For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நூறாவது நாள் ஷூட்டிங்கின் போது மோகனுக்காக அமைதியாக காத்திருப்பாராம் விஜயகாந்த்

  |

  சென்னை: தமிழக மக்களுக்கு மணிவண்ணன் அவர்களை முதலில் நடிகராகத்தான் தெரியும்.

  அவர் பிரபலமடைந்த பின்னர்தான் அவர் ஏற்கனவே அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் முன்னணி இயக்குநர் என்பது பலருக்கும் தெரியவந்தது.

  அவருடைய கேரியரில் முக்கியமான மற்றொரு திரைப்படமாக கருதப்படுவது நூறாவது நாள். அதில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

  ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்: பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் சொன்ன மாஸ் சீக்ரெட்ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்: பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் சொன்ன மாஸ் சீக்ரெட்

  நூறாவது நாள்

  நூறாவது நாள்

  நடிகர்கள் மோகன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நூறாவது நாள் திரைப்படத்தை வெறும் 18 நாட்களில் படமாக்கியவர் இயக்குநர் மணிவண்ணன். அவர் இயக்கியிருந்த முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை வெற்றி பெற்றவுடன் பல தயாரிப்பாளர்கள் படம் செய்து கொடுக்க அவரை அணுகினர். அப்படித்தான் நூறாவது நாள் திரைப்படமும் உருவானது. தமிழ் சினிமாவில் வந்த திரில்லர் படங்கள் என்று டாப் 10 பட்டியலிட்டால் அதில் 100-வது நாள் திரைப்படமும் கண்டிப்பாக இடம் பெறும். நிஜ வாழ்க்கையில் ஆட்டோ சங்கர் போன்ற நபர்கள் செய்த கொலைகளின் சாயல் அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

  கலகலப்பான மணிவண்ணன்

  கலகலப்பான மணிவண்ணன்

  அன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டோரியின் படப்பிடிப்புத் தளம் எப்போதுமே பரபரப்பாக இருக்குமாம். இயக்குநருக்கு பயந்து அனைவரும் பதட்டமாகவே வேலை செய்வார்களாம். ஆனால் மணிவண்ணனின் படப்பிடிப்பு தளம் கலகலப்பாகவே இருக்கும். அதனால்தான் பிற்காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவரால் நடிக்க முடிந்தது என கூறப்படுகிறது. ஷூட்டிங் நடக்கும் அன்று காலை திடீரென்று ஒரு நடிகரோ நடிகையோ தான் வருவதற்கு லேட் ஆகும் என்று கூறினால் கூட டென்ஷனாக மாட்டாராம். அதற்கு ஏற்றார் போல வேறு காட்சிகளை உடனே படம் பிடிப்பதில் வல்லவர். பொதுவாக மணிவண்ணன் ஒரு படத்தினுடைய ஸ்கிரிப்ட்டை பவுண்டாக வைத்துக் கொள்ள மாட்டார். ஸ்பாட்டிற்கு சென்றதும்தான் காட்சிகளையே எழுதுவார் என்று பலரும் கூறுவார்கள்.

  ஒரே ஆண்டில் ஆறு படங்கள்

  ஒரே ஆண்டில் ஆறு படங்கள்

  அவர் திரைப்படங்கள் இயக்க ஆரம்பித்த இரண்டாவது ஆண்டான 1984 ஆண்டில் மட்டும் ஆறு திரைப்படங்களை இயக்கினார். நூறாவது நாள் மட்டுமின்றி மிகச்சிறந்த திரில்லர் படமாக கருதப்படும் 24 மணி நேரம் திரைப்படமும் அதே ஆண்டுதான் அவரால் இயக்கப்பட்டது. அந்த ஆறு படங்களில் மோகன் மூன்று படங்களிலும் சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் இரண்டு படங்களிலும் நடித்திருப்பார்கள்.

  காத்திருந்த விஜயகாந்த்

  காத்திருந்த விஜயகாந்த்

  அதில் ஆன்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மோகன். அப்போது மோகனின் கேரியர் உச்சத்தில் இருந்த காலகட்டம். விஜயகாந்த் அப்போதுதான் வளரும் நடிகராக இருந்தாராம். ஷூட்டிங்கின்போது பெரும்பாலும் மோகனுடைய காட்சிகள்தான் முதலில் படமாக்கப்படுமாம். அதுவரை பொறுமையாக காத்திருக்கும் விஜயகாந்த் தனக்கு ஷாட் இருக்கிறதா என்று பொறுமையாக துணை இயக்குநர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வாராம். மோகனின் காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட பின்னரே விஜயகாந்தின் காட்சிகள் படமாக்கப்படுமாம்.

  English summary
  People of Tamil Nadu know Manivannan first as an actor. It was only after his popularity that many people came to know that he is a leading director who has already directed several films including Amaidhi Padai. Another important film in his career is Nooravathu Naal Shooting. In this article we will see about the interesting events that took place during th shooting of this movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X