»   »  ராஜ்குமார்-நாகேஸ்வரராவ் வீரப்பன்- அர்ஜூன்

ராஜ்குமார்-நாகேஸ்வரராவ் வீரப்பன்- அர்ஜூன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் கன்னடத்தில் திரைப்படமாகிறது. இதில் ராஜ்குமார் வேடத்தில், பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவும்,அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் வேடத்தில் அர்ஜூனும் நடிக்கவுள்ளனர்.


முத்துலட்சுமியும் இப்படத்தில் வீரப்பனின் மனைவியாகவே நடிக்கிறார்.சந்தனக் கடத்தல் வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் கர்நாடக மக்களை பெரிதாக உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அவர்களால் கற்பனை செய்து கூடபார்க்க முடியாத சம்பவம் அது. கன்னட மக்களின் ஒரு தரப்பினரால், அண்ணாவரு, தெய்வம் என்று அழைக்கப்பட்டு வந்த ராஜ்குமார் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குமேல் காட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தார்.

கர்நாடகத்தையும், கன்னட மக்களையும் உலுக்கி விட்ட இந்த சம்பவம் இப்போது திரைப்படமாகிறது. ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பெங்களூரில்போலீஸாரால் முற்றுகையிடப்பட்டு, தற்கொல செய்து கொண்டு இறந்த சுபா, சிவராஜன் ஆகியோரது கதையை சயனைடு என்ற பெயரில் படமாக்கிய ரமேஷ்தான்,ராஜ்குமார் கடத்தலையும் படமாக்கவுள்ளார்.

இவர் வீரப்பனின் வாழ்க்கையையும் படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதை எதிர்த்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.இருப்பினும் தற்போது முத்துலட்சுமி சமரசத்திற்கு முன்வந்துள்ளதால், வழக்கை விரைவில் வாபஸ் பெற முத்துலட்சுமி முடிவு செய்துள்ளார்.

இந் நிலையில், ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தை இயக்கவுள்ளார் ரமேஷ். இதில் ராஜ்குமார் வேடத்தில், ஆந்திராவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ்நடிக்கிறார். வீரப்பனிடமிருந்து தப்பி ஓடி வந்த நாகப்பா வேடத்தில் அவரே நடிக்கிறார்.

அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் வேடத்தில் அர்ஜூன் சர்ஜா (நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூனேதான். இவரும் கன்னடர் தான்) நடிக்கிறார். முத்துலட்சுமியும்இப்படத்தில் வீரப்பனின் மனைவியாகவே நடிக்கிறார்.

வீரப்பன் வேடத்தில் நடிக்கப் போவது யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளார் ரமேஷ். விரைவில் படம் தொடர்பான முழு விவரங்களையும் அவர்வெளியிடவுள்ளார்.

இப்படம் தமிழிலும் வெளியிடப்படும். படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு முத்துலட்சுமியிடம் போட்டுக் காட்ட முடிவு செய்துள்ளார் ரமேஷ்.

Read more about: rajkumar kidnap to be filmed

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil