»   »  மலையாள வசுந்தரா கொஞ்ச காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி பாட்டு, டான்ஸ், கல்யாணம் என கழித்துக் கொண்டிருந்த வசுந்தரா தாஸ்,மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளார். மலையாளத்தில் தயாராகும் ஒத்தக்கண்ணன் என்ற படத்தில்வசுந்தரா ஹீரோயினாக புக் ஆகியுள்ளார்.ஹே ராம் மூலம் சினிமாவுக்கு எண்ட்ரி ஆனவர் பெங்களூர் பப்பாளி வசுந்தரா தாஸ். அதன் பின்னர் அஜீத்துடன்சிட்டிசன் படத்தில் நடித்தார். குஷி, முதல்வன், அந்நியன் என சில படங்களில் பாடவும் செய்தார். நடிப்பு, பாட்டு என பிசியான அவருக்கு மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களிலும் வாய்ப்புவந்தது. அங்கும் இங்குமாக நடித்து வந்த வசுந்தரா திடீரென நடிப்பை நிறுத்தி விட்டு வெறுமனே பாடல்கள்,மேடை நிகழ்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.பின்னர் கிடாரிஸ்டான தனது நீண்ட நாள் நண்பரையே திருமணம் முடித்துக் கொண்டு சொந்த ஊரானபெங்களூரிலேயே செட்டில் ஆனார் இந்த தமிழ் ஐயங்கார் ஆத்து பெண்.இந் நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் வசுந்தரா தாஸ். ஆனால் தமிழில் அல்ல, மலையாளத்தில்.ஏற்கனவே மோகன்லாலுடன் ராவண பிரபு என்ற படத்தில் நடித்தவர் வசுந்தரா. ஆனால் அப்படம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அப்புறம் மம்முட்டியுடன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார்.சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கவுள்ளார். இப்போது அவர் நடிக்கப் போகும்ஒத்தக்கண்ணன் படத்தில் வசுந்தராவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சீனிவாசன். ஏராளமான மலையாளப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் சீனிவாசன். தர்மபுரி தமிழரான சீனிவாசன், மலையாளத்தில் மிகச்சிறந்த கதாசிரியர் என்ற பெயரைப் பெற்றவர்.இவரது கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான படம்தான் தமிழில் சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமியாக உருமாறி வந்தது. சீனிவாசன், வசுந்தரா தாஸ் நடிக்கவிருக்கும் ஒத்தக்கண்ணன் முழு நீள காமடிப்படமாம். படத்தை இயக்குவது சசிசங்கர். இவர் ஏற்கனவே திலீப் நடித்த குஞ்சிக்கூனன் என்ற படத்தைஇயக்கியவர். இந்தப் படம்தான் தமிழில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் ஆகி சூர்யாவைத் தூக்கி விட்டது.மீண்டும் நடிக்க வந்தாலும் இப்போதைக்கு தமிழில் நடிக்க மாட்டாராம் வசுந்தரா தாஸ். தமிழில் பாடல்கள்மட்டும்தான் பாடுவேன் என்று வறட்டுப் பிடிவாதமாக அம்மணி இருக்கிறார். என்ன காரணம் என்றுதெரியாவிட்டாலும், தன்னை மிகவும் கவர்ச்சியாக காட்டுவதை விரும்பவில்லை, மாறாக எனக்குள் இருக்கும்திறமையை வெளிக்கொணரும் வகையிலான படங்களாக இருந்தால்தான் நடிப்பேன் என்கிறார்.குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில், அவர் பாடி முடித்து விட்டுப் போன பிறகுஹரிணியை வைத்து முக்கல் முனகல்களை இசையமைப்பாளர் தேவா சேர்த்து விட்டதால் கடுப்பாகிப் போனவசுந்தரா, தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது நினைவிருக்கலாம்.

மலையாள வசுந்தரா கொஞ்ச காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி பாட்டு, டான்ஸ், கல்யாணம் என கழித்துக் கொண்டிருந்த வசுந்தரா தாஸ்,மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளார். மலையாளத்தில் தயாராகும் ஒத்தக்கண்ணன் என்ற படத்தில்வசுந்தரா ஹீரோயினாக புக் ஆகியுள்ளார்.ஹே ராம் மூலம் சினிமாவுக்கு எண்ட்ரி ஆனவர் பெங்களூர் பப்பாளி வசுந்தரா தாஸ். அதன் பின்னர் அஜீத்துடன்சிட்டிசன் படத்தில் நடித்தார். குஷி, முதல்வன், அந்நியன் என சில படங்களில் பாடவும் செய்தார். நடிப்பு, பாட்டு என பிசியான அவருக்கு மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களிலும் வாய்ப்புவந்தது. அங்கும் இங்குமாக நடித்து வந்த வசுந்தரா திடீரென நடிப்பை நிறுத்தி விட்டு வெறுமனே பாடல்கள்,மேடை நிகழ்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.பின்னர் கிடாரிஸ்டான தனது நீண்ட நாள் நண்பரையே திருமணம் முடித்துக் கொண்டு சொந்த ஊரானபெங்களூரிலேயே செட்டில் ஆனார் இந்த தமிழ் ஐயங்கார் ஆத்து பெண்.இந் நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் வசுந்தரா தாஸ். ஆனால் தமிழில் அல்ல, மலையாளத்தில்.ஏற்கனவே மோகன்லாலுடன் ராவண பிரபு என்ற படத்தில் நடித்தவர் வசுந்தரா. ஆனால் அப்படம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அப்புறம் மம்முட்டியுடன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார்.சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கவுள்ளார். இப்போது அவர் நடிக்கப் போகும்ஒத்தக்கண்ணன் படத்தில் வசுந்தராவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சீனிவாசன். ஏராளமான மலையாளப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் சீனிவாசன். தர்மபுரி தமிழரான சீனிவாசன், மலையாளத்தில் மிகச்சிறந்த கதாசிரியர் என்ற பெயரைப் பெற்றவர்.இவரது கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான படம்தான் தமிழில் சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமியாக உருமாறி வந்தது. சீனிவாசன், வசுந்தரா தாஸ் நடிக்கவிருக்கும் ஒத்தக்கண்ணன் முழு நீள காமடிப்படமாம். படத்தை இயக்குவது சசிசங்கர். இவர் ஏற்கனவே திலீப் நடித்த குஞ்சிக்கூனன் என்ற படத்தைஇயக்கியவர். இந்தப் படம்தான் தமிழில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் ஆகி சூர்யாவைத் தூக்கி விட்டது.மீண்டும் நடிக்க வந்தாலும் இப்போதைக்கு தமிழில் நடிக்க மாட்டாராம் வசுந்தரா தாஸ். தமிழில் பாடல்கள்மட்டும்தான் பாடுவேன் என்று வறட்டுப் பிடிவாதமாக அம்மணி இருக்கிறார். என்ன காரணம் என்றுதெரியாவிட்டாலும், தன்னை மிகவும் கவர்ச்சியாக காட்டுவதை விரும்பவில்லை, மாறாக எனக்குள் இருக்கும்திறமையை வெளிக்கொணரும் வகையிலான படங்களாக இருந்தால்தான் நடிப்பேன் என்கிறார்.குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில், அவர் பாடி முடித்து விட்டுப் போன பிறகுஹரிணியை வைத்து முக்கல் முனகல்களை இசையமைப்பாளர் தேவா சேர்த்து விட்டதால் கடுப்பாகிப் போனவசுந்தரா, தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது நினைவிருக்கலாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொஞ்ச காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி பாட்டு, டான்ஸ், கல்யாணம் என கழித்துக் கொண்டிருந்த வசுந்தரா தாஸ்,மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளார். மலையாளத்தில் தயாராகும் ஒத்தக்கண்ணன் என்ற படத்தில்வசுந்தரா ஹீரோயினாக புக் ஆகியுள்ளார்.

ஹே ராம் மூலம் சினிமாவுக்கு எண்ட்ரி ஆனவர் பெங்களூர் பப்பாளி வசுந்தரா தாஸ். அதன் பின்னர் அஜீத்துடன்சிட்டிசன் படத்தில் நடித்தார். குஷி, முதல்வன், அந்நியன் என சில படங்களில் பாடவும் செய்தார்.

நடிப்பு, பாட்டு என பிசியான அவருக்கு மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களிலும் வாய்ப்புவந்தது. அங்கும் இங்குமாக நடித்து வந்த வசுந்தரா திடீரென நடிப்பை நிறுத்தி விட்டு வெறுமனே பாடல்கள்,மேடை நிகழ்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


பின்னர் கிடாரிஸ்டான தனது நீண்ட நாள் நண்பரையே திருமணம் முடித்துக் கொண்டு சொந்த ஊரானபெங்களூரிலேயே செட்டில் ஆனார் இந்த தமிழ் ஐயங்கார் ஆத்து பெண்.

இந் நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் வசுந்தரா தாஸ். ஆனால் தமிழில் அல்ல, மலையாளத்தில்.ஏற்கனவே மோகன்லாலுடன் ராவண பிரபு என்ற படத்தில் நடித்தவர் வசுந்தரா. ஆனால் அப்படம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அப்புறம் மம்முட்டியுடன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கவுள்ளார். இப்போது அவர் நடிக்கப் போகும்ஒத்தக்கண்ணன் படத்தில் வசுந்தராவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சீனிவாசன். ஏராளமான மலையாளப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் சீனிவாசன். தர்மபுரி தமிழரான சீனிவாசன், மலையாளத்தில் மிகச்சிறந்த கதாசிரியர் என்ற பெயரைப் பெற்றவர்.


இவரது கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான படம்தான் தமிழில் சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமியாக உருமாறி வந்தது. சீனிவாசன், வசுந்தரா தாஸ் நடிக்கவிருக்கும் ஒத்தக்கண்ணன் முழு நீள காமடிப்படமாம். படத்தை இயக்குவது சசிசங்கர். இவர் ஏற்கனவே திலீப் நடித்த குஞ்சிக்கூனன் என்ற படத்தைஇயக்கியவர். இந்தப் படம்தான் தமிழில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் ஆகி சூர்யாவைத் தூக்கி விட்டது.

மீண்டும் நடிக்க வந்தாலும் இப்போதைக்கு தமிழில் நடிக்க மாட்டாராம் வசுந்தரா தாஸ். தமிழில் பாடல்கள்மட்டும்தான் பாடுவேன் என்று வறட்டுப் பிடிவாதமாக அம்மணி இருக்கிறார். என்ன காரணம் என்றுதெரியாவிட்டாலும், தன்னை மிகவும் கவர்ச்சியாக காட்டுவதை விரும்பவில்லை, மாறாக எனக்குள் இருக்கும்திறமையை வெளிக்கொணரும் வகையிலான படங்களாக இருந்தால்தான் நடிப்பேன் என்கிறார்.

குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில், அவர் பாடி முடித்து விட்டுப் போன பிறகுஹரிணியை வைத்து முக்கல் முனகல்களை இசையமைப்பாளர் தேவா சேர்த்து விட்டதால் கடுப்பாகிப் போனவசுந்தரா, தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil