'சிலிர்க்க' வைத்த சீயான்!

By Staff


கந்தசாமியில் பெண் வேடமிட்டு ஜிலுஜிலுவென விக்ரம் காட்டும் கவர்ச்சியைப் பார்த்து நாயகி ஷ்ரியாவே அரண்டு போயுள்ளாராம்.

Click here for more images

வித்தியாச கெட்டப்களில் நடித்துக் கலக்கி வரும் விக்ரம், ஐந்து விதமான வேடங்களில் நடித்து வரும் படம் கந்தசாமி. அதில் ஒன்று பெண் வேடம்.

பெண் வேடத்தில் விக்ரம் சொக்க வைத்து வருகிறாராம். கூட நடிக்கும் ஷ்ரியாவே பார்த்து பயந்து போகும் அளவுக்கு கிளாமரும் காட்டி கிளுகிளுக்க வைத்துள்ளாராம் விக்ரம்.

கலைப்புலி தாணுவின் பிரமாண்டத் தயாரிப்பில் உருவாகும் கந்தசாமி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

பெண் வேடமிட்டு வெளுத்துக் கட்டி வரும் விக்ரம், கிளாமரையும் கலந்து கட்டி யூனிட்டாரை வாய் பிளக்க வைத்துள்ளார். அதிலும் நாயகி ஷ்ரியாவுக்கே விக்ரமின் கவர்ச்சி கிடுகிடுக்க வைத்துள்ளதாம்.

ஷ்ரியாவை விட சீயானின் கிளாமர் சிலுசிலுப்பாக இருப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷ்ரியாவைப் பார்த்து ஜொள்ளு விட்டவர்கள் கூட இப்ேபாது விக்ரமைப் பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனராம்.

விட்டால், விக்ரம் ஸ்கோர் பண்ணி விடுவாரோ என்று அரண்டு போன ஷ்ரியா, எனக்கும் கவர்ச்சி கூட்டிக் கொடுங்க என்று இயக்குநர் சுசி.கணேசனிடம் சொல்லும் அளவுக்கு சீயானின் கிளாமர் அசத்தலாக உள்ளதாம்.

ஷ்ரியாவைப் பற்றிய ஒரு கொசுறுச் செய்தி. கல்யாணம் செய்து கொண்டால் நிச்சயம் சினிமாக்காரர் ஒருவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறுகிறாராம் ஷ்ரியா.

கவர்ச்சியில் மட்டுமல்ல பேச்சிலும் கூட வெளிப்படையாக இருக்கிறார் ஷ்ரியா.

More from Filmibeat

Read more about: kandaswamy shriya vikram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X