பிரம்மாண்ட சொகுசு காருடன் மக்கள் செல்வன்.. விஜய்சேதுபதி வீட்டில் எத்தனை கார் இருக்கு தெரியுமா?
சென்னை: 96 பட இயக்குநர் பிரேம்குமார் விஜய்சேதுபதி பிரம்மாண்ட மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காருடன் இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
சொகுசு காருடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்க்ள் செம சூப்பரா இருக்கு அண்ணா என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
கார் பிரியரான விஜய்சேதுபதியிடம் வேறு என்ன என்ன கார் கலெக்ஷன்கள் இருக்கு என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்.

பிரம்மாண்ட காருடன் மக்கள் செல்வன்
சோஷியல் மீடியா முழுக்க வைரலாக தற்போது விஜய்சேதுபதியின் இந்த புகைப்படம் தான் டிரெண்டாகி வருகிறது. கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல் என ஆண்டு இறுதியிலும் சில ரிலீஸ்களை வைத்திருக்கும் விஜய்சேதுபதி பிரம்மாண்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் உடன் நிற்கும் கலக்கலான போட்டோவை 96 பட இயக்குநர் பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரேம்குமார் போட்டோகிராபி
பிளாக் அண்ட் ஒயிட்டில் பூனைக் குட்டி, நாய் குட்டி என போட்டோ எடுத்து பதிவிட்டு வரும் 96 பட இயக்குநர் பிரேம் குமார் தான் விஜய்சேதுபதி சொகுசு கார் உடன் நிற்கும் புகைப்படத்தையும் எடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்த படம் இருவரும் இணைந்து எப்போ பண்ணுவீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கார் பிரியர்
ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி படத்தில் துணை நடிகராக அறிமுகமான விஜய்சேதுபதி, தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, சசிகுமாரின் சுந்தர பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து படிப்படியாக சினிமாவில் மக்கள் செல்வனாக மாறி உள்ளார். கார் என்றால் அந்த நடிகருக்குத் தான் பிடிக்காது. நடிகர் விஜய்சேதுபதியிடமும் ஏகப்பட்ட கார்கள் இருக்கின்றன.

மினி கூப்பர்
42 லட்சம் ரூபாய் மதிப்பிலான அழகான குட்டி சொகுசு காரான மினி கூப்பர் கார் முதல் பிரம்மாண்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் வரை நடிகர் விஜய்சேதுபதியின் கரேஜில் உள்ளன. மினி கூப்பர் காரில் தனது செல்ல மகளுடன் சென்னையை பல முறை விஜய்சேதுபதி சுற்றி உள்ளார். ரசிகர்கள் பலமுறை மினி கூப்பரில் ஊர் சுற்றும் விஜய்சேதுபதியை க்ளிக் செய்துள்ளனர்.

டொயோட்டா ஃபார்ச்சுனர்
ஜப்பான் நாட்டை சேர்ந்த பிளாக் பீஸ்ட் காரான டொயோட்டா ஃபார்ச்சுனர் கார் நடிகர் விஜய்சேதுபதியின் ஃபேவரைட் கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த காருடன் விஜய்சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

BMW 7
நடிகர் விஜய்சேதுபதி முதல் முதலாக ஒரு கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் வாங்கிய கார் BMW 7 சொகுசு கார் தான். அதன் விலை 1.68 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இனோவா, ஹுண்டாய் உள்ளிட்ட சாதாரண கார்களையும் விஜய்சேதுபதி சொந்தமாக வாங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











