இதெப்படி இருக்கு?
தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடுவின் 'மொழித் திறமை' குறித்து அவரது அசிஸ்டென்ட் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கூறுகையில், சார், 'நான்கு மொழிகளில் தெலுங்கு' பேசுவார் என்று பிரமாதப்படுத்திக் கூறுவார். அந்தக் கணக்காக ஆகியுள்ளது வேட்டைக்காரன் பட விளம்பரங்கள்.
வேட்டைக்காரன் படம் வெளியாகி 30 நாட்களையே எட்டியுள்ள நிலையில் 40 நாட்கள் என்று கூறி போஸ்டர் அடித்துக் கலக்கியுள்ளனர் சென்னையில்.
டிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர் சென்னையில். இதைப் பார்த்து விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் போல குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமா... வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று ஆடித் தள்ளுபடி ரேஞ்சுக்கும் போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர் விஜய் ரசிகர் மன்றத்தினர்.
மேலும், குறைந்த கட்டணத்தில் என்ற புது பிட்டையும் வேட்டைக்காரன் பட போஸ்டர்கள் மீது ஒட்டி வருகின்றனராம் தியேட்டர்காரர்கள்.
ஏன் இந்தக் குழப்பம், குளறுபடி என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











