twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜயகாந்த்... இடையில் நடந்தது தெரியுமா?

    |

    சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் சேர்ந்து நடித்த படங்களும் உண்டு.

    Recommended Video

    உங்களுக்கு சினிமாத்துறைல ஆசை இருந்தா இதான் என்னோட Advice |Thalaivasal Vijay Chat-04 |Filmibeat Tamil

    கமல்-ரஜினி, கமல்-விஜயகாந்த், ரஜினி-பிரபு, கமல்-பிரபு என்று பல முன்னணி நாடிகர்கள் இரண்டு ஹீரோ படங்களில் நடித்துள்ளனர். சில சமயம் கதாநாயகன் வில்லன் என்று கூட இரண்டு நடிகர்கள் நடித்ததுண்டு. கமல்-ரஜினி, கமல்-சத்யராஜ், என்று ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் இரு நடிகர்கள் நடித்ததுண்டு.

    அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடிக்கவிருந்த கதையை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

     ரேபிடோ வாடகை பைக் ஓட்டும் அவார்டு வின்னிங் இயக்குநர்..வறுமையின் அவலம்..ட்ரெண்டாகும் ஹேஷ் டாக் ரேபிடோ வாடகை பைக் ஓட்டும் அவார்டு வின்னிங் இயக்குநர்..வறுமையின் அவலம்..ட்ரெண்டாகும் ஹேஷ் டாக்

    ரஜினிகாந்தின் புரட்சி

    ரஜினிகாந்தின் புரட்சி

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில் வில்லனாகத்தான் நடித்தார். பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவுடன் பல விமர்சனங்கள் இருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு முன்பு எந்த ஒரு கதாநாயகனும்ம கருப்பாக இருந்ததில்லை. திராவிட நிறத்திலிருந்த ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது ஒரு புரட்சியாகவே பிற்காலத்தில் பார்க்கப்பட்டது. அவர் வெற்றியடைந்தவுடன் கருப்பாக இருந்த பலருக்கும் கதாநாயகர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. அதில் முதன்மையானவர் தான் நடிகர் விஜயகாந்த்.

    விஜயகாந்த் எண்ட்ரி

    விஜயகாந்த் எண்ட்ரி

    விஜயகாந்த் நடிக்க வந்த புதிதிலும் பல விமர்சனங்கள் எழுந்தது. ஏற்கனவே ஒரு ஆள் நடித்துக் கொண்டிருக்கிறார் அதேபோல இன்னொரு நடிகரும் வேண்டுமா என்று பலராலும் நிராகரிக்கப்பட்டார். அதன் காரணமாகவே ஹீரோவாகி விட வேண்டும் என்ற வெறி விஜயகாந்துக்குள் அதிகமாகிக் கொண்டே போனதாம். கதாநாயகன் வாய்ப்பும் கிடைத்தது சில படங்களில் நடித்து விட்டார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.

    வில்லன் வாய்ப்பு

    வில்லன் வாய்ப்பு

    அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஏ.வி.எம் தயாரிப்பில் ரஜினிகாந்த் முரட்டுக்காளை என்கிற படத்தில் ஒப்பந்தமானார். அதில் அவருக்கு சரிசமமாக வில்லனாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்ட நிலையில் விஜயகாந்தை தேர்வு செய்தனர். அவரும் பண நெருக்கடி காரணமாக வில்லனாக நடிக்க சம்மதித்து ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பேசி அதில் 25 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பிவிட்டாராம். இந்த விஷயத்தை தனது நண்பர் ராவுத்தரிடம் கூறியபோது அவர் விஜயகாந்தை திட்டி விட்டு உன்னை நான் பெரிய ஹீரோவாக ஆக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ இது போல் காரியத்தில் எனக்கு தெரியாமல் ஈடுபடுகிறாய் என்று அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டாராம்.

    ராவுத்தரின் நம்பிக்கை

    ராவுத்தரின் நம்பிக்கை

    அதனை ஏ.வி.எம் நிறுவனத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டாராம் ராவுத்தர். விஜயகாந்த் அவர்களே தான் வில்லனாக நடிக்கலாம் என்று தன் மீது நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் ராவுத்தர் விடாப்பிடியாக விஜயகாந்த் மீது நம்பிக்கை வைத்து பிற்காலத்தில் அவரை ரஜினி கமலுக்கு அடுத்தபடியான நிலையில் கதாநாயகன் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijayakanth was Suppose to be the villain for Rajinikanth in a movie... Do you know what happened in between?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X