Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சம 'வெயிட்'டில் ஹன்சிகா, ஜெனிலியா!
வேலாயுதம் படத்தில் நாயகிகள் ஜெனிலியாவுக்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் சம அளவில் கேரக்டர்கள் வைக்கப்பட்டுள்ளதால் இருவரும் குஷி்யுடன் படு தோழமையாக நடித்து வருகிறார்களாம்.
விஜ்ய நடிக்க பிரமாண்டமாக தயாராகும் படம் வேலாயுதம். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். விஜய் பட வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமானதாகவும், பெரிதாக பேசப்படும் அளவிலும் இப்படம் இருக்கும் என்கிறது படக்குழு. அந்த அளவுக்கு ரகளையாக தயாராகி வருகிறதாம் வேலாயுதம்.
படத்தை இயக்குவது ரீமேக் மன்னன் ஜெயம் ராஜா. இதனால் படத்தைப் பார்த்து பார்த்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜா. அதை விட முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் வேறு. ஜெனிலியாவும், ஹன்சிகாவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
இருவருக்குமே சம முக்கியத்துவம் வைத்து கேரக்டர்களை செதுக்கியுள்ளார் ராஜா. இதனால் இருவருமே திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும், தோழமையுடனும் பிரச்சினை பண்ணாமல் நடித்து வருகிறார்களாம்.
இப்படம் விஜய்க்கு பெரும் பெயரை வாங்கித் தரும் என்று நம்பிக்கையுடன் கூறும் ஜெயம் ராஜா, கதை அந்த அளவுக்கு வலுவானது என்றும் தெரிவிக்கிறார்.