»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகில் 2000மாவது ஆண்டில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த்தான்.

2000மாவது ஆண்டு திரையுலகில் பல மறக்க முடியாத முத்திரைகளை பதித்து விட்டு சென்றிருக்கிறது. இது வரை திரையுலகம் காணாத அளவிற்கு 47நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் வேலை நிறுத்தம் நடந்தது இந்த ஆண்டில் தான்.

நடிகர்களை பொறுத்தவரை வெற்றி வாகை சூடியவர் விஜயகாந்த்தான் இவர் நடித்த வானத்தை போல திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெற்றிவாகைசூடியது.

விஜயகாந்த் நடித்த வல்லரசு படம் 100 நாட்கள் ஓடி வெற்றிக் கனியை பறித்தது.

இவருக்கு அடுத்தபடியாக கூற வேண்டுமானால் நடிகர் விஜய்யை கூறலாம். இவர் நடித்த குஷி படம் 100 நாட்கள் ஒடி வெற்றி பெற்றது.

சென்ற ஆண்டு அஜீத்திற்கு பெரும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. முகவரி திரைப்படம் 100 நாட்கள் ஓடியது என எடுத்துக் கொண்டாலும் அதைஒரு சிறந்த வெற்றியாக கொள்ள முடியாது.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் 100 நாட்கள் ஓடியது. ஆனால் அதில் அவருக்கென தனி பெருமை எதுவும் கிடையாது. அது பலரது கூட்டுமுயற்சியால் கிடைத்த வெற்றி என்பதால் அஜீத்திற்கு வெற்றி படம் அது என கூற முடியாது.

பாரதியாரின் வாழக்கையை வைத்து எடுக்கப்பட்ட பாரதி பரவலாக பேசப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து எந்த திரைப்படமும் சென்ற ஆண்டு வெளிவரவில்லை.

கமல்ஹாசன்நடித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஹே ராம் திரைப்படம் பெரிதாக பேசப்பட்டாலும் கூட அது வர்த்தக ரீதியில் தோல்வியையேத்தழுவியது.

மற்ற நடிகர்கள் ஒரளவிற்கு தங்கள் பெயரை காப்பாற்றிக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.

ஜென்டில்மேன் மூலம் மறுவாழ்வு பெற்ற அர்ஜுனுக்கு அதன் பின் பெயர் சொல்லும் படி எந்த படமும் வரவில்லை. வெற்றிப்பட இயக்குனர்ஷங்கர்மீண்டும் அவருக்கு கை கொடுக்கும் விதமாக முதல்வன் படத்தில் வாய்ப்பளித்தார். அந்த படம் அர்ஜுனுக்கு வெற்றி படமாக அமைந்தது.

ஜீன்ஸ் படம் மூலம் மீண்டும் திரையுலகில் வலம் வரத் தொடங்கிய பிரசாந்த் திரைப் படங்களில் நடிப்பதை விட நட்சத்திரப் பட்டாளங்களுடன் அயல் நாடுகளில்நட்சத்திர இரவுகள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

அவர் நடித்து வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்து வெற்றிப்படமாக அமைந்தது.

சரத்குமார் நடித்து வெளிவந்த மாயி படம் அவருக்கு ஒரு பிரேக் கொடுத்தது.

இளைய திலகம் பிரபுவின் படங்கள் இறங்கு முகமாகவே இருந்து வந்தன. இவர் நடித்து வெளிவந்த திருப்பதி ஏழு மலை வெங்கடேசா நிம்மதியைக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்குப்பின் பிரபு மீண்டும் ஒரு சுற்று வரத் துவங்கியுள்ளார். பட்ஜெட் பத்மநாபன் பெரும் வெற்றியைப் பெற்றது.

தமிழ் திரையுலகில் நடிகைகள் பொதுவாக அழகு பதுமைகளாக வந்துவிட்டு ஹீரோவுடன் கனவு காட்சிகளில் பாட்டுபாடி நடனம் ஆடிவிட்டு, முடிந்தபோதெல்லாம், முடிந்த விதமாகவெல்லாம் கவரச்சி காட்டிவிட்டு போய் கொண்டு இருந்ததுதான் சமீப காலமாக நடந்து கொண்டிருந்தது.

இந்த ஆண்டு சில நடிகைகள் நடிக்கவும் முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். சிம்ரன் பார்த்தேன் ரசித்தேன் படத்திலும், ரசிகர்களின் லேட்டஸ்ட்அட்ராக்ஷன் ஜோதிகா குஷி படத்திலும், மீனா வானத்தை போல படத்திலும் நடித்து தங்கள் இடத்தை காப்பாற்றிக் கொண்டனர்.

ரம்பாவுக்கு வந்த இரண்டு படங்கள் தோல்வியடைந்து அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளன.

வெற்றி பெற்ற இயக்குனர்கள் என்று பார்த்தால் பட்டியல் திருப்திகரமாகவே இருக்கிறது.

தொடர்ந்து வெற்றி படமாகவே கொடுத்துவரும் ஷங்கர் இந்த ஆண்டு முதல்வன் என்ற வெற்றி படத்தை கொடுத்தார்.

இவரைப் போலவே நல்ல படங்க ள கொடுப்பார் என்ற நம்பிக்கையை அளித்த விக்கிரமன் வானத்தை போல வெற்றி படத்தை ரசிகர்களுக்குஅளித்தார்.

மணிரத்னம் அலைபாயுதே மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார்.

சேது என்ற வெற்றிப்படம் மூலம் பாலா என்ற புது இயக்குனர் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்

தன் முதல் படமான வாலி மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா, குஷி என்ற வெற்றி படத்தை அளித்தார்.

வல்லரசு வெற்றி படத்தை இயக்கயவர் மகாராஜன்.

பாரதி படத்தை இயக்கிய ஞான ஞானசேகரன் வெற்றி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.

இசையமைப்பாளர் வரிசையில் தொடர்ந்து ஏ.ஆர் .ரஹ்மானே முன்னிலையில் இருக்கிறார். அவர் இசையமைத்த முதல்வன், ரிதம், கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன், அலை பாயுதே படங்களின் கேசட்டுகள் விற்பனையில் முன்னிலை வகித்தன.

தேவா இசையமைத்த குஷி படத்தின் கேசட்டுகளும், எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்தவானத்தைபோல பாடல் கேசட்டுகளின் விற்பனையும்அதிகமாக இருந்தன,

இளையராஜாவின் இசையில் வந்த பாரதி படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் கேசட்டுகளின்விற்பனையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருந்தது.

மாதவன், அலைபாயுதே படம் மூலம் வெற்றி பட நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஷாயா ஜி ஷின்டே என்ற மராத்தி நடிகர் பாரதியாக நடித்து புகழ் பெற்றார்.

10 வருடங்களுக்கு முன் தமிழில் அறிமுகமான விக்ரம், நீண்ட காலமாக வெற்றிபடமும் இல்லாமல் வாயப்பும் இல்லாமல் இருந்து வந்தார். இவர் நடித்தசேது என்ற படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இவர் இந்த படத்தில் தன் நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருந்தார்.

கேரள மண்ணிலிருந்து திவ்யா உன்னி, அபிராமிஎன்ற இரு புது நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர். பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நடித்த பின் லைலாவின்மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

அஜீத் - ஷாலினி ஜோடிக்கு இந்த ஆண்டுதான் திருமணம் ஆனது. குஷ்பூ- சுந்தர் திருமணமும் இந்த ஆண்டுதான் நடந்தது. குஷ்பூ திருமணம் ஆன 7-வது மாதம்குழந்தைக்கும் தாயானார்.

2000 ஆண்டில் மொத்தம் 86 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின. நல்ல பல தமிழ்ப் படங்களைக் கொடுத்த தமிழ்த் திரையுலகம், 2001-வது ஆண்டில் மேலும்பல முத்திரைகளைப் பதிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: tamil cinema tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil