தேசிய விருது பெற்ற தமிழக நடிகர்-நடிகைகளுக்கு விஜயகாந்த் வாழ்த்து

By Shankar

Vijayakanth
சென்னை: தேசிய விருது பெற்ற தமிழக நடிகர்-நடிகைகளுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

58-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆடுகளம்' படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கும், சிறந்த நடிகைக்கான விருது தென்மேற்கு பருவக்கற்று' படத்தில் நடித்த நடிகை சரண்யாவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே'' என்ற பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா' படத்தில் நடித்த நடிகர் தம்பிராமையாவுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது 'நம்ம கிராமம்' படத்தில் நடித்த நடிகை சுகுமாரிக்கும் கிடைத்துள்ளது.

நடிகர்-நடிகைகளுக்கு வாழ்த்து

இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்த்திரையுலகத்திற்கு மேலும் மேலும் பல விருதுகள் கிடைத்திட இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X