விஜய் - அமலா பால் - விஜய்... புதுக்கூட்டணியில் அதிரடிப் படம்!
தாண்டவத்தில் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்ட தனது பெயரை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக உள்ள இயக்குநர் ஏ எல் விஜய், இந்த முறை கைகோர்த்திருப்பது நடிகர் விஜய்யுடன்.

ரிக்ஷா மாமா தயாரிப்பாளர்
சந்திரபிரகாஷ் ஜெயினின் மிஷ்ரி புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா, ராமராஜன் நடித்த பாட்டுக்கு நான் அடிமை, டி. ராஜேந்தரின் ஒரு வசந்த கீதம் ஆகிய படங்களைத் தயாரித்தவர்தான் இந்த சந்திரபிரகாஷ் ஜெயின்.

கரகாட்டக்காரனுக்கு பைனான்ஸ் செய்தவர்
கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, காஞ்சனா, கோவா, கோச்சடையான் உள்ளிட்ட 200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர் இவர். சத்யராஜுக்கு ரொம்ப நெருக்கமான தயாரிப்பாளர் இவர். அதனால்தானோ என்னமோ, தான் இப்போது தயாரிக்கும் புதிய படத்திலும் சத்யராஜுக்கு முக்கிய வேடம் அளித்துள்ளார்.

விஜய்யுடன் முதல் முறையாக அமலா பால்
படத்தின் கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். விஜய் ஜோடியாக அமலா பால் நடிப்பது இதுதான் முதல்முறை. அதுபோல நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் கைகோர்ப்பதும் இதுவே முதல்முறை. அட, ஜீவி பிரகாஷ் குமார் விஜய் படத்துக்கு முதல்முறையாக இசையமைப்பதும் இந்தப்படத்தில்தான்.

குடும்பத்தோடு பார்க்கலாம்
மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது இந்தப்படம்.

முதலில் தலைவன்..ஆனா இப்போ வேற டைட்டில்
முதலில் தலைவன் என்று இந்தப் படத்துக்கு பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அந்தத் தலைப்பு வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதால், வேறு தலைப்பை தேடி வருகின்றனர்.

ஒரிஜினலாக இருக்குமா விஜய்?
இந்தப் படமாவது ஒரிஜினல் கதை, சர்ச்சையில்லாத தலைப்புடன் தயாராகுமா விஜய் & விஜய்?


Click it and Unblock the Notifications











