ஸ்பெஷல்ஸ்
சரியான வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் வையாபுரி. எதற்கு? வடிவேலு, விவேக் அளவுக்கு தானும்பேசப்பட வேண்டும் என்பதற்காகவாம்.
தேனியைச் சேர்ந்த வையாபுரி, தேனீயை விட கடும் உழைப்பாளி. ஆயினும், நிறைய படங்களில் நடித்தும் இன்னும்தனி முத்திரை பதிக்காமல் உள்ளார்.
சார்லி, தாமு, விவேக் என பலருடன் இணைந்து நடித்தால்தான் இவரும் பேசப்படுகிறார்.
திருமணமாகி, குழந்தை பிறந்து, சொந்த வீடும் கட்டி, புதுக் காரும் வாங்கிய பிறகு இப்போதுதான் தனியாகக்காமெடி செய்யும் ஆசை வையாபுரிக்கு வந்திருக்கிறதாம்.
தனது போட்டியாக வடிவேலுவையும், விவேக்கையும் அவர் நினைக்கிறாராம். இதென்ன விபரீத ஆசை என்றுகேட்கிறீர்களா?
அப்படி நினைத்தால்தான் அவர்கள் அளவுக்கு வர முடியாவிட்டாலும் அவர்களுக்கு அடுத்த இடத்தையாவதுபிடிக்கலாம் என்று வையாபுரி நினைக்கிறாராம்.
இனிமேல் பத்தோடு பதினொன்றாக வந்து போவது என்ற பிசினசை விட்டுவிட்டு தனி காமெடி செய்யும்காரெக்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறாராம்.
வைகைப் புயலை" வீழ்த்துமா இந்த "தேனி தென்றல்"?


Click it and Unblock the Notifications











