ஸ்பெஷல்ஸ்
அன்புத் தொல்லை படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு குஜால் படத்துக்குத் தயாராகிவிட்டார் பாண்டியராஜன்.
முன்பெல்லாம் ரசிகா பின்னால் திரிந்த பாண்டியராஜன், பின்னர் சீமைப் பசு ரவளியை வைத்து சில படங்களில்கவர்ச்சி கலாட்டா நடத்தி வந்தார். இப்போது ராதிகா செளத்ரி, சங்கவி என்ற இரு கவர்ச்சி பாம்களை வைத்துக்கொண்டு ஒரு கிளுகிளு படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் பெயர் என்புருஷன்.. எதிர்வீட்டு பொண்ணு. டைட்டிலையே இவ்வளவு கிக் ஆக வைத்திருப்பதால்,படத்தில் குண்டக்க மண்டக்க கவர்ச்சி அலைபுரளுகிறதாம். கேட்டால் காமெடி படம் என்கிறார்கள்.
இதில் சங்கவியும் ராதிகா செளத்ரியும் பால்காரிகளாக வருகிறார்கள். பால்காரி வேடத்தில் கவர்ச்சி காட்டுவதில்இருவருக்கும் கடும் போட்டா போட்டியே நடந்து வருவதால், காட்சிக்குக் காட்சி கவர்ச்சிதானாம்.
படத்தில் கண்டாங்கி சேலையை ஒப்புக்கு உடம்பில் சுற்றிக் கொண்டு ராதிகா காட்டும் கவர்ச்சி அச்சமூட்டுகிறதாம்.விடுவாரா சங்கவி, போட்டிக்கு அவரும் புகுந்து விளையாடி வருகிறாராம்.
(ஏற்கனவே இந்த இருவருக்கும் இடையே இரண்டு பேர் படத்தில் கவர்ச்சி போரே நடந்தது. படம்முடிந்துவிட்டாலும் வாங்க ஆள் இல்லாததால் பெட்டியில் தூங்க ஆரம்பித்துள்ளது வேறு கதை.)
ராதிகா செளத்ரி, சங்கவி ஆகிய இருவரின் காதல் போட்டியில், பாண்டியராஜன் படும் பாடுகள்தான் படத்தின்கதையாம் (அட, கதைன்னா, இப்படின்னா இருக்கனும்?). இவர்கள் போதாது என்று அபிநயஸ்ரீயும் பிடித்துப்போட்டிருக்கிறார்களாம்.
இந்த மூன்று பேரின் குலுக்கலில் பாண்டியராஜன் என்னவாகிறார் என்பதை வெள்ளித் திரையில் காண்போம்.


Click it and Unblock the Notifications











