பிக் பாஸ் வீட்டில்.. நடிகை சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது தப்பா? பிரபல பாடகர் ஆவேசக் கேள்வி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில், நடிகை சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது தப்பா? என்று பாடகர் வேல்முருகன் கேட்டுள்ளார்.
விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி, பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ரகளைகளுக்கும் ரணகளங்களுக்கும் பஞ்சமே இல்லை.

ஷாக்கிங் தகவல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராகக் கலந்து கொண்ட பின்னணி பாடகர் வேல்முருகன், கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் பிக் பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள, பாலாஜி முருகதாஸை பற்றி ஷாக்கிங் தகவலைக் கூறியிருந்தார்.

அவரை அடிச்சிருக்கேன்
அப்பா தன்னை அடித்தார் என்று மட்டுமே நிகழ்ச்சியில் கூறிய பாலாஜி, அதன் பின்னர், என்னிடம் தனியாக, எங்கப்பா தூங்கும் போது அவரை அடிச்சிருக்கேன் என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கூடவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டியை, வேல்முருகன் கட்டிப்பிடித்த விஷயமும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

கட்டிப்பிடிச்சது தப்பா?
இதுபற்றி வேல்முருகனிடம் கேட்டோம். 'கட்டிப்பிடிச்சது தப்பா சார்?' என்று ஜாலியாக கேட்டபடியே பேச ஆரம்பித்தார். ''கொரோனாவால உலகமே தடுமாறியபடி இருக்கிற நேரம். எந்த வாய்ப்புகளும் இல்லை. பிக் பாஸ் வீட்டுக்கு அழைப்பு வந்தது. பாடல்கள் மூலமா கொஞ்சம் அறியப்பட்டிருக்கிற நான், அந்த நிகழ்ச்சிக்குப் போனா இன்னும் அறியப்படலாம்னு நினைச்சேன். சரின்னு போனேன்.

கிளீன் பண்ணலை
அது உண்மையிலயே புது அனுபவமா இருந்தது. வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அதை அனுபவிக்கணும். முதல்ல, சில நாட்கள் வீட்டுல இருந்தவங்க எல்லோரும் நட்பா இருந்தோம். பிறகு நம்ம வீடு மாதிரிதான். இதை ஏன் கிளீன் பண்ணலை, அது ஏன் அங்க கிடக்குதுங்கற மாதிரி சின்ன சின்ன சண்டைகள் ஆரம்பிச்சது. அது சாதாரணமானதுதான்.

நானும் சனமும் மிச்சம்
ஆனா, நடிகை சனம் ஷெட்டியை நான் கட்டிப்பிடிச்சது பற்றியே எல்லாரும் பேசறாங்க. அது ஒரு டாஸ்க். அவ்வளவுதான். அந்த டாஸ்க்ல, ஒரு ஆண், ஒரு பெண் கலந்துக்கணும்னு சொன்னாங்க. எல்லாரும் அவங்கவங்களுக்கான ஜோடியை தேர்வு பண்ணிக்கிட்டாங்க. நானும் சனமும் மட்டும்தான் மிச்சம் இருந்தோம்.

கட்டிப்பிடிச்சு தூக்கினேன்
பிறகு சனம், அண்ணா நாம சேர்ந்து விளையாடலாம்னு சொன்னாங்க. விளையாடினோம். எல்லாருமே, நாங்க தோத்துடுவோம்னு நினைச்ச நேரத்துல, ஜெயிச்சுட்டோம். அந்த சந்தோஷத்துல சனம் ஷெட்டியை கட்டிப் பிடிச்சு தூக்கினேன். அதுல என்ன இருக்கு? யாரா இருந்தாலும் அதைத்தான செய்வோம்.

தப்பு மாதிரி
அதைத்தான் நானும் பண்ணினேன். நான் பண்ணினது தப்பு மாதிரி பெருசா பேசறாங்க. அதுல எங்க ரெண்டு பேருக்குமா தவறான எண்ணம் இல்லை. நான் கிராமத்துல இருந்து வந்தவன் அப்படிங்கறதால இப்படி விமர்சிக்கிறாங்கன்னு நினைக்கிறேன் என்ற வேல் முருகனிடம், எல்லாமே ஸ்கிரிப்டுனு சொல்றாங்களே? என்று கேட்டால், இல்லை என மறுக்கிறார்.


Click it and Unblock the Notifications











