் ஆமோதித்துப் பேட்டிகொடுத்தார்.மேலும் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில்பேசிய மம்முட்டி, இந்த விழாவை தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாஎன்று அழைப்பதே தவறு. இந்தி படங்கள் மட்டும்தான் இந்தியப் படங்கள் என்றுஅர்த்தமா?அவர்கள் (இந்திக்காரர்கள்) என்னை தென்னிந்திய நடிகர் என்று அழைத்தால், நான்அவர்களை வட இந்திய நடிகர்கள் என்றுதான் அழைப்பேன் என்று சூடு கொடுத்தார்.இப்படி மம்முட்டியும், மோகன்லாலும் இந்தி சினிமாக்காரர்களை போட்டுத் தாக்கிவரும் நிலையில் இயக்குனர் வசந்த் வேறு மாதிரியாகப் பேசுகிறார்.இந்தி திரையுலகம் தென்னிந்தியத் திரையுலகை புறக்கணிக்கிறதா, இரண்டாம் தரமாகநடத்துகிறதா என்று கேட்டபோது வசந்த் பொறுமித் தள்ளி விட்டார்.நான் தேசிய விருதுக்கான தேர்வுக் கமிட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தபோதுநல்ல முறையில்தான் விருதுக்குரிய கலைஞர்களைத் தேர்வு செய்தார்கள். யாரும்பரிந்துரை என்று யாரையும் நாடவில்லை.மொத்தம் 18 விருதுகள் கொடுக்கப்பட்டன. அதில் 9 விருதுகள்மலையாளத்துக்குத்தான் கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவுக்கு வெறும் 4 விருதுகள்மட்டுமே கிடைத்தது. பெருமுழக்கம் என்ற மலையாளப் படம்தான் சிறந்த தேசியப்படமாக தேர்வானது.இந்தத் தேர்வை நியாயமற்றது என்று மோகன்லாலும், மம்முட்டியும் கூறவிரும்புகிறார்களா? மலையாளப் படங்களுக்கு நிறைய விருதுகளை அள்ளிக்கொடுத்தாகி விட்டது.இனியாவது பிற மொழிப் படங்களுக்கு விருதுகள் கிடைக்கட்டுமே என்கிறார் வசந்த்படு கோபமாக. வசந்த் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.குடையைப் பிடித்துக் கொண்டு நடந்து போவதையும், எச்சில் துப்புவதையும்,திரும்பிப் பார்ப்பதையும், குறட்டை விடுவதையும், தண்ணீர் இறைப்பதையும் பலநிமிடங்களுக்குக் காட்டிக் காட்டியே விருதுகளை வாங்கிக் குவித்து விட்டவைமலையாளப் படங்கள்.இப்படிப்பட்ட படங்களை கலைப் படங்கள் என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.இனியாவது, இயல்பான, மக்களுக்குப் பிடித்த, மக்களின் வரவேற்பைப் பெற்றபடங்களுக்கு விருது கிடைக்கட்டுமே.

Subscribe to Oneindia Tamil
மலையாளத் திரையுலகினருக்கு ஏகப்பட்ட தேசிய விருதுகளை அள்ளிக் கொடுத்தாகிவிட்டது. இதற்கு மேலும் தங்களைப் புறக்கணிப்பதாக மலையாள திரையுலகினர்புலம்புவதில் நியாயமே இல்லை என்று இயக்குனர் வசந்த் சாடியுள்ளார்.

சமீபத்தில் துபாயில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில்மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களுக்கு விருது ஏதும்கொடுக்கப்படவில்லை. இதை அந்த விழா மேடையிலேயே நடிகர் மம்முட்டிகடுமையாக விமர்சித்தார்.

மம்முட்டியின் இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில் மோகன்லாலும் ஆமோதித்துப் பேட்டிகொடுத்தார்.

மேலும் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில்பேசிய மம்முட்டி, இந்த விழாவை தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாஎன்று அழைப்பதே தவறு. இந்தி படங்கள் மட்டும்தான் இந்தியப் படங்கள் என்றுஅர்த்தமா?

அவர்கள் (இந்திக்காரர்கள்) என்னை தென்னிந்திய நடிகர் என்று அழைத்தால், நான்அவர்களை வட இந்திய நடிகர்கள் என்றுதான் அழைப்பேன் என்று சூடு கொடுத்தார்.

இப்படி மம்முட்டியும், மோகன்லாலும் இந்தி சினிமாக்காரர்களை போட்டுத் தாக்கிவரும் நிலையில் இயக்குனர் வசந்த் வேறு மாதிரியாகப் பேசுகிறார்.

இந்தி திரையுலகம் தென்னிந்தியத் திரையுலகை புறக்கணிக்கிறதா, இரண்டாம் தரமாகநடத்துகிறதா என்று கேட்டபோது வசந்த் பொறுமித் தள்ளி விட்டார்.

நான் தேசிய விருதுக்கான தேர்வுக் கமிட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தபோதுநல்ல முறையில்தான் விருதுக்குரிய கலைஞர்களைத் தேர்வு செய்தார்கள். யாரும்பரிந்துரை என்று யாரையும் நாடவில்லை.

மொத்தம் 18 விருதுகள் கொடுக்கப்பட்டன. அதில் 9 விருதுகள்மலையாளத்துக்குத்தான் கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவுக்கு வெறும் 4 விருதுகள்மட்டுமே கிடைத்தது. பெருமுழக்கம் என்ற மலையாளப் படம்தான் சிறந்த தேசியப்படமாக தேர்வானது.

இந்தத் தேர்வை நியாயமற்றது என்று மோகன்லாலும், மம்முட்டியும் கூறவிரும்புகிறார்களா? மலையாளப் படங்களுக்கு நிறைய விருதுகளை அள்ளிக்கொடுத்தாகி விட்டது.

இனியாவது பிற மொழிப் படங்களுக்கு விருதுகள் கிடைக்கட்டுமே என்கிறார் வசந்த்படு கோபமாக. வசந்த் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

குடையைப் பிடித்துக் கொண்டு நடந்து போவதையும், எச்சில் துப்புவதையும்,திரும்பிப் பார்ப்பதையும், குறட்டை விடுவதையும், தண்ணீர் இறைப்பதையும் பலநிமிடங்களுக்குக் காட்டிக் காட்டியே விருதுகளை வாங்கிக் குவித்து விட்டவைமலையாளப் படங்கள்.

இப்படிப்பட்ட படங்களை கலைப் படங்கள் என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.இனியாவது, இயல்பான, மக்களுக்குப் பிடித்த, மக்களின் வரவேற்பைப் பெற்றபடங்களுக்கு விருது கிடைக்கட்டுமே.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil