»   »  எனக்கு புருஷனா? விம்மும் வித்யா

எனக்கு புருஷனா? விம்மும் வித்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு கல்யாணமாகி, ஆத்துக்காரரும், ஒரு குட்டிப் பாப்பாவும் இருப்பதாக சிலர்வதந்தி கிளப்பி வருவது கொஞ்சம் கூட நன்னா இல்லை என்று விம்மி வெடிக்கிறார்வித்யா பாலன்.

இந்தித் திரையுலகை கலக்கி வரும் பாலக்காட்டு வித்யா பாலனை தமிழுக்குக் கூட்டிவர பிரம்மப் பிரயத்தனங்கள் நடந்தன. ஆனாலும் அம்மணி பிடி கொடுக்காமல்பாலிவுட்டிலேயே இருந்து வருகிறார். கமல் கூட தசாவதாரத்திற்காக கேட்டுப்பார்த்தார். கால்ஷீட் இல்லை என்று மாமி மறுத்து விட்டார்.

வித்யாவைப் பற்றி பாலிவுட்டில் ஏகப்பட்ட வதந்திகள். சஞ்சய் தத்துடன் நெருக்கமாகஇருக்கிறார், ஜானி ஆப்ரகாமுடன் படு நெருக்கம். அட, கல்யாணமாகிப் போச்சப்பா,ஆத்துக்காரர் அமெரிக்காவில் இருக்கிறார், ஒரு குட்டிப் பாப்பா கூட உண்டே என்றரீதியில் வதந்திகள் வரிந்து கட்டிப் பறக்கின்றன.

இதையெல்லாம் போய் வித்யாவிடம் கேட்டால், எல்லாம் சுத்தப் பொய். லகேரகோமுன்னாபாய் படத்தில் சஞ்சய் தத்துடன் இணைந்து நடித்தேன். அவர் எனக்கு நல்லநண்பர். அவ்ளோதான். அதேபோலத்தான் ஜானியும் (அதான் ஜான் ஆப்ரஹாம்,இவரோட பூர்வீகமும் பாலக்காடு பக்கம்தான்) என்கிறார் வித்யா.

ஆத்துக்காரர், குழந்தை .. இது சுத்த ஹம்பக். சிரிப்புதான் வருகிறது. எனக்குக்கல்யாணம் ஆகி விட்டால் நான் எதற்காக நடிக்க வேண்டும்? அதிலும் எனது கணவர்தொழிலதிபர் என்றும் சொல்கிறார்கள். ஒரு வேளைஅப்படி ஏதும் இருக்கக் கூடாதாஎன்று சில நேரங்களில் ஏக்கப்படுவேன்.

எப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்கள் பாருங்களேன் என்று நாம் போட்டகேள்வியை நமக்கே திருப்பிப் போட்டு கிளம்பிப் போனார் வித்யா பாலன்.

வித்தியாச பாலன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil