twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படைப்பாளி… துடைப்பாளி-2: வியட்நாம் காலனியும் அவதாரும்!

    By Muthu
    |

    -முத்துசிவா

    வெங்கட கிருஷ்ணன் படிச்சிட்டு வேலைக்காக காத்திருக்குற ஒரு ஏழை பிராமணன். வெங்கட கிருஷ்ணனோட அம்மா, பாட்டு சொல்லிக் குடுக்கப் போறதா அவன் கிட்ட பொய் சொல்லிட்டு நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேச்சி குடும்பத்த ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இதுல அப்பா வாங்கிவச்சிட்டுப் போன கடன் வேற வெங்கட கிருஷ்ணன் தலையில விழுது.

    அந்த சமயம் பிரபல எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்‌ஷன்ல நம்மாளுக்கு வேலை கிடைக்கிது. நம்ம கஷ்டமெல்லாம் தீரப்போகுதுன்னு வெங்கட கிருஷ்ணன் நினைச்சிக்கிட்டு இருக்கும்போது, உண்மையில் அந்த கம்பெனிக்கு சொந்தமான ஒரு இடத்துல தங்கியிருக்க மக்கள அங்கிருந்து காலி பன்ன வைக்கிறதுதான் வெங்கட கிருஷ்ணனுக்கு கிடைச்ச வேலைன்னு தெரிய வர, அந்த வேலைக்கு போக
    வேணாம்னு முடிவெடுக்குறான். ஆனா கடன்காரர்கள் தொல்லை தாங்க முடியாம கண்டிப்பா அந்த வேலைக்கு போக வேண்டிய சூழல்.

    அந்த மக்கள் தங்கியிருக்குற காலனிக்கு கதையெழுதுறவனா போறான். அங்கயே தங்கியிருந்து அங்கருக்கவங்ககிட்ட நல்ல பேர சம்பாதிக்கிறான். நடு நடுவே மக்களை அங்கிருந்து காலி பன்ன வைக்கத் தேவையான உடைப்பு வேலைகளையும் பாத்துக்கிட்டே இருக்கான். ஒருகட்டத்தில் வெங்கட கிருஷ்ணன் பேச்சை கேட்டு மக்கள் அந்த இடத்த விட்டு காலி பண்ண ஒத்துக்குறாங்க.

    ஆனா பிறகுதான் வெங்கட கிருஷ்ணனுக்கு கம்பெனிகாரங்க ரொம்ப மோசமானவங்கன்னும், அவங்க அந்த மக்கள நடுத்தெருவுல நிறுத்தப் போறாங்கங்கற உண்மையும் தெரியவர, வெங்கட கிருஷ்ணன் மக்கள் பக்கம் நின்னு, கம்பெனி காரனுங்களையும் அதுக்கு துணையா நிக்கிற ரவுடிங்களையும் அடிச்சி தொம்சம் பன்னி காலனிய மக்கள் கிட்டயே ஒப்படைக்கிறார்.

    இது 1995 ல பிரபு, கவுண்டமணி, 'ஜுஜூலிபா' வினிதா, மனோரமா நடிச்ச வியட்நாம் காலனி படத்தோட கதை (மலையாள ரீமேக்). படத்த கொஞ்ச நேரம் பாத்தாலே வசனம் யாருன்னு அவங்க சொல்லாம நாமலே 'க்ரேசி மோகன்' ன்னு கண்டுபுடிச்சிடலாம்.

    Vietnam Colony and Avatar

    'இது வியட்நாம் காலனியா இல்ல செவுட்நாம் காலனியா?'

    'அய்யிரே, நீ வெங்கட கிருஷ்ணன் இல்லை.. சங்கட கிருஷ்ண்டன்..'

    'ஆஆ... என்னா வாசம்.... மூக்குல எக்ஸ்ட்ரா ரெண்டு ஓட்டை போட்டுக்கலாம் போலருக்கே' ன்னு கிரேசி மோகன் வசனங்களை கவுண்டர் சொல்லி கேக்குறது இன்னும் சிறப்பு.

    சரி.. இந்த வியட்நாம் காலனி அதிகபட்சம் ஒரு 1 கோடி ரூபா பட்ஜெட்ல தமிழ்ல எடுக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹிட் படம். போன பதிவுலயே சொன்ன மாதிரி ஒரு சாதாரண விஷயம் ஒரு ஃபேமஸான ஆள் ஜனரஞ்சகமா சொல்லும்போது பல அடுக்கு மக்களுக்கு சென்றடையும்.

    இப்ப என்ன பன்றோம்... இந்த ஒரு கோடிக்கு பதிலா ஒரு ஆயிரம் கோடிய உள்ள இறக்குறோம். பிரபு கும்பகோணத்துலருந்து சென்னையில உள்ள வியட்நாம் காலனிக்கு போறாருங்குறதுக்கு பதிலா, இப்ப ஹீரோ பூமிலருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால இருக்க பாண்டூராங்குற கிரகத்துக்குப் போயி அங்க இருக்க மக்களை காலி பன்னப்போறார்ன்னு வச்சிக்கப் போறோம்.

    அங்க பிரபு கடன் தொல்லை தாங்க முடியாம வேலைக்கு போனார்னா இங்க ஹீரோவோட அண்ணன் இறந்துட்டதால தவிர்க்க முடியாம வேலைக்கு போறாரு.

    அவ்வளவுதான் ஆயிரம் கோடி அவதார் ரெடி.

    இதைக்கேட்ட உடனே கேமரூன் ஃபேன்ஸுக்கெல்லாம் நரம்பு புடைச்சிக்கிட்டு என்னை தூக்கிப்போட்டு மிதிக்கனும் போலத் தோணும். நீங்க தூக்கிப்போட்டு

    மிதிச்சாலும் பரவால்ல. ரெண்டும் ஒரே கதைதான். இத 'காப்பி' ன்னு சொன்னா எனக்கு வாழ்க்கையில இனிமே சிங்கிள் டீ கூட கிடைக்காதுன்னு தெரியும். ஆனா இத Coincidence ன்னு வச்சிக்கிட்டு கொஞ்சம் வித்தியாசமான ஆங்கிள்ல பாருங்க இன்னும் செம ஜாலியா இருக்கும்.

    ஓவரால் கதை மட்டும் ஒண்ணுங்குறதத் தாண்டி இன்னும் நிறைய கேரக்டர்கள், ஒருசில காட்சிகள் கூட இந்த ரெண்டு படத்துக்கும் ஒத்துப் போகும்.

    Vietnam Colony and Avatar

    முதல் முதலா அவதார் ஹீரோ ஜேக் சல்லி, அவதார் உருவத்துக்கு மாறி பாண்டூரா காட்டுக்குள்ள போகும்போது ஒரு பெரிய மிருகம் முன்னால நிக்கும். கூட வந்த ஆயா 'ஜேக் ஓடாம அப்டியே நில்லு..' ங்கும். கொஞ்ச நேரத்துல அந்த மிருகம் ஒவ்வொரு அடியா பின்னால பயந்து எடுத்து வைக்கும் . உடனே ஜேக் 'அந்த பயம் இருக்கட்டும்" ம்பான். ஆனா ஜேக் க்கு

    பின்னால அதவிட பெரிய மிருகம் வந்து நின்னத பாத்துட்டுத்தான் அது பயந்து ஓடும். அதே காட்சி அப்படியே வியட்நாம் காலனியிலும். பிரபுவும் கவுண்டரும் முதல் முதலா காலனிக்குள்ள ஆட்டோவுல வருவாங்க. பிரபு முன்னால இறங்கி போக ஆட்டோக்காரன் கவுண்டர்கிட்ட மீட்டருக்கு மேல அதிகம் கேட்டு சண்டை போடுவான். உடனே பிரபு துரத்துலருந்து ஒரு சவுண்ட் விட்டதும் ஆட்டோக்காரன் பிரபுவ பாத்து பயந்து குடுத்தத வாங்கிட்டு கிளம்பிடுவான். பிரபுவும் நம்மள பாத்து பயந்தான்னு நினைப்பாரு.

    ஆனா பிரபுக்கு பின்னால நிக்கிற அந்த காலனியோட பெரிய ரவுடி ராவுத்தர பாத்துத்தான் ஆட்டோக்காரன் பயந்து ஓடிருப்பான்.

    அதுமட்டும் இல்லாம வினிதாவோட முறைமாமன், பிரபுவுக்கு இந்த காலனில வீடு குடுக்கக் கூடாது அவன இங்க தங்க விடக்கூடாதுன்னு சண்டை போடுவான். அதே மாதிரி அவதார்லயும் ஒருத்தன் ஜேக் சல்லிய நம்ம குரூப்போட சேர்க்கக் கூடாதுன்னு சண்டை போட்டுக்கிட்டே இருப்பான்.

    Vietnam Colony and Avatar

    ஒருகட்டத்துல பண்டூரா மக்களுக்கு ஜேக் சல்லி அவங்கள அந்த இடத்த விட்டு காலி பண்ணத்தான் வந்துருக்கான்னு தெரிஞ்சதும் அவன அடிச்சி விரட்டப்பாப்பாங்க. அதே போல இங்கயும் பிரபு கம்பெனி ஆளுண்ணு தெரிஞ்ச பிறகு காலனி மக்கள் எல்லாம் பிரபுவ அடிச்சி தொம்சம் பண்ணிருவானுங்க.

    இந்த சிமிலாரிட்டி ஒரு சிலருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கலாம். ஒரு சிலருக்கு என்னடா அடிச்சி விடுறாய்ங்கன்னு டவுட்டா இருக்கலாம்.

    டவுட்டா இருக்கவங்க வியட்நாம் காலனி படத்தோட கதையை படிச்சிப் பாருங்க. அப்டியும் நம்பலன்னா யூட்யூப்ல படமே இருக்கு. பாத்துக்குங்க.

    கேமரூன் படத்தப் பத்தி பேசுனதால இன்னொரு எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேஷன்.

    கேமரூன் வெறும் டைரக்டர் மட்டும் இல்லாம அதுக்கும் மேல கொஞ்சம் கொடூரமானவரு. அவதாருக்காக 12 வருஷம் வெய்ட் பன்னாரு.. புது மொழியையே உருவாக்குனாருங்குறதெல்லாம் உங்களுக்கே தெரியும்.

    ஆனா அவரும் அவர் தம்பியும் ஒரு புது இன்ஸ்ட்ரூமெண்ட்ட கண்டுபுடிச்சி அதுக்கு US ல Patent rights லாம் வாங்கி வச்சிருக்காங்கன்னு தெரியுமா? கீழ

    இருக்கது தான் அந்த இன்ஸ்ட்ரூமெண்ட். (Under water dolly - US patent No:
    4,996,938)

    என்னய்யா குழந்தைங்க விளையாடுற ஏரோப் ப்ளேன் பொம்மை மாதிரி இருக்கேன்னு நினைக்காதீங்க. இது தண்ணிக்கு அடியில தேவையான ஆங்கிள்ல படம் புடிக்கிறதுக்காக அவரே தயாரிச்ச ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட்.

    1990s வரைக்கும் நீருக்கு அடியில் படம் பிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமான வேலையா இருந்தது. அப்படியே பிடிச்சாலும் நமக்கு தேவையான ஆங்கிள்ல படம் பிடிக்க முடியல. எந்த டைரக்‌ஷன்ல போய்கிட்டு இருக்கமோ அந்த டைரக்‌ஷன்ல மட்டுமே கவர் பன்ன முடியிற மாதிரி இருந்தது.

    இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் ஒரு கேமராவோட ஒரு ஆளயும் எடுத்துப் போறது மாதிரி டிசைன் பன்னப்பட்டிருக்கு. இந்த Underwater dolly ல நீருக்கு அடியில எந்த திசையில பயணம் செஞ்சிக்கிட்டு இருந்தாலும், கேமராவ எந்த ஆங்கிள்ல வேணாலும் திருப்பி நமக்கு தேவையான மாதிரி படம் பிடிச்சிக்கலாம்.

    இவங்க இத கண்டுபிடிச்சதுக்கப்புறம் நிறைய படங்கள்ல இந்த Underwater dolly ah பயன்படுத்தி நீருக்குள் நடக்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கு.

    பி.கு : வியட்நாம் காலனி மோகன்லால் நடிச்ச மலையாளப் படத்தின் ரீமேக்.

    English summary
    The second part of Muthu Siva's Padipaali Thudaippali, a satire on copy cats in Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X