விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி டிரைலர் எப்படி இருக்கு...ஓர் சுவாரஸ்ய அலசல்

சென்னை : விஜய் சேதுபதியும், டாப்சி பன்னும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள். தமிழ், தெலுங்கு, இந்தி னெ பல மொழிகளிலும் புகழ்பெற்ற இவர்கள் இணைந்து நடித்துள்ள படம் தான் அனபெல் சேதுபதி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த டிரைலரே பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதை பார்க்கும் போதே தெரிகிறது இந்த படம் காமெடி கலந்த பேய் படம் என்று. மிக பிரபலமான நடிகர்கள் ஏராளமானோர் நடித்துள்ள படம்.

யோகிபாபு, ராதிகா, சேத்தன், ஜாங்கிரி மதுமிதா, சுரேஷ் மேனன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் ஒரு பேய் பங்களாவில் மாட்டிக் கொள்வதை போல் டிரைலர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திகிலான, காமெடி சூழல்கள் குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

தீபக் சுந்தர்ராஜன் எழுதி, இயக்கி உள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றம் ஜி.ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் பேனில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 17 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ராஜா கேரக்டரில் விஜய் சேதுபதி

ராஜா கேரக்டரில் விஜய் சேதுபதி

இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி இருவருமே இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ளனர். இரண்டு கால கட்டங்களில் நடப்பது போன்று டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியில் விஜய் சேதுபதி, வீர சேதுபதி ராஜா கேரக்டரிலும், டாப்சி ஆங்கிலேய பெண்ணான அனபெல் கேரக்டரிலும் வருகிறார்கள். மற்றொறு பகுதி தற்போதைய கால கட்டத்தில் நடப்பது போல் காட்டப்படுகிறது.

சீரிசுடன் காமெடி

சீரிசுடன் காமெடி

டிரைலரின் துவக்கத்திலேயே வீர சேதுபதி ராஜா கட்டியது என பிரம்மாண்ட அரண்மனை காட்டப்படுகிறது. அதில் மிரட்டலாக விஜய் சேதுபதியும், டாப்சியும் வாள் சண்டை போடுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சீரியஸ் உணர்வை அப்படியே கட் செய்து சிரிக்க வைப்பது போன்று, அந்த ஷாட்டில் ஒரு காமெடி சீன் காட்டப்படுகிறது.

இது தான் கதையா

இது தான் கதையா

வீர சேதுபதி ராஜா, தனது மனைவி அன்னபெல்லுக்காக பார்த்து பார்த்து கட்டிய பிரம்மாண்ட அரண்மனையை கைப்பற்ற போராடும் கும்பல் ஒரு பக்கம். அந்த அரண்மனையில் இருந்து வெளியேற முடியாமல் இருக்கும் பேய்கள் ஒரு பக்கம். இவை அனைத்தையும் காமெடி கலந்து சொல்லப்பட்டிருப்பது தான் படத்தின் கதை என டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.

யோகிபாபுவின் கவுன்ட்டர்

யோகிபாபுவின் கவுன்ட்டர்

அதிலும் டிரைலரின் முடிவில் டாப்சி, யோகிபாபுவிடம், புதுசு புதுசா கதை சொல்லாத என சொல்கிறார். அதற்கு கவுன்ட்டர் கொடுக்கும் விதமாக, இப்போ எல்லாம் யாரும்மா புது கதை சொல்றாங்க. பழைய கதையை தான் அப்படியே உல்டா பண்ணி சொல்கிறார்கள் என நச்சுன்னு தலையில் ஆனி அடித்தது போல் பேசுவது சபாஷ் போட வைக்கிறது. சிரிப்புடன், சிந்திக்கவும் வைக்கிறது.

விஜய் சேதுபதி குறைவு தான்

விஜய் சேதுபதி குறைவு தான்

ஆனால் டிரைலரை வைத்து பார்க்கும் போது விஜய் சேதுபதி வரும் காட்சிகள் மிக குறைவு தான் என தெரிகிறது. ஆனால் ஹீரோ விஜய் சேதுபதி குறைவான காட்சிகளில் வரும் குறையே தெரியாத அளவிற்கு யோகிபாபுவின் காமெடி நிரப்பு விடுகிறது.

காமெடி பட்டாளம்

காமெடி பட்டாளம்

யோகிபாபுவின் கவுன்ட்டர் காமெடிக்கு சற்றும் சளிக்காமல் ராதிகா, ராஜேந்திர பிரசாந்த், சேத்தன், தேவதர்ஷினி, மதுமிதா உள்ளிட்டோரின் காமெடி அமைந்துள்ளது. அதிலும் ஆவிகளிடம் சிக்கிக் கொண்டு, இவர்கள் படும்பாட்டை பார்க்கையில் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X