'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

By Chakra

S A Chandrasekaran and Vijay
வெளுத்துக் கட்டு என்ற எனது புதிய படத்தைப் பார்த்து தணிக்கைக் குழு பாராட்டியதோடு, யு சான்றிதழ் கொடுத்துள்ளது, என்றார் எஸ்ஏ சந்திரசேகரன்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, தயாரித்து இருக்கும் புதிய படம், வெளுத்துக் கட்டு. இந்த படத்தில் கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். சேனாபதிமகன் இயக்கியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகரன்.

இந்தப் படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறியதாவது:

"வெளுத்துக்கட்டு படம் தணிக்கை குழுவினருக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அத்தனை பேரும் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டினார்கள்.

இவ்வளவு நல்ல படத்தில் ஒரே ஒரு காட்சியின் நீளத்தை மட்டும் குறைத்து விடலாமே என்று கருத்து தெரிவித்தார்கள். நானும் அதற்கு சம்மதித்ததால், அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டது. இந்தக்கால இளைஞர்களுக்கு தேவையான படம் வெளுத்துக்கட்டு என்று கூறி, படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய யு சர்டிபிகேட் வழங்கினார்கள்.

இப்போதெல்லாம் வினியோகஸ்தர்கள், பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே அதிக தொகை கொடுத்து வாங்குகிறார்கள். புது நடிகர்கள் நடித்த படங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை.

இந்த சூழ்நிலையில், புதுமுகங்கள் நடித்த வெளுத்துக்கட்டு படத்தை திருப்பூர் சுப்பிரமணியம், மதுரை அன்பு, திருச்சி பிரான்சிஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் போன்ற பெரிய வினியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

'விஜய்யே பாராட்டிட்டார்!'

படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.

இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்...'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X