15 ஆண்டுகளுக்குப் பின் நடித்த 81 வயது சௌகார் ஜானகி!

By Shankar

Sowcar Janaki wit Rajini
81 வயதான மூத்த நடிகை சௌகார் ஜானகி, 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

பணம் படைத்தவன், ஒளி விளக்கு, படிக்காத மேதை, பார் மகளே பார், உயர்ந்த மனிதன், பாபு, எங்கள் தங்க ராஜா உள்பட பல படங்களில் எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர், சௌகார் ஜானகி. பாலச்சந்தரின் இருகோடுகள் படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ரஜினி, கமலுடனும் நடித்துள்ளார். ரஜினிக்கு அம்மாவாக இவர் நடித்த தில்லு முல்லு பெரும் வரவேற்பைப் பெற்ற படம். இவருக்கு இப்போது 81 வயது ஆகிறது.

கடந்த 15 வருடங்களாக இவரை திரையில் பார்க்க முடியவில்லை. 15 வருட இடைவெளிக்குப்பின், சௌகார் ஜானகி மீண்டும் நடிக்க வருகிறார். கழுகு' படத்தின் கதாநாயகன் கிருஷ்ணாவின் பாட்டியாக, 'வானவராயன் வல்லவராயன்' என்ற படத்தில் நடிக்கிறார்.

நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின் நடிக்க வருவது பற்றி சௌகார் ஜானகி கூறுகையில், "தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், இதுவரை 385 படங்களில் நடித்து இருக்கிறேன். கடந்த 62 வருடங்களாக நடித்து வருகிறேன். தமிழ்நாடுதான் எனக்கு சோறு போட்ட புண்ணிய பூமி. என் வாழ்நாளில் தமிழையும், தமிழ்நாட்டையும் மறக்க மாட்டேன்.

நான் கடைசியாக நடித்த படம், 'தொடரும்.' அஜீத், தேவயானி நடித்து, ரமேஷ்கண்ணா இயக்கிய படம். அதன் பிறகு நடிப்பை தொடர வாய்ப்பில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

சினிமாவை விட்டு நான் என்றுமே விலகியதில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக யாரும் என்ன நடிக்க அழைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாமல், என் ஆன்மிக பணியை தொடர்ந்து கொண்டிருந்தேன். சினிமாவை விட்டு நான் விலகிவிட்டதாக சிலர் வதந்தியை பரப்பியதால்தான் யாரும் என்னை நடிக்க அழைக்கவில்லை.

இயக்குநர் ராஜ்மோகன் சொன்ன கதை எனக்கு பிடித்தது. வானவராயன் வல்லவராயன்' படத்தில் என் கதாபாத்திரம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. 81 வயதான நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டார். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடித்து, எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.

மறக்கமுடியாத கமல்...

62 வருடங்களில் எத்தனையோ நடிகர்களை சந்தித்து இருக்கிறேன். ஹே ராம்' படத்தில் கமல்ஹாசன் என்னை நடிக்க அழைத்தார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தேன். அதற்குள் எனக்கு இருதய 'ஆபரேஷன்' செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால், எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே 'செக்'காக எனக்கு அனுப்பி வைத்தார். அந்த தொகைதான் என் 'ஆபரேஷன்' செலவுக்கு உதவியது. அந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X