twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படமாகிறது வீரப்பன் கதை தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கடைசியில்காட்டுக்குள் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் கதைதிரைப்படமாகிறது. சேலம் வனப் பகுதியில் ஒருகாலத்தில் கோலோசசி வந்த மம்பட்டியானின் வாழ்க்கைவரலாறு மலையூர் மம்பட்டியான் என்ற பெயரில் சினிமாவாக வந்தது. இதைத்தொடர்ந்து கரிமேடு கருவாயன், தீச்சட்டி கோவிந்தன் என பிரபல கொள்ளையர்களினகதைகள் திரைப்படமாகின. இந்த கேரக்டர்களில் நடித்து பேர் வாங்கினார் பிரசாந்தின்அப்பா தியாகராஜன்.அந்த வரிசையில் இப்போது வீரப்பனின் கதையும் படமாகிறது. ராஜீவ் காந்திகொலையாளிகளான சிவராசன்-சுபாவின் கதை கன்னடத்தில் சயனைடு என்றபெயரில் படமாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இக்கதையை படமாக்க விரும்பியமது தான் (அதை கன்னடத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இயக்கிவிட்டார்) வீரப்பன்கதையை இப்போது படமாக்கப் போகிறார்.இப்படத்திற்கு வதம் என்று பெயரிட்டுள்ளனர். படத்தை தயாரித்து இயக்குகிறார் மது.இவர் தாதா வீரமணியாக பெருசு படத்தில் நடித்தார். மேலும் கலைக் கல்லூரி, முதல்பாடல்ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்தவர்.டி.ஜே.குமார் வசனம் எழுதுகிறார். சுபாஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார்.வீரப்பன் படம் குறித்து மது கூறுகையில்,சுபா-சிவராசன் கதையை நான் தான் சினிமாவாக எடுக்க விருந்தேன். ஆனால்அதற்குள் கன்னடத்தில் படமாக்கி விட்டார்கள். எனவே அந்த ஐடியாவை விட்டுவிட்டேன்.இப்போது வீரப்பன் கதையை வதம் என்ற பெயரில் படமாக்க உள்ளேன். வீரப்பனைபிடிக்க அதிரடிப்படை போலீஸார் கடைசி நேரத்தில் போட்ட மாஸ்டர் பிளானைஅடிப்படையாக வைத்து கதையை அமைத்துள்ளோம்.வீரப்பனைப் பறறியும், அவனைப் பிடிக்க போலீஸார் நடத்திய போராட்டத்தையும்படம் முழுக்க சொல்லவுள்ளோம். கடந்த 8 மாதமாக இதற்காக உழைத்து திரைக்கதையை உருவாக்கியுள்ளோம்.முழுக்க முழுக்ககாவல்துறை கொடுத்த அறிக்கைகள், பேட்டிகள் அடிப்படையில்கதையை உருவாக்கியுள்ளோம். காவல்துறையின் பெருமையை விளக்கும் படமாகஇது அமையும்.அதேசமயம், காவல்துறை செய்த தவறுகளையும் சுட்டிக் காட்டவுள்ளோம். பல உயர்போலீஸ் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளேன்.அவர்களது கருததையும் கேட்டுள்ளேன்.வீரப்பன் வாழ்ந்து மறைந்த காட்டுப் பகுதியிலேயே படப்பிடிப்பை நடத்தவுள்ளோம்.இதறகாக தமிழக, கர்நாடக அரசுகளின் அனுமதியை பெறமுயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் மது.

    By Staff
    |

    தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கடைசியில்காட்டுக்குள் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் கதைதிரைப்படமாகிறது.

    சேலம் வனப் பகுதியில் ஒருகாலத்தில் கோலோசசி வந்த மம்பட்டியானின் வாழ்க்கைவரலாறு மலையூர் மம்பட்டியான் என்ற பெயரில் சினிமாவாக வந்தது. இதைத்தொடர்ந்து கரிமேடு கருவாயன், தீச்சட்டி கோவிந்தன் என பிரபல கொள்ளையர்களினகதைகள் திரைப்படமாகின. இந்த கேரக்டர்களில் நடித்து பேர் வாங்கினார் பிரசாந்தின்அப்பா தியாகராஜன்.

    அந்த வரிசையில் இப்போது வீரப்பனின் கதையும் படமாகிறது. ராஜீவ் காந்திகொலையாளிகளான சிவராசன்-சுபாவின் கதை கன்னடத்தில் சயனைடு என்றபெயரில் படமாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இக்கதையை படமாக்க விரும்பியமது தான் (அதை கன்னடத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இயக்கிவிட்டார்) வீரப்பன்கதையை இப்போது படமாக்கப் போகிறார்.

    இப்படத்திற்கு வதம் என்று பெயரிட்டுள்ளனர். படத்தை தயாரித்து இயக்குகிறார் மது.இவர் தாதா வீரமணியாக பெருசு படத்தில் நடித்தார். மேலும் கலைக் கல்லூரி, முதல்பாடல்ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்தவர்.

    டி.ஜே.குமார் வசனம் எழுதுகிறார். சுபாஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார்.வீரப்பன் படம் குறித்து மது கூறுகையில்,

    சுபா-சிவராசன் கதையை நான் தான் சினிமாவாக எடுக்க விருந்தேன். ஆனால்அதற்குள் கன்னடத்தில் படமாக்கி விட்டார்கள். எனவே அந்த ஐடியாவை விட்டுவிட்டேன்.

    இப்போது வீரப்பன் கதையை வதம் என்ற பெயரில் படமாக்க உள்ளேன். வீரப்பனைபிடிக்க அதிரடிப்படை போலீஸார் கடைசி நேரத்தில் போட்ட மாஸ்டர் பிளானைஅடிப்படையாக வைத்து கதையை அமைத்துள்ளோம்.

    வீரப்பனைப் பறறியும், அவனைப் பிடிக்க போலீஸார் நடத்திய போராட்டத்தையும்படம் முழுக்க சொல்லவுள்ளோம். கடந்த 8 மாதமாக இதற்காக உழைத்து திரைக்கதையை உருவாக்கியுள்ளோம்.

    முழுக்க முழுக்ககாவல்துறை கொடுத்த அறிக்கைகள், பேட்டிகள் அடிப்படையில்கதையை உருவாக்கியுள்ளோம். காவல்துறையின் பெருமையை விளக்கும் படமாகஇது அமையும்.

    அதேசமயம், காவல்துறை செய்த தவறுகளையும் சுட்டிக் காட்டவுள்ளோம். பல உயர்போலீஸ் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளேன்.அவர்களது கருததையும் கேட்டுள்ளேன்.

    வீரப்பன் வாழ்ந்து மறைந்த காட்டுப் பகுதியிலேயே படப்பிடிப்பை நடத்தவுள்ளோம்.இதறகாக தமிழக, கர்நாடக அரசுகளின் அனுமதியை பெறமுயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் மது.

      Read more about: film on veerappan
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X