வெங்கட் பிரபுவின் '7'
| Click here for more images |
முதல் படத்தில் எண்களைக் கொண்டு டைட்டில் அமைத்து அது பெரும் வெற்றி பெற்றதால், அந்த சென்டிமென்ட் அடிப்படையில் '7' என்று தனது அடுத்த படத்திற்கு வெங்கட் பிரபு பெயர் சூட்டியுள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரம் கிசுகிசுக்கிறது.
இந்தப் படத்திலும் புத்தம் புது முகங்களை நடிக்க வைக்கப் போகிறாராம் வெங்கட் பிரபு. அதேசமயம், அனுபவசாலி நடிகர், நடிகைகளும் கூட படத்தில் இருப்பார்களாம்.
தம்பி பிரேம்ஜியும், இப்படத்தில் இருக்கிறார். படத்திற்கு அட்டகாசான ஒரு அழகியை தற்போது வெங்கட் பிரபு தேடிக் கொண்டிருக்கிறார். வெஸ்டர்ன் சாயல் கொண்ட பெண்ணாக தேவைப்படுகிறதாம். அப்படிப்பட்ட சாயலில் இருப்பவர்கள் பிரபுவை அணுகலாம்.
வழக்கம் போல இந்தப் படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கேமராவுக்கு சக்தி சரவணன்.
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தையும் வெற்றிப் படமாக்க தீவிரமாக களம் இறங்கியுள்ளார் வெங்கட் பிரபு.
தற்போது பட வேலைகள் தொடர்பாக லண்டனுக்குச் சென்றுள்ள வெங்கட் பிரபு திரும்பியதும், ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











