தோல்வி முகத்துடன் மாநாடு நடத்த முடியுமா?.. அவசர அவசரமாக தளபதி 69 அறிவிப்பு வர இதுதான் காரணமா?

சென்னை: கோட் படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில், அதற்குள் அவசர அவசரமாக கேவிஎன் நிறுவனம் தளபதி 69 படத்தை தயாரிக்கப் போவதாக அறிவிக்க காரணமே நடிகர் விஜய் கொடுத்த அழுத்தம் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுவார்த்தைகள் கிளம்பியுள்ளன.

பீஸ்ட், வாரிசு, லியோ, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என விஜய் தொடர்ந்து தனது படங்களுக்கு தலைப்பில் செலுத்தும் கவனத்தை இயக்குநர்கள் தேர்விலும் கதையிலும் செலுத்தவில்லை என கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

vijay thalapathy 69 goat

ஃபேக் ஃபிளாஷ்பேக், ஹார்ட் டிஸ்க் தொலைஞ்சு போச்சு என்றெல்லாம் படம் வெளியான பின்னர் சொல்ல மாட்டேன் என சொன்ன வெங்கட் பிரபு தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பிரஷர் தான் சில விஷயங்கள் சொதப்ப காரணம் என கொஞ்சம் கொஞ்சமாக வாக்குமூலம் அளித்து வருகிறார். ஆனால், கோட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்கிற முகத்துடன் அரசியல் மாநாட்டில் அண்ணன் கலந்துக் கொண்டால் கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் அதிரடியாக தளபதி 69 படத்தின் அப்டேட்டை அழுகாச்சி டிராமாவுடன் ஆரம்பித்துள்ளனர் என விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

கோட்டை விட்ட கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பான் இந்தியா வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கோட் படத்தின் குழுவினர் ஹைதராபாத்துக்கு மட்டும் சென்று புரமோஷன் நடத்தினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் நார்த் இந்தியாவில் புரமோஷன் பெரிதாக இல்லாத நிலையில், கோட் படம் வெளியான வேகத்திலேயே கடுமையான விமர்சனங்களுடன் தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸை தவிர்த்து மற்ற இடங்களில் அடிவாங்கி விட்டது.

தளபதி 69 அறிவிப்பு: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவாகவுள்ள விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு அவசர அவசரமாக வெளியாக காரணமே இதுதான் என சினிமா வட்டாரத்தில் திடீரென விஜய்க்கு எதிரான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், அரசியல் வட்டத்திலும் விஜய்யின் அரசியல் மாநாட்டில் தோல்வி முகத்துடன் எப்படி விஜய் வந்து மேடை ஏறுவார் என்கிற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

அதிக சம்பளம்: நடிகர் விஜய்க்கு கடைசி படத்தில் 275 கோடி அதிக சம்பளம் கொடுக்கப்பட போகிறது என்கிற பில்டப்பையும் இதுதான் கடைசி படம் என்கிற அழுகாச்சி டிராமாவையும் வைத்து சிம்பதி வாக்குகளை பெறுவது போல கடைசி படத்துக்கு தியேட்டருக்கு ஆட்களை தளபதி ரசிகர்கள் திரட்ட போகின்றனர் என்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனமும் அதே டிராமாவை ஆரம்பத்திலே போட ஆரம்பித்து விட்டனர் என்றும் கூறுகின்றனர்.

அரசியல் களம் எப்படி இருக்கும்?: விஜய் நடித்த படங்களே சில நாட்கள் கூட தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடாத நிலையில், அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கும் என சில அமைச்சர்களே கிண்டலாக பேச ஆரம்பித்துள்ளனர். அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்து முதல் 4 நாட்கள் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்றும் நல்ல படத்தை கொடுத்தால் தான் ரசிகர்கள் திரும்ப திரும்ப தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து கொண்டாடுவார்கள் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X