ஸ்பெஷல்ஸ்

By Staff
திருட்டு விசிடி தான் தங்களது வாழ்க்கையையே சீரழித்து விட்டதாக கொஞ்ச நாளைக்கு முன்பு திரைத் துறையில் யாரைப்பார்த்தாலும் புலம்பி வந்தார்கள்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை?

தயாரிப்பாளர்களின் பொழப்பில் மண்ணைப் போடுவது உண்மையில் திருட்டு விசிடி அல்ல, சில நடிகர்கள் வாங்கும் அநியாயச்சம்பளம்தான் என்பது மீண்டும் ஒரு முறை ரவிகிருஷ்ணா (7ஜி ரெயின்போ காலனி, சுக்ரன் "புகழ்") மூலம் வெளிச்சத்திற்குவந்துள்ளது.

ஒருகாலத்தில் விஜயசாந்தியின் பி.ஏவாக, மேக்கப் மேனாக இருந்தவர் ஏ.எம்.ரத்னம். விஜய்சாந்தி மூலம் கொஞ்சம்போல பணம்பார்த்தார் ஏ.எம்.ரத்னம். விஜயசாந்திக்கு மார்க்கெட் "டல் ஆகத் தொடங்கியபோது அவரிடமிருந்து நைசாக விலகினார்.விஜயசாந்தி மூலம் சம்பாதித்த பணத்தை முதலீடாகப் போட்டு படத் தயாரிப்பில் குதித்தார்.

அவருக்கு நல்ல நேரமோ என்னவோ, தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடியது (பாய்ஸ் தவிர). இப்போதுஏ.எம்.ரத்னம், ரொம்பவும் பிசியான, பிரபலமான தயாரிப்பாளர்களுள் ஒருவராகி விட்டார். தமிழில் ஒரு படத்தைத் தயாரிப்பார்,அதிலிருந்து கிடைக்கும் வசூலைப் பொறுத்து தெலுங்கிலும் தயாரித்து பணத்தை அள்ளுவார்.

பணத்துக்குப் பஞ்சமில்லாததால், தனது மகன் ரவிகிருஷ்ணாவை ஆஸ்திரேலியாவில் படிக்க வைத்தார்.

படித்து முடித்து ஊருக்கு வந்த ரவி இப்போது ஹீரோவாகிவிட்டார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க எந்தத் தகுதியும்தேவையில்லை என்று இப்போது ஒரு புதிய சூழ்நிலை உருவாகியுள்ளதால், தயாரிப்பாளர் மகன் என்ற ஒரே காரணத்துக்காக,சைக்கிள் கேப்பில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகி விட்டார்.

முதல் படமான "7ஜி ரெயின்போ காலனியில் செல்வராகவனின் வழிகாட்டுதலால் கொஞ்சம் நடித்தார்.

ஆனால், சுக்ரனிலும் சொதப்பி எடுத்தார். படம் ஊத்திக் கொண்டது.

இந் நிலையில், அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் வரும் வகையில் ஒரு வேலையை செய்துள்ளார். அதாவது சம்பளத்தைக்கூட்டியுள்ளாராம். எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமில்லை. 75 லட்சம் மட்டும் தான்!!.

ரவிகிருஷ்ணாவின் இப்போதைய சம்பளம் ரூ. 75 லட்சமாம்.

நீங்கள் வாயை பிளப்பது தெரிகிறது. ஆனால் இதுதான் கோலிவுட்டின் இன்றைய நிலை. 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள,எந்தவிதமான நடிப்புத் திறனும் இல்லாத ரவிகிருஷ்ணாவுக்கே இவ்வளவு தூக்கிக் கொடுத்தால் பிறகு எப்படி தமிழ்த் திரையுலகம்உருப்படும்?

ரவிகிருஷ்ணாவுக்கு இப்பவே இவ்வளவு சம்பளமா? என்று கேட்டால், அவருக்கு தமிழில்தான் நல்ல வாய்ப்பு இல்லை, ஆனால்தெலுங்கில் பிரமாதமான மார்க்கெட் உள்ளது. எனவே தமிழில் அவரை வைத்துத் தயாரிக்கும் படத்தை தெலுங்கிலும் டப் செய்துநல்ல "டப்பு பார்க்கலாம் என்று ரத்னம் தரப்பு சால்ஜாப்பு கூறுகிறதாம்.

இப்போது ரவிகிருஷ்ணா கைவசம், பொன்னியின் செல்வன், கெளதம் இயக்கத்தில் ஒரு படம், அண்ணன் ஜோதிகிருஷ்ணாவின்இயக்கத்தில் ஒரு படம் என 3 படங்கள் இருக்கின்றன.

அட, இத்தனைக்கும் ரவிகிருஷ்ணாவுக்கும் தமிழுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, அவர் வீட்டில்தெலுங்கில் "மாட்லாடுவார்", வெளியில் மெட்ராஸ் பாஷையில்"பேசுவார்".

ரவி கிருஷ்ணா ஒரு உதாரணம் தான். இப்படி ஏகப்பட்ட ரவிகளும் கிருஷ்ணாக்களும் கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

நடிக்கவே வராத இவரைப் போன்றவர்களுக்கே சம்பளத்தை இப்படி அள்ளித் தந்துவிட்டு திருட்டு விசிடியால் தான்கோலிவுட்டே அழிஞ்சு போச்சு என்று கூப்பாடு போடும் தயாரிப்பாளர்களை என்னவென்று சொல்வது?

அட தேவுடா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X