நல்லா கட்டிப்பிடிங்கன்னு சொன்னா விஜயகாந்த் தள்ளி விட்ருவாரு... நடிகை நளினி கூறிய சுவாரஸ்ய தகவல்

சென்னை: தமிழ் சினிமா துறையில் கமல், ரஜினி முதல் கொன்டு அனைவராலும் மதிக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். காரணம் நடிகர் சங்கத்திற்காக அவர் செய்த மெனக்கெடல்கள்.

கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்போது நடிகர்களின் வீட்டிற்குச் சென்று தரையில் அமர்ந்து உரிமையோடு அவர்களை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பாராம். அவரின் செயலைக் கண்டு முன்னணி நடிகர்களும் தங்களது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்களாம்.

அவர் அவ்வளவும் செய்தது தனக்காக அல்ல. நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காக. அதனால்தான் வடிவேலு இல்லாமல் படங்கள் கிடையாது என்ற சூழ்நிலை இருந்தும், விஜயகாந்திற்கு எதிராக அவர் பேசியதால் திரைத்துறையினரால் ஒதுக்கப்பட்டார்.

 விளையாட்டு குணம்

விளையாட்டு குணம்

உரிமை எடுத்து தாழ்மையுடன் வேண்டுகோள் வைப்பது போல, தன்னுடன் இருப்பவர்களிடம் உரிமை எடுத்து கண்டிக்கவும் செய்வாராம். கேமராவிற்கு பின்னால் அனைவரையும் வம்பிழுத்து ரகளையும் செய்வாராம். சக நடிகர்களுடன் போங்காட்டம் ஆடி சீட்டுக் கட்டு ஆட்டத்தில் ஜெயித்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுப்பது போன்ற விளையாட்டுத் தனத்திலும் ஈடுபடுவாராம்.

 விஜயகாந்தின் திட்டம்

விஜயகாந்தின் திட்டம்

அவர் செய்யும் குறும்புத்தனத்தை நடிகை நளினி சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார். நளினி ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது அம்மா அவருக்கு உணவுக் கட்டுப்பாடுகளை விதித்து டயட்டில் இருக்கச் செய்வாராம். விஜயகாந்திற்கு அவரது நண்பர் ராவுத்தர் கொண்டு வரும் வகை வகையான உணவை பார்த்து நளினி ஏங்கும் பொழுது,"நீ மேக்கப் ரூம்ல வெயிட் பண்ணி ராவுத்தர் கொண்டு வர்ற சாப்பாட சாப்டு. நா உன் அம்மாக்கிட்ட பேச்சு குடுத்து திசை திருப்பிடுறேன்" என்று விஜயகாந்த் கூறுவாராம்.

 குந்தாணி நளினி

குந்தாணி நளினி

அதே போல் ராவுத்தர் கொண்டு வரும் உணவை மேக்கப் ரூமிற்கு எடுத்துச் செல்கையில், நளினியின் அம்மா என்ன எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்க,"அது ஒன்னும் இல்லம்மா, எனக்குதான் எடுத்துட்டு போறாரு. உங்க பொண்ணுக்கு குடுப்பேனா? ஏற்கனவே சாப்ட்டு சாப்ட்டு குந்தாணி மாதிரி மாறிக்கிட்டு வரா" என்று விஜயகாந்த் அவர்களிடம் பேசி சமாளித்துவிட்டு நளினிக்கு பிடித்த உணவை உண்ண வைப்பார் என்று நளினி கூறியுள்ளார்.

 கட்டிப்பிடிக்கும்போது தள்ளி விடுவார்

கட்டிப்பிடிக்கும்போது தள்ளி விடுவார்

விஜயகாந்தும் நளினியும் கிட்டத்தட்ட 14 படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்களாம். அப்படி இருந்தும் விஜயகாந்தை அண்ணா என்றுதான் அழைப்பாராம் நளினி. அதனால் நடிக்கும்போது கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வந்தால்,"அண்ணா நல்லா கட்டிப்பிடிங்கண்ணா, கூச்சப்படாதீங்க" என்று தான் கூறும்போது,"கட்டிப்பிடிக்கும்போது அண்ணான்னு சொன்னா எப்படி நடிக்கிறது" என்று கூறிவிட்டு விஜயகாந்த் தன்னை தள்ளிவிடுவார் என்று நளினி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X