விக்னேஷ் சிவன் பிறந்தநாள்: நானும் ரவுடிதான் படத்தினால் நடந்த மூன்று நல்ல விஷயங்கள்
சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் மிக இளம் வயதில் சாதித்து வெற்றியை ருசித்தவர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர்.
போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானபோது, அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. அப்படம் எடுக்கும்போது அவருக்கு 26 வயது.

போடா போடி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் வெற்றி பெற்றது. அதுவரை ரேடியோவில் பேசுவதற்கும் திரையில் வசனம் பேசுவதற்கும் எதுவும் வித்தியாசம் இல்லை என விமர்சிக்கப்பட்ட ஆர்ஜே.பாலாஜி நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார்.
இப்படத்தின் மூலம் மூன்று நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று படம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஹிட் ஆனது. ஆர்ஜே.பாலாஜி என்ற நடிகரை உருவாக்கியது. மூன்றாவது உங்களுக்கேத் தெரியும், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவுடன் நட்பு ஏற்பட்டது.
அவர் சூர்யாவை வைத்து இயக்கிய அடுத்த படமான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் பாராட்டுக்களைப் பெற்றது. இப்போது இயக்குனர், பாடலாசிரியர் என பல வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் விக்னேஷ் சிவன். ஆரம்ப காலங்களில் இவர் எழுதிய "லவ் ஆந்தம்" சிறப்பான ஒரு பாடல். பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. சிம்பு பாடி நடித்து வெளியானது.
தற்போது நயன்தாராவுடன் பஞ்சாபில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியானது. அடிக்கடி போட்டோ போடும் இருவரும் காதலை எப்போது வெளிப்படையாக அறிவிக்கப்போகிறார்கள் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











