twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துணி இல்லாமல் இருந்த வடிவேலுவிற்கு விஜயகாந்த் செய்த நற்செயல்... மீசை இராஜேந்திரன் வருத்தம்

    |

    சென்னை: சமீபத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதியான சுதந்திர நாளன்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முன் தோன்றினார்.

    அதுமட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதிதான் அவருக்கு 70-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    தற்சமயம் நடிகர் மீசை இராஜேந்திரன் அவர்கள் விஜயகாந்த்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே முன்னதாக நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    டிசம்பரில் துவங்கும் தளபதி 67.. படத்தில் இணையும் புதிய கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்கலாமா! டிசம்பரில் துவங்கும் தளபதி 67.. படத்தில் இணையும் புதிய கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்கலாமா!

    கேப்டன் 70

    கேப்டன் 70

    ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடந்த கேப்டனின் 70-வது பிறந்தநாள் விழாவில் அவர் இல்லாமல் அவரது உறவினர்கள் மற்றும் அவரது திரை உலக அபிமானிகள் சிலர் கலந்து கொண்டார்கள். நடிகர்கள் ராதாரவி, ரோபோ சங்கர் , ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த்ராஜ், தயாரிப்பாளர் சிவா, பத்திரிக்கையாளர் சவுக்கு ஷங்கர், நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட சிலர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

    நன்றி கெட்டவர்கள்

    நன்றி கெட்டவர்கள்

    நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது அதனை கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடனை அடைத்து ஒரு கோடி ரூபாய் லாபத்தை கொண்டு வந்தவர் விஜயகாந்த். ஆனால் இன்று அவருக்கு எழுபதாவது பிறந்தநாள் பாராட்டு விழா நடத்த எந்த நடிகர்களும் முன் வரவில்லை. நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்துள்ளார். அதேபோல நடிகை வடிவுக்கரசி பேசும்போது உணவு மற்றும் தர்மம் நிறைய செய்துள்ள அண்ணன் விஜயகாந்த் மீண்டு வரவில்லை என்றால் தர்மம் தலைகாக்கும் என்பதற்கு அர்த்தமே இருக்காது. அவருக்கு நல்லது நடக்கவில்லை என்றால் அடுத்ததாக யாரும் தர்மம் செய்ய முன்வர மாட்டார்கள் என்று நெகிழ்வாக கூறியுள்ளார்.

    சின்ன கவுண்டர்

    சின்ன கவுண்டர்

    சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்த போது அதில் ஏற்கனவே கவுண்டமணி செந்தில் ஆகிய இரு முன்னணி நகைச்சுவை நடிகர்கள் ஒப்பந்தமாகியிருந்தனர். வடிவேலு நடிப்பது தெரிந்தவுடன் கவுண்டமணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் விஜயகாந்த் தலையிட்டு நம்ம ஊர்க்கார பையன் பொழைச்சிட்டு போகட்டும், நடிக்க வராவிட்டாலும் என்னுடன் துணைக்கு குடை பிடித்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரட்டும் என்று சமயோசிதமாக வடிவேலுவை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார்.

    மீசை இராஜேந்திரன்

    மீசை இராஜேந்திரன்

    பிற்காலத்தில் அதே வடிவேலு போட்டிக்காகவே விஜயகாந்த் வசிக்கும் தெருவில் வீடு வாங்கி விஜயகாந்த் வீட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு வந்தவர்களின் கார் அந்தத் தெருவில் நின்றபோது பிரச்சனையை எழுப்பி அவருடன் சண்டை போட்டார் வடிவேலு. பிரச்சனை அதிகமாகி பத்திரிக்கை, பொதுமக்கள் என்று வந்தவுடன் தனிப்பட்ட முறையில் இராஜேந்திரனிடம் விஜயகாந்த் இவ்வாறு கூறினாராம், நான் செய்ததை சொல்லிக் காட்டக் கூடாது இருந்தாலும் சூழ்நிலை காரணமாக சொல்லுகிறேன். சின்ன கவுண்டர் படத்தின் போது வடிவேலுவிற்கு உடுத்த உடை கூட இல்லை. நான்தான் அவனுக்கு 8 வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தேன். ஆனால் இப்படி செய்கிறான் என்று வருத்தப்பட்டாராம்.

    English summary
    Vijayakanth's good deed for Vadivelu who was without clothes, regrets Meesai Rajendran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X