ரூ1.5 கோடி-அபிராமி வாங்கிய வேல்
சூர்யா, ஆசின் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள வேல் படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியுள்ளார்.
சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் சிவாஜி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை, ஜீவி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வாங்கியிருந்தார் அபிராமி ராமநாதன்.இந்த நிலையில் வேல் படத்தையும் இருவரும் இணைந்து ரூ. 1.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். இது சூர்யாவின் கஜினி படத்திற்கு கொடுக்கப்பட்ட விலையை விட ரூ. 65 லட்சம் கூடுதலாகும்.
இந்த டீல் குறித்து அபிராமி ராமநாதன் கூறுகையில், வேல் படத்திற்கு நல்ல தொடக்கம் கிடைக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்திலும், ஜீவி பிலிம்ஸுடன் இணைந்து பட விநியோக உரிமைகளை வாங்குவேன் என்றார். செப்டம்பரில் வேல் திரைக்கு வருகிறது.
வேல் வேல், வெற்றி வேல்!
Comments
abhirami ramanathan asin அபிராமி ராமநாதன் ஆசின் இயக்குனர் சிவாஜி சூர்யா சென்னை செப்டம்பர் ஜீவி பிலிம்ஸ் ரஜினி விநியோகம் உரிமை வேல் ஹரி distribution rights gvfilms september shivaji surya vel


Click it and Unblock the Notifications