பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!
பொதுவாக தை முதல் நாளில் அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு பொங்கல் படங்கள் வெளியாவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக, ஜனவரி 12-லிருந்து 15-ம் தேதி வரை தினசரி ஒரு படம் என்று 4 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
அந்த வகையில் விஜய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் பிரமாண்டமாக நேற்று 12-ம் தேதி வெளியானது.
இன்று விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள கிராம காதல் கதை கொள்ளைக்காரன் வெளியாகிறது. மைனாவுக்குப் பிறகு விதார்த் பெரிதும் நம்பியிருக்கும் படம் இதுதான்.
சஞ்சிதா ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ள இந்தப் படம் மண் மணம் மாறாத கிராமத்து பொங்கல் விருந்தாக இருக்கும் என்கிறார்கள். பாடல்கள் ஏற்கெனவே பேசப்படும் அளவுக்கு இருப்பதால் விதார்த் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நாளை, ஜனவரி 14-ம் தேதி மாதவன் - ஆர்யா, சமீரா ரெட்டி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள லிங்குசாமியின் வேட்டை வெளியாகிறது.
நாளை மறுநாள் ராமராஜன் - வடிவேலு நடித்துள்ள மேதை வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











