வில்லனுக்கு என்னோட சாய்ஸ் விஜய் சேதுபதிதான்.. இயக்குநர் சங்கர் முடிவு!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இப்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

அதையடுத்து தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் அதில் இணைய உள்ளார்.

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய இயக்குநர் சங்கர் வில்லனுக்கு என்னுடைய சாய்ஸ் விஜய் சேதுபதிதான் என ஆணித்தரமாக கூறியுள்ளார்

 பிரம்மாண்டத்தை தமிழ் படங்களிலும்

பிரம்மாண்டத்தை தமிழ் படங்களிலும்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளின் மூலம் இந்திய அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருபவர் இயக்குநர் சங்கர் ஹாலிவுட்டில் மட்டும் பார்த்து வந்த பிரம்மாண்டத்தை தமிழ் படங்களிலும் காட்ட முடியும் என நிரூபித்துக் காட்டியவர். சங்கர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது எந்த அளவிற்கு பிரமாண்டமாக எடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு சங்கரின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலிலும் பிரம்மாண்ட வசூல் செய்து வருகிறது.

 நேரடி தெலுங்கு படம்

நேரடி தெலுங்கு படம்

2. O வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 இயக்கி வந்த சங்கருக்கு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது வரை தமிழில் மட்டும் படங்களை இயக்கி வந்த சங்கர் முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றை இயக்குகிறார் நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. முற்றிலும் வித்தியாசமான ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் சங்கர் கலந்து கொள்ள உள்ளார்.

 வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி

வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி

ஹீரோவாக நடிக்கும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிகப்பெரிய மார்கெட் இருக்க இப்போது தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் குறிப்பாக தமிழில் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் பவானியாக பட்டையை கிளப்பிய விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் வில்லனாக மிரட்டி இருந்தார்.

 வில்லனுக்கு விஜய் சேதுபதிதான் என்னுடைய சாய்ஸ்

வில்லனுக்கு விஜய் சேதுபதிதான் என்னுடைய சாய்ஸ்

இவ்வாறு தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான பரிமாணங்களில் காட்டி வரும் விஜய் சேதுபதியை அனைத்து இயக்குநர்களும் இயக்க ஆசை படுவார்கள். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இயக்குநர் சங்கர் பேசுகையில் வில்லனுக்கு விஜய் சேதுபதிதான் என்னுடைய சாய்ஸ் என ஆணித்தரமாக கூறியுள்ளார். சங்கரின் இந்த நேர்காணலுக்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X